திருப்பூரே 'ஆனந்தத்தின்' எல்லை ...வசூலுக்கு என்றுமே பஞ்சம் இல்லை!

Added : டிச 05, 2017
Advertisement
வீட்டு ஹாலில் ஹாயாக அமர்ந்து நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா. எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நிகழ்ச்சி, படங்கள் பிரசுரமாகி இருந்தன. அதைப்பார்த்த மித்ரா, ''என்னக்கா, நிகழ்ச்சிக்கு போயிருந்தீங்களா, எப்படி இருந்துச்சு,'' என, விசாரித்தாள்.''ஆமாப்பா... நானும் போயிருந்தேன். ஏற்பாடு நல்லா இருந்துச்சு. சபாநாயகர் தனபாலும், மக்களவை துணை தலைவர் தம்பிதுரையும்
 திருப்பூரே 'ஆனந்தத்தின்' எல்லை ...வசூலுக்கு என்றுமே பஞ்சம் இல்லை!

வீட்டு ஹாலில் ஹாயாக அமர்ந்து நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா. எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நிகழ்ச்சி, படங்கள் பிரசுரமாகி இருந்தன. அதைப்பார்த்த மித்ரா, ''என்னக்கா, நிகழ்ச்சிக்கு போயிருந்தீங்களா, எப்படி இருந்துச்சு,'' என, விசாரித்தாள்.''ஆமாப்பா... நானும் போயிருந்தேன். ஏற்பாடு நல்லா இருந்துச்சு. சபாநாயகர் தனபாலும், மக்களவை துணை தலைவர் தம்பிதுரையும் 'வறுத்தெடுத்து', நேரத்தை வீணடிச்சிட்டாங்க. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வீணாப்போயிடுச்சு. உருப்படியா பேசியிருந்தா கேட்டுருக்கலாம். அதுவும் இல்ல... அவிநாசி சட்டசபைத் தொகுதி கோவை மாவட்டத்துல இருக்குன்னு பேசுனதை கேட்டதும், நிகழ்ச்சிக்கு வந்திருந்தவங்க அதிர்ச்சியாயிட்டாங்க...''''அப்புறம்...''''முதல்வராவது நல்லா பேசுவாருன்னு எதிர்பார்த்தாங்க... விமானத்துக்கு நேரமாயிடுச்சுன்னு, உரையை கூட முழுசா முடிக்காம, அவசர அவசரமா கெளம்பிட்டாரு. அவரோ, 1977ல நடந்த மேற்கு தொகுதி இடைத்தேர்தல்ல எம்.ஜி.ஆர்., நின்னு ஜெயிச்சாருன்னு பேசுனாரு. மக்களை ஈர்க்குற மாதிரி ஒருத்தர் கூட பேசலப்பா...''''தி.மு.க., ஆட்சிக்காலத்துல நடந்த, செம்மொழி மாநாடு படங்கள வெளியிட்டதா, சொன்னாங்களே...''''ஆமாம்ப்பா... செய்தி - மக்கள் தொடர்பு துறையில, வேலை பார்க்குற ஒருத்தருக்கு, ஸ்பெஷல் 'அசைன்மென்ட்டே' கொடுத்திருக்காங்க. படம் கெடைக்கலைன்னு சொன்னதும், தாளிச்சிட்டாங்க. தெரிஞ்சவங்கள்ட்ட விசாரிச்சு, நாலைஞ்சு படங்கள வாங்கி, திரையில ஒளிபரப்புனாங்க...,''''சென்னையில இருந்தும், வெளியூர்ல இருந்தும் ஏகப்பட்ட பி.ஆர்.ஓ.,க்கள் வந்திருந்தாங்களாமே...''''சி.எம்., விழான்னாலே அதிகாரிகள் பலரும் வருவாங்க. இளைஞர் ரகுபதி இறந்தாருல்ல... அந்த விவகாரம் விஸ்வரூபமாகி கோர்ட்டு, கேசுன்னு ஆயிருச்சுல்ல... ஆளுங்கட்சி தரப்புல ஏகப்பட்ட அதிருப்தி... இந்த தடவை நெறைய்யா பேரு களமிறங்கிட்டாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு 'ஒர்க்' பிரிச்சுக் கொடுத்து, வேலை வாங்கியிருக்காங்க...''''சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருத்தருக்கும், 'வெயிட்'டா நினைவு பரிசு கொடுத்தாங்களாமே...''''நானும் கேள்விப்பட்டேன். பந்தல் நுழைவாயிலில் வரவேற்றபோது, அமைச்சர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு கொடுத்திருக்காங்க...''''ஓ.பி.எஸ்., வரலையே...'' என, இழுத்தாள் மித்ரா.''கன்னியாகுமரிக்கு போயிருக்காருன்னு சொல்லி, உள்விவகாரத்தை அமுக்கிட்டாங்க. நள்ளிரவுல பேச்சு நடத்தி, அவரோட முக்கியமான ஆதரவாளரை மேடைக்கு வரவழைச்சிட்டாங்க... '' என்றாள் சித்ரா.''குழாயடி சண்டை மாதிரி, ரெண்டு அதிகாரிங்க, சண்டை போட்டுக்கிட்டாங்களாமே...''''சென்னை கார்ப்பரேசன்ல பி.ஆர்.ஓ.,வா இருக்கற உமாபதி, நிகழ்ச்சிக்கு வந்திருந்தாரு. போலீஸ் துணை கமிஷனரா இருக்கற தர்மராஜன்ங்கிறவரு, அவர தடுத்து நிறுத்திட்டாரு...''''அப்புறம்... என்னாச்சு''''ரெண்டு பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, வார்த்தைகள கொட்டிட்டாங்க. சக அதிகாரிங்க வந்து, அழைச்சிட்டு போயிருக்காங்க,'' என்றாள் சித்ரா.குறுக்கிட்ட மித்ரா, ''எனக்கும் ஒரு போலீஸ் மேட்டர் தெரியும். சொல்லட்டா...,'' என, கேட்டாள்.''அதென்ன கேள்வி, சொல்லு...'' என, காது கொடுத்து கேட்டாள் சித்ரா.''துடியலுார்ல மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இருக்கு. பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஒருத்தரு, தன்னோட மனைவிய காணலைன்னு, புகார் கொடுத்திருக்காரு... எந்த நடவடிக்கையும் எடுக்கலை. ஒரு வாரத்துல மனைவி திரும்பி வந்துட்டாங்க. ஒடனே, ஸ்டேஷனுக்கு ஓடிப்போயி, வழக்கை வாபஸ் வாங்கிக்கறேன் சொல்லியிருக்காரு...''''நம்ம போலீஸ்காரங்க விட்டுருவாங்களா... மூவாயிரம் ரூபா கொடுத்தாதான், வழக்கை முடிப்போம்னு சொல்லியிருக்காங்க. டீக்கடைல வேலை பார்க்குற என்னால, அவ்ளோ பணம் தர முடியாதுங்கன்னு சொல்லியிருக்காரு. பணம் கொடுக்கலைன்னா, விட மாட்டோம். வேற கேசு பதிவு செஞ்சு, உள்ளே தள்ளிடுவோம்னு மிரட்டி இருக்காங்க...''''போலீஸ் தரப்புல 'டீலிங்' பேசுனதை, மொபைல் போன்ல 'ரிக்கார்டு' செஞ்சு, லஞ்ச ஒழிப்பு துறையில புகார் கொடுத்திட்டாரு, அவரு. இப்ப, துடியலுார் ஸ்டேஷன் அமைதியா இருக்கு...,'' என்றாள் மித்ரா.''இதெல்லாம் ரொம்ப ரொம்ப சாதாரணம்ப்பா... ஐ.ஜி., பேரை சொல்லியே, ஒரு இன்ஸ்., கரன்சி மழையில குளிச்சிருக்காரு...,'' என்றாள் சித்ரா.''அப்படியா... '' என, வாயை பிளந்தாள் மித்ரா.''ஆமாம்ப்பா... 'போஸ்டிங்' போடுறது; 'டிரான்ஸ்பர்' வாங்கிக் கொடுக்கறதுன்னு, கரன்சி பார்த்துருக்காரு. விஷயம் மேலிடத்துக்கு போனதும், ஆனந்தமான அந்த இன்ஸ்பெக்டரை துாக்கிட்டாங்க... ஆனா, அவரோ, வருமானம் மிக்க திருப்பூர் ஸ்பெஷல் பிராஞ்ச்சுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்காராம். அங்க அந்த போஸ்ட்ல, செந்தில் ஆண்டவன் பேர்ல இருக்கற இன்ஸ்பெக்டர் குமாரு, பல கோடி ரூபாயில, பங்களா கட்டிட்டு இருக்காராம்,'' என்றாள் சித்ரா.''