பொது செய்தி

தமிழ்நாடு

அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட கோரிக்கை

Added : நவ 29, 2017
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தற்போது குறிப்பிடத்தக்க வகையில், தண்ணீர் உள்ள அணைகளில் இருந்து, பாசனத்துக்கு தண்ணீர் திறந்த விட வேண்டும் என, தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாணியாறு, சின்னாறு, தொப்பையாறு, நாகாவதி, கேசர்குழி, வரட்டாறு, தும்பலஹள்ளி அணை மற்றும் ஈச்சம்பாடி அணைக்கட்டு மூலம், 85 ஆயிரத்து, 405 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இரண்டு ஆண்டுகளாக இப்பகுதியில் பருவமழை பெய்யாததால், அணைகளுக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் போனது. இந்நிலையில், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை சராசரி அளவை விட கூடுதலாக பெய்ததால், 50 அடி உயரம் கொண்ட சின்னாறு அணையில் தற்போது, 45.13 அடி தண்ணீர் உள்ளது. 65.27 அடி உயரம் உள்ள வாணியாற்றில், 48.05 அடி, 25.20 அடி உயரம் கொண்ட கேசர்குழி அணையில், 21,65 அடி, 17.35 அடி உயரம் கொண்ட ஈச்சம்பாடி அணைக்கட்டு முழு கொள்ளவும், 34.45 அடி உயரம் உள்ள வரட்டாறு அணையில், 17.38 அடி, 50 அடி உயரம் கொண்ட தொப்பையாறு அணையில், 23.11 அடி, 24.60 அடி உயரம் கொண்ட நாகாவதி அணையில், 18.69 அடி தண்ணீர் உள்ளது.

இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி கூறியதாவது: தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால், இங்குள்ள ஈச்சம்பாடி, சின்னாறு, வாணியாறு, கேசர்குழி, நாகாவதி உள்ளிட்ட அணைகளில் போதிய தண்ணீர் உள்ளது. ஆனால், வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் உள்ளதால், இந்த அணைகளில் இருந்து, பாசனத்துக்கு, தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இதன் மூலம் கடந்த, இரண்டு ஆண்டுகளாக வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயன் பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X