தினகரன் தனிக்கட்சி?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் தனிக்கட்சி?

Added : நவ 24, 2017 | கருத்துகள் (86)
Advertisement
டி.டி.வி தினகரன், TTV Dinakaran, இரட்டை இலை, irattai ilai, அ.தி.மு.க., AIADMK,தேர்தல் கமிஷன் , Election Commission, ஆர்.கே.நகர் தேர்தல், RK Nagar Election, தொப்பி சின்னம், Cap symbol,

சென்னை: இரட்டை இலை சின்னம் பறிபோன பின்பு தினகரன் புதிதாக தனிக்கட்சி துவங்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

அ.தி.மு.க.,விற்கும், தினகரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அவர் நீதிமன்றத்திற்கு சென்றாலும், கட்சியையோ, சின்னத்தையோ பெறுவது சிரமம். அ.தி.மு.க., என்ற பெயரையே, அவர் பயன்படுத்த முடியாது என்பதால், அவர் அரசியலில் நீடிக்க, புதிதாக கட்சி துவங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அவ்வாறு கட்சி துவக்கினால், அதை, தேர்தல் கமிஷனில், பதிவு செய்ய வேண்டும். அதன் பின்பே, தனி சின்னத்தை பெற முடியும்.

தற்போதுள்ள நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலில், அவர் சுயேச்சை வேட்பாளராகவே களம் காண முடியும். கடந்த முறை கிடைத்த தொப்பி சின்னத்தை, மீண்டும் பெறுவதிலும், தினகரனுக்கு சிக்கல் ஏற்படும்.

தினகரன் புதிய கட்சி துவக்கமா?

ஆர்.கே.நகர் மக்கள் கூறுகையில், 'காசுக்கு ஓட்டு வாங்கி விடலாம் எனக் கணக்கு போடுபவர்களை, நாங்கள் தொகுதிக்குள்ளேயே நுழைய விட மாட்டோம்' என்றனர்.

வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.f.edison - chennai,இந்தியா
07-டிச-201718:44:54 IST Report Abuse
s.f.edison அப்பா மக்களுக்கு ஒரு பிரச்னை தீர்த்தது . தொப்பிக்கு ஒட்டு போடுறேன்னு காசு வாங்கியாச்சு இப்போ தொப்பி இல்லை ஆகா சத்தியம் மீறப்படவில்லை. மக்கள் சுதந்திரமாக செயல் படலம்.
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
30-நவ-201721:50:31 IST Report Abuse
Rafi ஏற்கனவே இடைத்தேர்தலில் அவர் பயன்படுத்திய பெயரிலேயே அதே சின்னத்தை பெற்று களம் காணலாம். அவர் பெரும் வாக்கை கொண்டு அரசியலில் தனக்கென்று இடம் பெற முயல வேண்டும். அப்போது பொது தேர்தலில் ஒட்டிய கட்சியில் உள்ளவர்கள் இணைய வாய்ப்பாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா
30-நவ-201711:44:13 IST Report Abuse
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar தினகரன் புதிய கட்சி ஆரம்பித்து, தன வாயால் சொல்லும் புளுகு மூட்டைகளை கொஞ்சநாளைக்கு மூடி வைத்துவிட்டு தன்னிடம் இருக்கும் நபர்களையும், சிலீப்பர் செல் என்று சொல்லும் நபர்களையும் (அவ்வாறு இருந்தால்) , அவ்வாறு யாராவது இருந்து அவருக்குப்பின்னால் வருவார்கள் என்றால், அவர்களையும் கூட்டிக்கொண்டு புதிய கட்சியில் வெள்ளோட்டம் பார்த்துக்கொண்டு - அரசியல் பயிற்சிகளையும் பெற்றுக்கொண்டு தமிழக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற ஆசையிருந்தால், (அவர் முக்கியம் தேவையென்று அங்கு எந்த மனிதனும் நினைக்கவில்லை, இருந்தாலும்,) காலத்தில் நின்று ஜெயித்து ஆட்சிக்கட்டிலில் ஏறி சிம்மாசனம் கொண்டால், தியாகச்செல்வி சின்னம்மா ஒருவேளை, சிறையில் இருந்து உயிருடன் வந்தால் கடைசிக்காலத்துக்கு குப்பைக்கொட்டிக்கொண்டு இருந்து மேலோகம் போக வசதியாக இருக்கும். அரசியலில் எதையும் ஆணித்தரமாகச் சொல்லமுடியாது இல்லையா? போகட்டும் பார்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X