கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., கைரேகை பதிவு கேட்டு
சிறை அதிகாரிக்கு உத்தரவு

சென்னை: மறைந்த முதல்வர், ஜெயலலிதா வின் கைரேகை பதிவு இருந்தால், தாக்கல் செய்யும்படி, பெங்களூரு சிறை அதிகாரி மற்றும், 'ஆதார்' அட்டை வழங்கும் ஆணைய அதிகாரிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 ஜெ., கைரேகை, பதிவு, கேட்டு ,சிறை ,அதிகாரிக்கு ,உத்தரவு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர், போஸ் வெற்றி பெற்றார்.அதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., வேட்பாளர், டாக்டர் சரவணன் வழக்கு தொடுத்துள்ளார். இந்த

வழக்கில், வேட்பாளர் நியமனம் மற்றும் சின்னம் ஒதுக்கீடுக்கான படிவத்தில் இருந்த, ஜெயலலிதாவின் கைரேகை குறித்து, சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தது.

ஏனென்றால்,2016 நவம்பரில் தேர்தல் நடக்கும் போது, ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்த தேர்தல் வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன், விசாரணையில் உள்ளது. தேர்தல் அதிகாரி, ஜெ., கைரேகையை சான்றொப்ப மிட்ட, டாக்டர் பாலாஜி ஆகியோர், நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.

இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெங்களூரு சிறையில் ஜெயலலிதா இருந்தபோது, அவரிடம் கைரேகை பெறப்பட்டு இருந்தால், அதை தாக்கல் செய்யும்படி, பரப்பன அக்ரஹாரா சிறையின் கண்காணிப்பாளருக்கு, நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.அதேபோல், ஆதார் அட்டைக்காக, ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டிருந்தால், அதையும் தாக்கல்

Advertisement

செய்யும்படி, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின், மண்டல அதிகாரிக்கு, நீதிபதி
உத்தரவிட்டார். விசாரணையை, டிச., 8க்கு தள்ளிவைத்தார்.

சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதியாக இருந்த குன்ஹா, ௨௦௧௪ல் அளித்த தீர்ப்பின்படி, பரப்பன அக்ரஹாரா சிறையில், சில நாட்கள், ஜெயலலிதா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
25-நவ-201712:11:20 IST Report Abuse

Needhiyin Pakkam Nil ஆதார் அட்டை, சிறை பதிவு, வாக்காளர் படிவம், மூன்றுமே அம்மாவின் கைரேகை அது உண்மை தான், அவர் வாக்காளர் படிவத்தில் கைரேகை வைக்கும் போது உயிருடன் இருந்தாரா இல்லையா அது உயிரோட்டம் உள்ளவரின் கைரேகையா என்பதை கண்டுபிடிப்பது தான் முக்கியம். எனவே இந்த மூன்று கைரேகையையும் தடயவியல் துறைக்கு அனுப்பி அரசியல் தலையீடு இல்லாமல் நேர்மையுடன் சோதனை செய்தால் உண்மை வெளியில் வரும்.....................

Rate this:
25-நவ-201709:28:30 IST Report Abuse

ShaHameedமக்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் செயல் பட்டால் இறைவன் அவர்களுக்கு உறுதுணையாகயிருப்பான் இல்லையினில் அநாதைபிணமாகத்தான் சேருமிடம் இருக்கும்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-நவ-201709:02:33 IST Report Abuse

Srinivasan Kannaiyaஆனால் ஒரு சந்தோஷம் அந்த அம்மா இன்னும் கொஞ்சம் நாள் இருந்து இருந்தால் தமிழ் நாட்டில் இருக்கும் இன்னும் கொஞ்சம் நஞ்சம் பணத்தையும் மன்னார்குடி குடும்பத்திற்கு தாரை வார்த்து கொடுத்து இருக்கும்...

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X