"செட்டாப் பாக்ஸில்' "செட்டப்' செய்யும் அதிகாரிகள்...

Added : டிச 05, 2017
Advertisement
விடுமுறை என்பதால், வீட்டில் "டிவி' பார்த்து கொண்டிருந்தாள் மித்ரா. வெளியே மழை லேசான தூறல் போட, "சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைத்தேனே,' என்று பாட்டு பாடியவாறே, வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா. பெரிய "டவலை' கொடுத்த மித்ரா, ஆவி பறக்க லெமன் டீயும் கொடுத்தாள். அதை பருகியபடியே, ""ஏன் கேபிள் "டிவி' சரியா தெரியல,'' என்றாள் சித்ரா.""அதை ஏன் கேட்கற. இப்போ தான்
"செட்டாப் பாக்ஸில்' "செட்டப்' செய்யும் அதிகாரிகள்...

விடுமுறை என்பதால், வீட்டில் "டிவி' பார்த்து கொண்டிருந்தாள் மித்ரா. வெளியே மழை லேசான தூறல் போட, "சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைத்தேனே,' என்று பாட்டு பாடியவாறே, வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா. பெரிய "டவலை' கொடுத்த மித்ரா, ஆவி பறக்க லெமன் டீயும் கொடுத்தாள். அதை பருகியபடியே, ""ஏன் கேபிள் "டிவி' சரியா தெரியல,'' என்றாள் சித்ரா.""அதை ஏன் கேட்கற. இப்போ தான் "டிவி'க்கு செட்டாப் பாக்ஸ் வெச்சோம். அரசு கொடுக்கறது இப்படித்தான் இருக்கும்; நாங்க கொடுக்கறதை வாங்கினா, நல்லா இருக்கும்னு' எங்க ஏரியா ஆப்ரேட்டர் சொல்றாரு,' என்றாள் மித்ரா.""இது, கேபிள் ஆப்ரேட்டருங்க சிலரோட டெக்னிக். அரசு செட்டாப் பாக்ஸ் பொருத்தறதால, இவங்களுக்கு எந்த லாபமும் இல்லை. அதனால, மூன்றெழுத்து நிறுவனத்தோட, செட்டாப் பாக்ஸ் வாங்க ஒப்பந்தம் போட்டு, அதில், ஆயிரக்கணக்குல லாபம் பார்க்குறாங்க. இதை மார்க்கெட்டிங் செய்றதுக்காகவே, அரசு செட்டாப் பாக்ஸ் சரியில்லைன்னு, இவங்களாகவே கௌப்பி விட்டு, லாபம் பார்க்குறாங்க,'' என்றாள் சித்ரா.""எந்த நிறுவனத்தை ஒழிக்கணும்னு, அரசு கேபிள் நிறுவனத்தை, இந்த கவர்மென்ட் ஆரம்பிச்சுதோ, அதே நிறுவனத்தை மீண்டும் வாழ வைக்கணும்ங்கிற நோக்கத்தில் தான், சில ஆப்ரேட்டர்கள் நடந்துக்கறாங்க,'' என்றாள் மித்ரா.""செட்டாப் பாக்ஸ் விவகாரத்தில், ஆப்ரேட்டர்கள் பணத்தை அள்ளறாங்க. கேபிள் வாரிய அதிகாரிகளோ, கையைக்கட்டி வேடிக்கை பார்க்கறாங்க. சம்பளத்தை அரசாங்கத்திடம் வாங்கிட்டு, விசுவாசத்தை வேறிடத்தில் காட்றாங்க,'' என ஆவேசப்பட்டாள் சித்ரா.""விசுவாசமுன்னு சொன்னதும் ஞாபகம் வருது. அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் நடத்தற பிரபல பள்ளியில், ஆசிரியர்களை மதமாற்றம் செய்யற வேலை நடக்குதாமே,'' என்று புதிர்போட்டாள் மித்ரா.""ஆமா. இதுவரை மாணவர்கள் மத மாற்றம் என்ற நிலைமை மாறி, ஆசிரியர் அளவுக்கு போயிட்டிருக்காம். மொத்தம், 75 பேர் வேலை பார்க்கற ஸ்கூல்ல, 55 பேர் ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் இருக்காங்க. பள்ளி நிர்வாகி, இந்த ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி, தங்கள் மதம் சார்ந்த பிரார்த்தனையில் பங்கேற்க, மத ரீதியான பாடல்கள் பாடணும்னு உத்தரவிட்டிருக்காராம். இதனால, ஆசிரியர்களிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டிருக்கு,''""இதே