எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 235 ஆக உயர்வு

Updated : நவ 25, 2017 | Added : நவ 24, 2017 | கருத்துகள் (75)
Advertisement
எகிப்து, மசூதி, பயங்கரவாதி, தாக்குதல், பலி எண்ணிக்கை, 235,  உயர்வு

கெய்ரோ: எகிப்தில் மசூதி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 235 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

எகிப்து, வடக்கு சினாய் மாகாணத்தின் முக்கிய நகரான எல் அரீசின் மேற்கு பகுதியில் உள்ள அல் ரவ்டாக் என்ற பிரசித்தி பெற்ற மசூதி உள்ளது. இன்று(நவ.,24) வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது துப்பாக்கியுடன் புகுந்த மர்மநபர் சரமாரியாக சுட்டான். அந்த மசூதி மீது பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதலும் நடந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 235 பேர் உடல் சிதறி பலியாகினர். 100-க்குமு் மேற்பட்டேர் காயமடைந்தனர்.
எகிப்து வரலாற்றில் இதுவரை நடந்த பயங்கரவாத தாக்குதலில் இது தான் மிகப்பெரிய தாக்குதல் என அந்நாட்டு டி.வி.சானல்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

மசூதியில் தாக்குதல்: 200 பேர் பலி

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது


அதிபர் அவசர ஆலோசனை

தாக்குதல் சம்பவத்தையடுத்து அந்நாட்டு அதிபர் அப்துல் பதா அல் சிசி, உயரதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மூன்றுநாள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளதாவும், விமான நிலையங்கள், மக்கள் கூடும் வழிபாட்டு தலைங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரதமர் மோடி கண்டனம்

எகிப்து சினாய் தீபகற்பத்தில் பயங்கரவாதிகள் மசூதி மீது நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா அனைத்து விதமான பயங்கரவாதத்திற்கு எதிரான போரட்டத்தை ஆதரிக்கிறது.மேலும் எகிப்து மக்களோடும் , அரசோடும் இந்தியா துணை நிற்கின்றது என தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி கண்டனம்:

எகிப்து சினாய் தீபகற்பத்தில் பயங்கரவாதிகள் மசூதி மீது நடத்திய தாக்குதலுக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் கண்டனம் தெரிவித்துள்ளார், அதில் எகிப்து மக்கள்,அரசக்கு இந்திய அரசு ஆரதவு அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abubacker - tirunelveli,இந்தியா
25-நவ-201712:01:45 IST Report Abuse
Abubacker இஸ்லாம் மார்க்கம் ஒருபோதும் தீவிரவாதிகளை ஆதரிக்கவில்லை, மாறாக தீவிரவாதிகளுக்கு இஸ்லாம் என்ன சொல்கிறது தெரியுமா, தீவிரவாதிகள் எப்படி ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை துப்பாக்கி மூலம் சுட்டார்களோ அதே முறைகள் பின்பற்றி அவர்களை கொல்ல வேண்டும், இதுதான் இஸ்லாமிய சட்டம். இந்த சட்டத்தை நடைமுறை படுத்த எந்த நாடு முன்வரும்? தீவிரவாதிகளை ஒழிக இதுதான் ஆயுதம். உலக நாடுகள் நடைமுறை படுத்துமா? மனிதநேயம் பாதுகாக்கப்படுமா?
Rate this:
Share this comment
ramtest - Bangalore,இந்தியா
25-நவ-201716:27:51 IST Report Abuse
ramtestமொதல்ல காபிர்கள் என்னும் கான்செப்டை குரான்ல இருந்து தூக்கணும்னு குரல் கொடுப்பீர்களா ?......
Rate this:
Share this comment
Cancel
GK Samy - Dubai,இந்தியா
25-நவ-201711:32:05 IST Report Abuse
GK Samy இறைவா உயிர் நீத்த அனைவரின் ஆன்மா அமைதி பெறட்டும். மத வெறி பிடித்த இந்த மனித மிருகங்களிடமிருந்து அனைவரையும் காப்பாற்று. அது மட்டுமில்லாமல் நண்பர் தங்கை ராஜா, ஜெய் ஹிந்துபுரம் போன்ற நண்பர்களுக்கும் நல்ல சிந்தனையை வர வை இறைவா.
Rate this:
Share this comment
Cancel
anvar - paramakudi,இந்தியா
25-நவ-201711:29:40 IST Report Abuse
anvar ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லிமை கொல்லமாட்டான் கொலைக்கு தண்டனை நரகம் தான் என்பது இறைவனின் கட்டளை..அதுவும் தொழுகையில் ஈடுபடும் போது பயங்கரவாதிகள் இந்த செயலில் ஈடுபட்டது மிகவும் வேதனை அளிக்கிறது. விரைவில் விசாரணை நடத்தி அந்த பயங்கரவாதிகளை அளிக்க அந்த நாட்டு அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X