வெளங்கிடும் போலீஸ் டிபார்ட்மென்ட்,'' என, நொந்து கொண்ட மித்ரா, ''பிளக்ஸ் போர்டு விவகாரத்துல சிக்குன அதிகாரிகளுக்கு 'டிரான்ஸ்பர் ஆர்டர்' வரும்னு பேசிக்கிறாங்க... '' என்று அடுத்த மேட்டருக்கு தாவினாள்.''ஆளுங்கட்சி விவகாரம்... அப்படித்தான் இருக்கும். மேம்பாலம் திறப்பு விழாவுக்கு கூட்டத்தை திரட்டலைன்னு ரெண்டு பேர வேற ஊருக்கு மாத்துனாங்க... அதுபோல, யாரையாவது பலி கிடாவாக்குவாங்க... '' என்ற சித்ரா, ''கல்வித்துறையில புகைச்சல் இருக்காமே,'' என கேட்டாள்.''அதுவா, ஒரு லேடி ெஹச்.எம்., மெட்ரிக் பள்ளி ஆய்வாளரா, கூடுதல் பொறுப்பா கவனிக்கிறாரு. இந்த பதவிக்கு தகுதியானவங்க இருந்தாலும், ஆறு மாசமா நியமிக்காம இருங்காங்க. லேடி அதிகாரிக்கு கல்வி அமைச்சரோட, குடும்பத்துக்காரங்க செஞ்ச சிபாரிசுதான் காரணமாம்,'' என்ற மித்ரா, ''கல்வித்துறையில இருக்கறவங்க, ஒழுங்கா வேலை பார்ப்பாங்களோ... இல்லையோ... வாஸ்து பார்த்துதான், இருக்கையில ஒக்காருறாங்க போலிருக்கு... கிழக்கையும், தெற்கையும் பார்த்து ஒக்கார்ந்தா, ராசியில்லைன்னு, மேற்கு, வடக்கு திசைய பார்த்து, டேபிள், சேரை மாத்தி போட்டிருக்காங்க...,'' என்றாள்.''கல்வித்துறை அதிகாரி, கறார் பேர்வழியாச்சே... அவரா இப்படி...'' என, சித்ரா கேட்க, ''அந்த அதிகாரி தன்னைத்தாண்டி எந்த ஒரு விஷயமும் நடக்கக் கூடாதுங்கிறதுல, ரொம்ப கவனமா இருக்காரு. வெளியாட்கள் யாராச்சும் ஊழியர்கள்ட்ட ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தா... அவரோட கவனத்துக்கு கொண்டு போயிடுறாங்க...'' என்றாள் மித்ரா.''போக்குவரத்து கழக அதிகாரிங்க, மாட்டிக்கிட்டாங்களாமே... '' என, கொக்கியை போட்டாள் சித்ரா.''ஆமாக்கா... எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவுல, அரசு துறை அரங்கு அமைச்சிருந்தாங்க. பொதுமக்களை ஈர்க்குற வகையில இருக்கணும்னு உத்தரவு போட்டிருந்தாங்க. ஆர்வக்கோளாறுல, 'டிரைவிங் ஸ்கூல்'காரங்கள்ட்ட சொல்லி, 'மெட்ரோ ரயில்' திட்டத்தை பத்தி, மாதிரி வடிவமைப்பு செஞ்சு வஞ்சிருந்தாங்க...,''''அடடே... ரொம்ப சந்தோஷமான விஷயமாச்சே... ''''சந்தோஷமான விஷயமா... அங்கதான் விவகாரமே இருக்கு... 'மெட்ரோ ரயில்'ன்னு சொன்னதும், வி.ஐ.பி.,க்கள் ஏகப்பட்ட கேள்வி கேட்டு துளைச்சு எடுத்துருக்காங்க. இல்லீங்க... இது மாடலுக்காக செஞ்சதுன்னு சொல்லி சமாளிச்சிருக்காங்க... இதுல கூத்து என்னான்னா... 'மெட்ரோ ரயில்' புராஜக்ட், இவங்களுக்கு வரவே வராது. நல்ல பேர் வாங்க ஆசைப்பட்டு, மாட்டிக்கிட்டாங்க...'' என்றாள் மித்ரா.
நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்த சித்ரா, அரசு மருத்துவமனை அவலங்களை பற்றிய செய்தியை படித்ததும், ''நம்மூரு ஆஸ்பத்திரியும் இப்படித்தாங்க இருக்கு. ஐ.சி.யு., வார்டு வரைக்கும் திருட்டுப் பசங்க வந்துட்டுப் போறாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, மருந்து மாத்திரை எல்லாம் காணாம போயிருக்கு... டூட்டியில இருக்கற நர்ஸ்ங்க கண்டுபிடிச்சு சொல்லியிருக்கு. மறுபடியும் அதே திருடன் உள்ளே நுழைஞ்சிருக்கான்... இத்தனைக்கும் மூணு பேர் பாதுகாப்பு பணியில ஈடுபடுறாங்க...'' என, நொந்து கொண்டாள்.''பாதுகாப்பு பணியில, தனியார் செக்யூரிட்டிக்காரங்க தானே ஈடுபட்டுக்கிட்டு இருக்காங்க... அவுங்கள கவனிக்கற விதமா கவனிச்சா... உண்மை வெளிச்சத்துக்கு வந்துறப் போகுது... '' என, 'அசால்ட்'டாக கூறினாள் மித்ரா.அதே நாளிதழின் இன்னொரு பக்கத்தில், சத்துணவு மையம் மூடிக்கெடக்குன்னு செய்தி வந்திருந்தது. அதைப்படித்த சித்ரா, ''அன்னுார் ஏரியாவுல அமைப்பாளர் வேலை வாங்கித் தர்றேன்னு, ரெண்டு லட்சம் ரூபாய் வரைக்கும், ஆளுங்கட்சிக்காரங்க வசூல் செஞ்சிருக்காங்க... இன்னைக்கு வரைக்கும் 'போஸ்டிங்' போட்டுக் கொடுக்கலை. பணத்தையும் திருப்பித் தரலை. வேலை கெடைக்குமான்னு, பணம் கொடுத்தவங்க காத்துக்கிட்டு இருக்காங்க. அடைமொழியோடு 'சாமி'களா வலம் வரும் கட்சிக்காரங்க ரெண்டு பேரும் ஜாலியா சுத்துறாங்க, என்றாள்.''கார்ப்பரேஷன் மேட்டர் எதுவுமே சொல்லலையே...'' என, நோண்டினாள் மித்ரா.''குப்பையா... இருக்கு... சொல்றதுக்கு என்ன இருக்கு...''''அதுலதான, கரன்சி பார்ப்பாங்க...'' என, விடாப்பிடியாக கேட்டாள் மித்ரா.''ஓ.... நீ அதைக்கேக்குறீயா... கமிஷனரா லதா இருந்தப்ப, குப்பை விவகாரத்துல ரெண்டு அதிகாரிகள, வெவ்வேறு ஊர்களுக்கு துாக்கியடிச்சாங்க. அந்த ரெண்டு பேருமே, கோயமுத்துாருக்கு திரும்பி வந்துட்டாங்க...''''சென்னையில இருக்கற அதிகாரிக்கும், இவங்களுக்கும் ரொம்ப நெருக்கம். அதை பயன்படுத்தி, அந்த பைலை மூடப்பார்க்குறாங்க. இதுக்காக, 'டைகர்' பிஸ்கட் சாப்பிடுறவரை, விசாரணை அதிகாரியா நியமிச்சு, 'குற்றச்சாட்டு தவறானது'ன்னு அறிக்கை கேட்டுக்கிட்டு இருக்காங்க,''''அவரோ நெளிஞ்சிக்கிட்டு இருக்காரு. மேலிடத்துல இருந்து ஏகப்பட்ட அழுத்தம் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. சமுதாயப் பற்றுல ஓரணியில இருக்கறதுனால... தப்பிச்சிடுவாங்க போலிருக்கு...'' என, அங்கலாய்த்த சித்ரா, 'டிவியை 'ஆன்' செய்தாள்.ஒரு சேனலில் ராமாயணம் தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது; லட்சுமணன், வசனம் பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு சேனலில், 'சரவணப் பொய்கையில் நீராடி...' என, பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X