ஹிந்துக்கள் 4 குழந்தைகள் பெற வேண்டும்! : ஹரித்வார் மடாதிபதி பேச்சால் சர்ச்சை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஹிந்துக்கள் 4 குழந்தைகள் பெற வேண்டும்! : ஹரித்வார் மடாதிபதி பேச்சால் சர்ச்சை

Added : நவ 26, 2017 | கருத்துகள் (205)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஹிந்துக்கள் 4 குழந்தைகள் பெற வேண்டும்! : ஹரித்வார் மடாதிபதி பேச்சால் சர்ச்சை

உடுப்பி, ''நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் வரை, ஹிந்துக்கள், குறைந்தது நான்கு குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும்,'' என, ஹரித்வார் பாரத் மாதா மந்திர் மடாதிபதி, சுவாமி கோவிந்ததேவ் தெரிவித்துள்ளார்.


ஒரே சிவில் சட்டம்

கர்நாடக மாநிலம் உடுப்பியில், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடந்த, 'தர்ம சன்சாத்' என்ற நிகழ்ச்சியில், உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள, பாரத் மாதா மந்திர் மடாதிபதி, சுவாமி கோவிந்ததேவ் கிரிஜி மகாராஜ் பேசியதாவது:நம் நாட்டின் பல பகுதிகளில் ஹிந்துக்களின் மக்கள் தொகை, வேகமாக குறைந்து வருகிறது. இதற்கு முன், ஹிந்துக்களின் மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளை எல்லாம், நாம் எதிரிகளிடம் இழந்துள்ளோம்; இனியும் அந்த நிலை தொடரக் கூடாது.

ஹிந்துக்கள் 4 குழந்தைகள் பெற வேண்டும்


நான்கு குழந்தைகள்

நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம், முழுமையாக அமலாகும்வரை, ஹிந்துக்கள் அனைவரும், குறைந்தது, நான்கு குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தம்பதிக்கு, இரண்டு குழந்தைகள் என்ற கொள்கை, நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் பொருந்த வேண்டும்; இதை, ஹிந்துக்கள் மீது மட்டும் திணிக்கக் கூடாது.


குற்ற செயல்கள்

பசு பாதுகாப்பு அமைப்பு, நல்ல விஷயங்களுக்காக செயல்படுகிறது. ஆனால், குற்றப் பின்னணி உடைய சிலர், இந்த அமைப்பின் பெயரை தவறாக பயன்படுத்தி, குற்றச் செயல்களை செய்கின்றனர். தங்கள் சொந்த பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள, பசு பாதுகாவலர்கள் என்ற பெயரை பயன்படுத்துகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (205)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaduvooraan - Chennai ,இந்தியா
02-டிச-201712:50:48 IST Report Abuse
Vaduvooraan விஷயம் ரொம்ப ரொம்ப சிம்பிள் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கிற இடத்துல மத்தவங்களுக்கு பிரச்சினை கெடயாது. காரணம் சக ஹிந்துக்கள் கிட்ட காட்டாத அன்பையும் சகிப்புத்தன்மையும் மத்த மதத்துக்காரங்க கிட்ட வாரி வாரி வழங்குவாங்க. ஆனா முஸ்லீம்கள் ...தப்பு தப்பு இஸ்லாமிய பெருமக்கள் ஒரு மாதிரியா யோசிக்கிறவங்க...எங்க அவிங்க பெரும்பான்மையினரோ அங்க சிறுபான்மையினருக்கு இடமே கிடையாது...ஆனால் எங்க அவிங்க சிறுபான்மையோ அங்க ஜனநாயகம் சிறுபான்மையினர் உரிமை, சகிப்புத்தன்மையின் அவசியம் இதெல்லாம் பத்தி பேசுவாங்க இப்ப கூட பாருங்க அவிங்க மதத்தை சேர்ந்த பெண்ணையோ பையனையோ கலயாணம் பண்ணிக்கிட்டா வேற்று மதத்துல இருந்து வந்து கலியாணம் கட்டுற ஆளுதான் முஸ்லிமா கன்வெர்ட் ஆகணும். அது சரி ஏங்க..எல்லா மதமும் சமமதம்னா ஏன் கன்வெர்ட் பண்ணறாங்க?
Rate this:
Share this comment
Cancel
Adhithyan - chennai,இந்தியா
01-டிச-201712:05:37 IST Report Abuse
Adhithyan மொகலாயர்கள் ஆட்சி காலத்தில் 40 ஆண்டுகள் காலம் அதாவது 1311AD 1351 AD வரை சுல்தான்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. பல்லாயிரக் கனான இந்துக்கள் கில்ஜி இன் தளபதி மாலிக் காபூர் என்ற ராணுவ தளபதியின் தாக்குதல்களால் கொல்லப்பட்டார்கள் எண்ணற்ற கோவில்கள் அழிக்கப்பட்டன. அப்போது ஆந்திரம் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் இருந்தவர்களை அடிமைகளாக டெல்லிக்கு கூட்டி சென்றனர். அது மட்டும் இல்லாமல் அவர்களின் 40 ஆண்டுகள் ஆட்சியில் கட்டாய மத மாற்றம் செய்தனர். அப்போது திருவரங்க உற்சவ மூர்த்தியை கிகில்ஜிக்கு அன்பளிப்பாக கொடுக்க எடுத்து சென்றனற்னர். ஆனால் கடுமையான முயற்சிக்கு பிறகு அது மீட்கப்பட்டு திருப்பதிக்கு கொண்டுபோக பட்டது. கிகில்ஜின் அரண் மனையில் இருந்த ஒரு இளவரசி அதை தேடி வந்து திருவங்கத்தில் அது கிடைக்காமல் அங்கேயே உயிர் நீத்தாள். அவளின் நினைவாக இன்னும் திருவங்கத்தில் "துலுக்க நாச்சியார் சன்னதி" உள்ளது ரங்கநாதர் சந்நதிக்கு மிக அருகில். மதம் ஜாதி என்ற தடைகளை கடந்து நாம் எல்லோரும் இந்த உலகின் பிள்ளைகள் என்ற எண்ணத்தில் அமைதியாக வாழ கற்றுகொள்ள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
PERIYASAMYMANIMARANVK MANIMARANVK - keeranur,இந்தியா
30-நவ-201705:31:26 IST Report Abuse
PERIYASAMYMANIMARANVK MANIMARANVK ஏய் புடுங்கி தெரியும்டா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X