அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இடைத்தேர்தலை புறக்கணிக்க பா.ஜ., முடிவு?

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்க, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், டிச., 21ல் நடைபெறவுள்ளது.

  பா.ஜ.,BJP,  ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்,RK Nagar By-election,  இரட்டை இலை,irattai ilai, தினகரன், Dinakaran,அ.தி.மு.க.,  AIADMK,இடைத்தேர்தல், by-election, சட்டசபை பொதுத் தேர்தல், Assembly general election, தி.மு.க., DMK,

'இரட்டை இலையை மீட்டாலும், மக்கள் ஆதரவு இல்லை' என்ற தினகரனின் பிரசாரத்தை பொய்யாக்க, ஆளும், அ.தி.மு.க., முனைப்பாக உள்ளது. அதே நேரத்தில், கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு, சின்னத்தையும் இழந்த தினகரன் தரப்புக்கு, கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இச்சூழலில்,

பா.ஜ.,வில், தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என்ற, குழப்பம் காணப்படுகிறது.

இது குறித்து, தமிழக பா.ஜ., வட்டாரம் கூறியதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஆள் பலம் மற்றும் அதிகார பலம் உள்ள, அ.தி.மு.க.,வும், பண பலம் உடைய தினகரன் தரப்பும், தொண்டர் பலமிக்க, தி.மு.க.,வும், முழுவேகத்தில் களம் இறங்க உள்ளன. இவை, பண பலத்தில், எங்களால் நெருங்க முடியாதவை. முன்பு அறிவிக்கப்பட்ட தேர்தலில், தினகரன் தரப்பு, வாக்காளர்களுக்கு பணத்தை வாரி வழங்கியது; அதனால் தான் தேர்தல் ரத்தானது. அதற்கு, அப்போது அமைச்சர்கள் துணைநின்றனர்.

அதேபோன்ற பாணியை, இப்போதும் கடைபிடிக்கக் கூடும். அதனால், மாறுபட்ட சூழலில் நடக்கும், இந்த இடைத்தேர்தல், நியாயமாக நடக்குமா என, தெரியவில்லை. இத்தகைய சூழலில், கட்சிக்கு குறைந்த ஓட்டுகிடைத்தால், பா.ஜ., ஒரு கேலி

Advertisement

பொருள் போலாகி விடும்.அதனால், மாநிலத்தின் மற்ற பகுதிகளில், கடுமையாக உழைக்கும் தொண்டர்கள், உற்சாகம் இழப்பர். எனவே, கட்சியை பலப்படுத்தும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு, சட்டசபை பொதுத் தேர்தலை எதிர்கொள்வதே உகந்தது என்ற கருத்து நிலவுகிறது.இவ்வாறு பா.ஜ.,வட்டாரம் கூறியது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (113)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arivu - Salem,இந்தியா
28-நவ-201707:12:09 IST Report Abuse

Arivuஇது எதிர்பார்த்த ஒன்றுதான்.

Rate this:
karthick - bangalore,இந்தியா
25-நவ-201722:43:34 IST Report Abuse

karthickPachai Arabi adimaigalum , Sunday bone adimaigalum orae satham poduvathu theriuthu.. adimaigal first should leave India

Rate this:
muthu Rajendran - chennai,இந்தியா
25-நவ-201722:05:47 IST Report Abuse

muthu Rajendranகண்டிப்பாக பி ஜே பி நிற்கவேண்டும் ஏகப்பட்ட வாக்காளர்கள் என்ன செய்வது

Rate this:
மேலும் 110 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X