நான் என்றைக்குமே கதாநாயகன் தான் : நடிகர் ராம்கி| Dinamalar

நான் என்றைக்குமே கதாநாயகன் தான் : நடிகர் ராம்கி

Added : டிச 03, 2017
நான் என்றைக்குமே கதாநாயகன் தான் : நடிகர் ராம்கி

1980களில் நடிப்புலகில் தனக்கென முத்திரை பதித்து, இன்றும் திரையுலகில் தலைகாட்டி வரும் நாயகன் ராம்கி. 'வேட்டை நாய்' படப்பிடிப்புக்காக திண்டுக்கல் வந்திருந்த அவர், தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்த பேட்டி.
* எந்த சினிமா பின்னணியுமின்றி எப்படி சினிமாவிற்குள் வந்தீர்கள்?
சாத்துாரில் இருந்து வேலை தேடித்தான் சென்னைக்கு சென்றேன். அங்கு சினிமா வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். இணைந்த கைகள், செந்துாரப்பூவே படங்கள் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தன. ஈடுபாட்டுடன் நடித்ததால் பல இயக்குனர்கள் தேடி அழைத்தார்கள், அழைக்கிறார்கள்.
* கதாநாயகன் வாய்ப்பு தற்போது கிடைக்கவில்லையே?யார் சொன்னது? 'இங்கிலிஷ் படம்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளேன். இன்னும் பல படங்களில் கதாநாயகனாக நடிக்க உள்ளேன். கதாநாயகன் வேடம் கிடைக்காத படங்களில் முக்கிய கதா பாத்திரத்தில்தான் நடிப்பேன். சாதாரண வேடங்களில் நடிக்க மாட்டேன். 'அட்டி' என்ற படத்தை இயக்குனர் விஜய பாஸ்கர் இயக்கியுள்ளார். அதில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளேன். இதுவரை 90 படங்கள் நடித்துள்ளேன். தெலுங்கு படங்களில் அதிகளவு நடிக்கிறேன். * வேட்டை நாய் படத்தில் உங்கள் ரோல்?ஒரு சமுதாயத்தின் தலைவராக நடிக்கிறேன் * சினிமா... இன்று எப்படி?மக்களின் ரசனைக்கு ஏற்ப சினிமாவும் மாறுகிறது. அதற்கு தகுந்த மாதிரி நாங்கள் எங்கள் நடிப்பையும், கோணத்தையும் மாற்றி வருகிறோம். புது விஷயங்கள், யதார்த்தமான நடிப்புகளை நாங்கள் புகுத்தி வருகிறோம். * இளம் நடிகர்கள் சினிமாவில் ஜொலிப்பதில்லையே?தற்போது இளைஞர்கள் சினிமாத்துறையை படித்து விட்டு வருகிறார்கள். இதனால் நடிப்புத் திறன் உள்ளவர்கள் பலர் உள்ளனர். இவர்கள் ஒன்றிரண்டு படங்கள் ஓடினால் வாழ்க்கையில் ஜெயித்து விட்டதாக நினைக்கிறார்கள். கால ஓட்டத்திற்கு தகுந்த மாதிரி தங்களை தயார் படுத்திக் கொள்வதில்லை. நதியில் எதிர்த்து ஓடும் மீன்கள்தான் வாழும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
* நல்ல கதையுடன்கூடிய படங்கள் மக்களிடம் எடுபடுகிறதா?நகைச்சுவை உட்பட யதார்த்தமான நடிப்பு, ஜனரஞ்சகமான படங்களைத்தான் மக்கள் விரும்பி பார்க்கின்றனர். நல்ல கதையுள்ள படத்திற்கு என்றைக்குமே வரவேற்பு இருக்கும். * தமிழ் சினிமாவில் நவீன தொழில் நுட்பம்?தமிழ் சினிமாவில் நவீன தொழில் நுட்பங்களை இயக்குனர்கள் ஷங்கர், மணிரத்னம் புகுத்தியுள்ளனர். வெளிநாடுகளை விட நாம் அதிகளவு தொழில் நுட்பங்களை புகுத்தியுள்ளோம். பல வெளிநாட்டு நடிகர்கள் நமது ஸ்டண்ட் மாஸ்டர்களிடம் சண்டை பயிற்சி எடுத்துள்ளனர்.

* 'இளைஞனாக' உள்ள நீங்கள், இளைஞர்களுக்கு சொல்ல விரும்புவது...ஜல்லிக்கட்டில் ஒன்று சேர்ந்தார்கள். நாட்டின் மீது இளைஞர்களுக்கு அதிக அக்கறை உள்ளது. அதை அவ்வப்போது வெளிப்படுத்த வேண்டும்.தொடர்புக்கு: rkramesh1239@gmail.comWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X