திரைப்படத்துறைக்குஇது பெரிய சவால்!

Added : நவ 29, 2017 | கருத்துகள் (1)
Advertisement

தமிழகத்தில் உள்ள பிரச்னைகளில் கந்துவட்டிக் கொடுமை, பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சிறிய, எளிய குடும்பங்கள், விவசாயிகள், இக்கொடுமையால் தற்கொலை முடிவை எடுப்பது ஒரு புறம் இருக்க, இப்போது திரைப்படத்துறை இந்தத் தொழிலில் அதிகமாக சிக்கியிருப்பது, வெளிப்படையாகி உள்ளது.அதிக கவர்ச்சி, அதிக விளம்பரம், அதிக லாபம், அதிக அளவு மக்கள் ஈர்ப்பு என, பல கோணங்களுடன், தமிழக அரசியலில் முடிவு காணும் சக்தியாக இத்துறை இருந்திருக்கிறது. அதனால், சினிமா தயாரிப்பாளர், அசோக்குமார் தற்கொலை பெரிதாக அலசப்படும் விஷயம். விவசாயிகள் கந்து வட்டியில் சிக்கினால், அவர்கள் சொத்து பறிபோகும். ஏழை மக்கள் என்றால், அவர்கள் சேமித்த சேமிப்பு, வீடு, நகை, போன்றவை பறிபோகும். அதில் வாழும் பெண்கள் மானம் பறிபோனாலும், யாரும் அதைத் தட்டிக் கேட்பதில்லை என்ற புகார் தொடர்கதையாகும்.

