‛பரூக் அப்துல்லா கன்னத்தில் அறையணும்': பா.ஜ., பிரமுகர்| Dinamalar

‛பரூக் அப்துல்லா கன்னத்தில் அறையணும்': பா.ஜ., பிரமுகர்

Updated : நவ 30, 2017 | Added : நவ 30, 2017 | கருத்துகள் (74)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பரூக் அப்துல்லா,Farooq Abdullah,  ஹரியானா, Haryana,பா.ஜ செய்தித் தொடர்பாளர் சூரஜ் பால் அமு, BJP spokesman Suraj Paul Amu,நடிகை தீபிகா படுகோனே ,actress Deepika Padukone,  காஷ்மீர், Kashmir,லால் சவுக், Lal Chowk,  தேசியக் கொடி ,National Flag, மத்திய அரசு, Central Government,

சண்டிகார்: ‛பரூக் அப்துல்லா கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும் என்பதே தனது கனவு' என பா.ஜ., பிரமுகர் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா, பா.ஜ., தலைமை செய்தித் தொடர்பாளரான சூரஜ் பால் அமு, நடிகை தீபிகா படுகோனே தலைக்கு, 10 கோடி ரூபாய் பரிசு அளிப்பதாக மிரட்டல் விடுத்திருந்தார். இதற்காக, சூரஜ் பாலுக்கு, ஹரியானா, பா.ஜ., மேலிடம், 'நோட்டீஸ்' அனுப்பியது. இதனையடுத்து, கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக, சூரஜ் பால், நேற்று அறிவித்தார். இந்நிலையில் மீண்டும் அவர் சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சூரஜ் பால் அமு தெரிவித்ததாவது: காஷ்மீரின், லால் சவுக்கில் தேசியக் கொடி ஏற்ற, மத்திய அரசுக்கு தைரியம் உள்ளதா? என, தேசிய மாநாட்டு கட்சி தலைவர், பரூக் அப்துல்லா கேட்டுள்ளார். எனக்கு, இப்போதைக்கு ஒரே ஒரு கனவு தான் உள்ளது. லால் சவுக்கில் வைத்து, பரூக் அப்துல்லா கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும் என்ற கனவு தான், அது. எனக் கூறினார்.

கன்னத்தில் அறையணும்

முன்னதாக ‛பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்திய தேசிய கொடியை ஏற்றுவதாக கூறும் மத்திய அரசு, ஸ்ரீநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள லால் சவுக் மைதானத்தில் முதலில் அதை செய்து காட்ட வேண்டும்,' என பேசி, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர், பரூக் அப்துல்லா சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
30-நவ-201720:00:31 IST Report Abuse
ரத்தினம் ஒரு ரவுடி தேச துரோகிய விட எவ்வளவோ பரவாயில்ல, நல்ல பதிவு. ..தாய் திருநாட்டுக்கு எதிராக பேசியதை வர வேற்க வேண்டுமா? இல்லை கொண்டாட வேண்டுமா? இங்கே பொங்குபவர்கள் பாரூக்கை கண்டித்து பதிவு ஏன் செய்யவில்லை?
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
30-நவ-201719:29:02 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இதுபோல சில இலக்குவனா தன்னை நெனெச்சுண்டு முதுகை ஒடிப்பேன் கன்னத்துல அறைவேன் என்று திரிவதால் தான் பிஜேபி பேர கெடுத்து தொலைக்குறானுக வாய மூடிண்டு இருந்தால் போரும்
Rate this:
Share this comment
Cancel
balasubramanian - coimbatore,இந்தியா
30-நவ-201718:51:06 IST Report Abuse
balasubramanian பாக்கியோடு என்ன பேச்சு வேண்டியிருக்கிறது .சீனனை அனுசரித்துப் போனால் போதும் .பாக்கி எல்லையை நவீன மயமாக பலப்படுத்தி ஊடுருவும் தீவிரவாதிகளை கொன்று குவித்தாலே போதும் .காஷ்மீர் அமைதியாகி விடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X