அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தினகரனுக்கு 70 லட்சம் ரூபாய் சொத்து தானாம்!

சென்னை: தினகரன் மற்றும் அவரது மனைவி, மகள் பெயரில், 11 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருப்பதாக, வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிடிவி தினகரன், TTV Dinakaran,  சொத்து,Property,  அ.தி.மு.க., AIADMK,சுயேச்சை ,Independent, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்,RK Nagar by Election,  விவசாயம்,  Agriculture, பென்ஷன், Pension, அமலாக்கத் துறை, Enforcement Department,இரட்டை இலை , irattai ilai, மதுசூதனன், Madhusudhanan, மருதுகணேஷ் ,maruthu ganesh, தினகரன்,Dinakaran,

அ.தி.மு.க.,விலிருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன், சுயேச்சை வேட்பாளராக, சென்னை, ஆர்.கே. நகரில் போட்டியிடுகிறார். அவர், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவில், அவரது குடும்பத்தினர் பெயரில், 11.15 கோடி ரூபாய் மதிப்புள்ள, சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தினகரன் பெயரில், 16.73 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, அசையும் சொத்து; 57.44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, அசையா சொத்து; அவரது மனைவி பெயரில், 6.87 கோடி ரூபாய் மதிப்புள்ள, அசையும் சொத்து; 2.40 கோடி ரூபாய் மதிப்பிற்கு, அசையா சொத்து; மகள் பெயரில், 1.17 கோடி ரூபாய்க்கு, அசையும் சொத்து உள்ளது.

தினகரனிடம், நகை எதுவும் இல்லை. அவர் மனைவியிடம், 1,048 கிராம் தங்க நகைகள், 37.17 கிராம் வைரம் உள்ளது. தினகரன் பெயரில், கார் எதுவும் இல்லை. அவரது மனைவி பெயரில், 'டாடா சபாரி' கார் மற்றும் ஜீப் உள்ளது. கடந்த முறை, ஆர்.கே.நகரில் மனு தாக்கல் செய்தபோது, தினகரன், தன் தொழில், விவசாயம் என, குறிப்பிட்டிருந்தார். தற்போது, 'பென்ஷன்' தொகையில் வாழ்வதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல், மனைவி பெயரில், 5.42 கோடி ரூபாய்; மகள் பெயரில்,12.22 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. அமலாக்கத் துறை வழக்கு; இரட்டை இலை சின்னத்தை பெற, லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு; மத்திய, மாநில அரசுக்கு எதிராக, துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்த வழக்கு நிலுவையில் உள்ளதாக, வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

தொப்பி அல்லது கிரிக்கெட் மட்டை: தினகரன் விருப்பம்


சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சையாக போட்டியிடும் தினகரன், மார்ச் மாதம், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, சசிகலா அணி சார்பில் போட்டியிட்டார். அப்போது அவருக்கு, 'தொப்பி' சின்னம் வழங்கப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு, தொப்பி வழங்கி, ஓட்டு சேகரித்தார்.இம்முறை சுயேச்சை வேட்பாளராக, தினகரன் களம் இறங்கும் அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

Advertisement

சுயேச்சை வேட்பாளர்கள், தாங்கள் விரும்பும் மூன்று சின்னங்களின் பெயர்களை, வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும். அதன்படி, தினகரன், தன் முதல் விருப்பமாக, தொப்பி சின்னத்தை கேட்டுள்ளார்.

அதற்கடுத்து, கிரிக்கெட் மட்டை, விசில் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார். அவருக்கு, தொப்பி சின்னம் கிடைக்காவிட்டால், கிரிக்கெட் மட்டை சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது.

மதுசூதனன் சொத்து மதிப்பு:


அ.தி.மு.க., வேட்பாளர், மதுசூதனன், தி.மு.க., வேட்பாளர், மருதுகணேஷ் ஆகியோரும், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மதுசூதனன், தன் பெயரில், 12.53 லட்சம் ரூபாய் அசையும் சொத்து, 1.49 கோடி ரூபாய் மதிப்புள்ள, அசையா சொத்து; அவரது மனைவி பெயரில், 39.21 லட்சம் ரூபாய் அசையும் சொத்து, 3.30 கோடி ரூபாய் அசையா சொத்து இருப்பதாக, வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். 10ம் வகுப்பு படித்து உள்ளார். தொழில், விவசாயம் என, தெரிவித்து உள்ளார்.

மருதுகணேஷ் சொத்து மதிப்பு:தி.மு.க., வேட்பாளர், மருதுகணேஷ், தன் பெயரில், 2.57 லட்சம் ரூபாய் அசையும் சொத்து, 10 லட்சம் ரூபாய் அசையா சொத்து, மனைவி பெயரில், 7.08 லட்சம் ரூபாய் அசையும் சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தொழில், வழக்கறிஞர் என, தெரிவித்துள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
03-டிச-201710:37:58 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>இவன் சொத்துவிவரமெல்லாம் தெரிஞ்சும் இவனை எவனையா நிக்கவச்சான் யாருக்காண்டா தேர்தல் அதிகாரிக்கு சம்திங் தள்ளிட்டான்போல மக்களே இவனுக்கெல்லாம் வோட்டுப்போட்டால் நீங்க நரகத்துக்கேபோயிதான் விழுவீங்க தமிழ்நாட்டைவிட நரகம் 100% பெட்டெர் என்றும் சொல்லுவீங்களா

Rate this:

ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) வேட்பாளர்களின் துணைவியார்களின் பேரில் உள்ள சொத்துக்களுக்கு சரியான முறையில் வரி செலுத்தப்பட்டு உள்ளதா?

Rate this:
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
02-டிச-201720:02:19 IST Report Abuse

Nakkal Nadhamuniஎல்லாமே சசி பேரில்தான் உள்ளதுபோல, இவரும் ஜெயா போல் ஒரு சூழ்நிலை கைதியோ???

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X