தமிழகத்தில் கந்துவட்டிக் கொடுமையை தடுக்க, சட்டம், நீண்ட காலமாக இருந்த போதும், இப்போது குறையாக மாறி, சமூகத்தின் மாண்பைக் குறைக்கும் தீய சக்தி என, புலனாகிவிட்டது.
மக்கள் தொகை மிகவும் குறைந்து, அதிக வளர்ச்சி மற்றும் நவீன சாதனங்கள் இல்லாத காலத்தில் எழுந்த அறநுாலில், 'தாளாளன் என்பவன் கடன்படான்' என்ற வாசகம் உள்ளது. 'ஊக்கமுடையவர்கள்' தாளாளன் என்றும், அக்கடனை அடைப்பதுடன், அத்தொகையில் இருந்து அதிக முதலீடு செய்து வளர்ச்சிக்கு வழிகளைக் காண்பர் என, கூறப்பட்டிருக்கிறது.
ஆகவே, வட்டி வசூலில் செல்வ மிதப்பு ஏற்பட்டு, அதனால் அதிக முரண்பாடுகள் கொண்டிருப்பவர்களை சமுதாயமும் ஏற்கவில்லை. அந்தச் சூழ்நிலை வேறு. இப்போது, பெரிய நடிகர்கள் மற்றும் அரசியலில் முதல்வராக ஆசைப்படும் நடிகர்கள் உட்பட பலரும், அன்புச் செழியனிடம் பணம் வாங்கியுள்ளனர். உலக வங்கி அமைப்பு போல இவரும், 4 முதல், 5 சதவீத வட்டி வசூலிப்பதை வழக்கமாக கொண்டிருப்பதுடன், கோடிகளை எளிதாக தந்திருக்கிறார்.
ஆகவே, ஏதாவது ஒரு படம், பிரமாண்ட வசூலை அள்ளும் போது, இவரிடம் பெற்ற கடன். கொசுறு போல தோன்றிய மாயையில், பலர் தங்களது ஆஸ்தியை இழந்திருக்கின்றனர். பல விஷயங்களை தனக்கே உரிய கருத்தாக்கத்துடன் பேசும் நடிகர் பார்த்திபன், இவரது வட்டத்தில் சிக்கி மீண்டிருக்கிறார். இப்போது அன்புச் செழியன், வெளிநாட்டிற்கு தப்புவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், அவர் பிடிபட்டபின் வெளியாகும் தகவல்களில், இவரிடம், 'கடன்பட்ட பிரமுகர்கள்' குறித்த பட்டியல் வெளியாகலாம். அவரை ஆதரிப்பவர்கள் குறித்த தகவலும் வெளிவரலாம். ஆனால், இணைத் தயாரிப்பாளர், அசோக்குமாரின் பரிதாப மரணம், எப்படி இம்மாதிரி பெரிய 'தாதா'க்களை தமிழகம் உருவாக்கி இருக்கிறது என்பதைப் பேச வைத்திருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், திருமாவளவன், இவ்விஷயத்தில், 'ஆளும் அரசியல்வாதிகள், காவல் துறை ஆகியோர் இணக்கமாக இம்மாதிரி கந்துவட்டி வழங்குபவர்களை கண்டு கொள்ளாமல், இணைந்த கருத்துடன் இருந்ததாகக் கூறி, அதைத் தடுத்தாக வேண்டும்' என்கிறார். இக்கருத்தை அமைச்சர்களோ அல்லது வங்கிக் கடனை வாங்கி திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் பலரை ஆதரிக்கும் சில அரசியல் தலைவர்களோ ஏற்கின்றனரா என்பது தேவையற்றது. பொதுவாக, 10 கோடி ரூபாய்க்கு மேல் ஆவணங்கள் சீராக இன்றி வாங்கும் கடன்களை வசூலிக்க, இவர் கையாண்ட அணுகுமுறையை இனி அறிந்து என்ன பயன்? அதையும் தவிர, சட்டங்களை அரசு இயற்றினாலும், அதை அமல்படுத்தும் வகையில், அதற்கேற்ற மற்ற குற்றவியல் நடைமுறைகள் மற்றும் சுற்றுச் சூழல், தமிழகத்தில் இல்லை என்பது தெளிவாகி உள்ளது. ஏற்கனவே திரையரங்குகள் கட்டணம் குறித்த சர்ச்சை வந்த போது பேசப்பட்ட தகவல்கள், அதிக பட்ஜெட் படங்களில் நடிகர், நடிகையருக்கு அபரிமித சம்பளம், உட்பட பல விஷயங்களை திரைப்படத்துறை விவாதித்தது. தேர்வு பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் போன்ற அமைப்பு இருப்பதால், அவர்கள் இப்பிரச்னையை, உரிய கிரிமினல் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து, அத்துறையினரை பாதுகாக்க வேண்டும். மும்பை பட உலகத்தை தாவூத் இப்ராகிம் இயக்கியது, பல்வேறு பரிமாணங்களில் வெளிவந்தது.
அதே போல தமிழகத்திலும், இம்மாதிரி பணபரிவர்த்தனையும், அதனால் அபாயங்களும் எழுகிறது என்றால், அதை முன்னுரிமை திட்டமாக கருதி, இதற்கான முடிவு காணாவிட்டால் எளிதில் விடிவு வராது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
30-நவ-201720:25:27 IST Report Abuse
Sambasivam Chinnakkannu கந்துவட்டி ,,,கந்துவட்டி கொடுப்பவர்கள் கூவிகூவி ,,,,வந்து கடன் வாங்குங்கள் ,,,நான் கடன் தருகிறேன் ,,,என கூப்பாடு போடுவதில்லை ,,,,,, அதிகஆசை ,,அல்லது ஆடம்பரத்திற்கு என கடன் வாங்குவோர் அதிகம் ,,, அவசரத்திற்கு கடன் வாங்குவோருக்கு கந்துவட்டி காரர்கள் நல்லவர்களாக தெரிகிறார்கள் ,,,யாருக்கு தெரியாது ,,,இந்த விஷயம் ,,,சும்மா எல்லோரும் பிரச்சினையை கடமைக்கு என்று பேசாமல் ,,பிரச்சினையை தீர்க்க சுமுக முடிவை எட்டவேண்டும் ,,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X