உ.பி., உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ., அமோக வெற்றி

Added : டிச 01, 2017 | கருத்துகள் (79)
Advertisement
உ.பி.,UP,  உள்ளாட்சி தேர்தல், Local Elections,பா.ஜ.,  BJP, காங்கிரஸ்,Congress,  மேயர், Mayor, யோகி ஆதித்யநாத், Yogi Adityanath,
பிரதமர் மோடி, Prime Minister Modi,நகராட்சி, Municipalities,பகுஜன் சமாஜ்,  Bahujan Samaj, மாநகராட்சிகள், Corporation,

லக்னோ: உ.பி.,யில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 16 மாநகராட்சிகளில் 14ல் பா.ஜ.,வும், 2ல் பகுஜன் சமாஜ் கட்சியும் வெற்றி பெற்றன. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் ஒரு மேயர் பதவியை கூட பெற முடியவில்லை

உ.பி., மாநிலத்தில் கடந்த நவ., 22, 24 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மொத்தம் 16 மாநகராட்சிகள், 198 நகராட்சிகள், 438 பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன.


மாநகராட்சி:

அதில் பா.ஜ., 14 மாநகராட்சிகளை கைப்பற்றியது. வாரணாசி, கோரக்பூர், காசியாபாத், பரேலி, ஆக்ரா, பிரோசாபாத், அயோத்தியா, மதுரா, லக்னோ, கான்பூர், ஷகாரான்பூர், ஜான்சி, மற்றும் மொராதாபாத் மாநகராட்சிகளை கைப்பற்றியது. பகுஜன் சமாஜ் கட்சி, அலிகார்க் மற்றும் மீரட் மாநகராட்சிகளை கைப்பற்றியது.


நகராட்சி:

பிஜேபி-66
சமாஜ்வாடி-28
பகுஜன் சமாஜ்-40
காங்கிரஸ்-02
சுயேச்சை-04


நகர பஞ்சாயத்து

பிஜேபி-278
சமாஜ்வாடி-53
பகுஜன் சமாஜ்-85
காங்கிரஸ்-16
சுயேச்சை-94

மதுரா மாநகராட்சியில் 56வது வார்டில் வாக்க எண்ணிக்கையின் போது, பா.ஜ. மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் 874 வாக்குகளுடன் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து வெற்றியாளர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார். இதில் பா.ஜ.,வுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அந்த வார்டில் பா.ஜ.,வின் மீரா அகர்வால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தொகுதியான அமேதி நகராட்சியை பா.ஜ., கைப்பற்றியது.


வாழ்த்து

உ.பி.,யில் பா.ஜ., வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத், பா.ஜ.,வுக்கு ஒட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மோடியின் கொள்கைகள் மற்றும் மக்களுக்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endless - Chennai,இந்தியா
02-டிச-201709:11:55 IST Report Abuse
Endless இங்கு கூறப்பட்டிருக்கும் பலரது கருத்துக்கள் அவர்களது இயலாமையையும், காழ்புணர்ச்சியையும், வன்மத்தையும் காட்டுகிறது, .... இப்பொழுது துவங்கி இருக்கும் யுத்தம், பிஜேபி / ஆர்எஸ்எஸ்ஆல் துவங்க பெற்றது இல்லை... எம் போன்ற சாதாரண பாரத பிரஜைகளால் துவங்கப்பெற்றது... எம் பாரத சமூகம் கொடுத்திருக்கும் இந்த "களையெடுக்கும்" பணியை இந்த அரசு செய்யுமே ஆனால், இவர்கள் ஆட்சி தொடரும்.. இல்லையேல் எம் பாரத சமூகம், வேறு நம்பகத்தகுந்த நபருக்கு "களையெடுக்கும்" இப்பணியை வழங்கும்... இது எம் பாரத பிரஜைகளின் தீர்ப்பு... வெகு விரைவில் எம் பாரத சமூகத்தால், விலை போன கூத்தாடிகள் கூட்டம் "புறக்கணிக்கப்பட்டு" களையெடுக்கப்படும்.......விலைபோன இவர்கள் வெட்கி தலைகுனியும் காலம் வெகு தொலைவில் இல்லை.... வாழும் எங்கள் பாரதம்... வளரும் எங்கள் பாரத பாரம்பர்யம்......
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
02-டிச-201703:22:44 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி சின்ன எலெக்சன்ல இர்ந்து சின்ன பெரிய்ய எலெக்சன் எல்லத்துலயும் ஜெசி போடாம தோதுபோட்டுறுத்தங்கலம்மா. கட்சீ வரியும் கேண்டிடேட் ஐ சர்யவே செலக்ட் பண்ணமாட்டீங்கிறங்கலமா. இவங்ளுக்கு ஜெசி போட்டு ரூவா எடுக்காம, எலெக்சன்ல நிக்குறதுக்கு கொடுத்த ரூவாவே செல்வு பண்ணாம அப்டியே வச்சிக்குவாங்கலாமா. நிறையா பணம் கெடச்சிக்குமாமா.
Rate this:
Share this comment
Cancel
Akbar Muhthar - Madurai,இந்தியா
02-டிச-201702:28:06 IST Report Abuse
Akbar Muhthar Some researchers of the concept of TIME state that world history runs in twelve year cycles. Based on that, I also have a theory that Modi and BJP will mostly keep winning till 2026 and then mostly lose for the next twelve years.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X