ஸ்கூலில் தான், சில மாசத்துக்கு முன், பள்ளி நிர்வாகி - ஆசிரியர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு, உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. அப்போது ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பால அடங்கிப் போன நிர்வாகி, இப்போது திரும்பவும், ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாராம்,'' என்று சித்ரா விளக்கினாள்.""அரசாங்க சம்பளத்தை வாங்கிட்டு, இவங்க பண்ற அட்டகாசம் தாங்க முடியலை,'' என்று ஆதங்கப்பட்ட மித்ரா, ""பிரச்னைய தீர்க்கனும்னு அதிகாரிங்ககிட்ட சங்கு ஊதியம், கேட்க மாட்டேங்குது,'' என்று அடுத்த "டாபிக்கை' ஆரம்பித்தாள்.""எங்கே, என்ன பிரச்னை? கொஞ்சம் விளக்கமாக சொல்லேன்,'' என்று சித்ரா ஆர்வமானாள்.""உள்ளாட்சி தேர்தல் நடக்காததால், மக்கள் அதிகாரிங்களை தேடித்தேடி நடக்கறதே வேலையா போச்சு. பல்லடம் வட்டார கிராமங்களில், எந்த பிரச்னையை சொன்னாலும், அதிகாரிங்க காதுல, வாங்கிக்கிறதில்லையாம்,'' என்று மித்ரா கூறியதும், ""எல்லா பக்கமும், இந்த கூத்து நடந்துட்டுதான் இருக்கு?' பிரச்னை அதிகமா இருந்தா,மேல் அதிகாரிங்கிட்ட மனு கொடுக்கலாமே'' என்றாள் சித்ரா.""அய்யோ, நான் சொல்றதே மேல் அதிகாரிங்கள பத்திதான். மனு மட்டும் மறக்காம வாங்கிட்டு போறாங்க. ஆனா அதுக்கப்புறம் நமக்கு எதுக்குன்னு அந்த பக்கமே எட்டிப்பார்க்கறது இல்ல. அதனால் பல இடத்துல சாக்கடை, குப்பைன்னு பிரச்னை எக்கச்சக்கமா தேங்கி இருக்கு. எதுக்கெடுத்தாலும் மனு வாங்கறதே வேலையா வச்சுருக்காங்க. உள்ளாட்சி தேர்தல் வந்தாதான் இதுக்கு முடிவு வரும்னு மக்கள் காத்திருக்காங்க'', என்றாள் மித்ரா.""ஒருவழியா, திருப்பூர்லையும் அரசு பொருட்காட்சி ஆரம்பிச்சுட்டாங்க, பார்த்தியா?'' என்றாள் சித்ரா.""ஆமா, ஆமா! சிக்கண்ணா காலேஜ் கிரவுண்டில் நடந்திட்டிருக்கு. ஜெ., மற்றும் முதல்வர் போட்டோ மட்டும், நூற்றுக்கணக்கில் இருக்குது. துணை முதல்வர் படத்தை விரல் விட்டு எண்ணிடலாம்போல. ரெண்டோ, மூனோ இருக்குது. அதனால், துணை முதல்வர் கோஷ்டிக்காரங்க, புலம்பறாங்களாம்,'' என மித்ரா, அரசியல் பற்றி சுடச்சுட சொன்னாள்.""அது சரி, எந்த கவர்மென்ட்டா இருந்தாலும், அதிகாரிங்க அவ்வளவு சுதந்திரமாவா செயல்பட முடியும்? என்ன சொன்னாங்களோ அதைத்தானே செஞ்சிருப்பாங்க? சமீபத்துல நடந்த கூட்டத்துல வெடிச்ச மாதிரி, இதிலே÷யும் பூகம்பம் வெடிக்குமோனு, சிலர் பயத்தோட இருக்காங்க,'' என்று சித்ரா விளக்கினாள்.""கார்ப்ரேஷனில் இருக்கிற பி.ஆர்.ஓ., ஆபீசுக்கு மூடு விழா பண்றது உறுதியாயிடுச்சு போலிருக்கே,'' என்று கார்ப்ரேஷன் பற்றி ஆரம்பித்தாள் மித்ரா.""ஏன், இன்னும் பி.ஆர்.ஓ. போஸ்டிங் காலியாக இருக்கா?'' என்று கேள்வி எழுப்பினாள் சித்ரா.""ஆமா நாலு மாசமா பி.ஆர்.ஓ., இல்லை. அவரோட, கார் வெறுமனே நிறுத்தி வைச்சிருக்கிறதால, வேற எந்த மண்டலத்துக்காவது கொடுங்க. "ஆளே இல்லாத கடையில, டீ ஆத்தற மாதிரி, கார் மட்டும் எதுக்கு நிக்குது,'ன்னு சொன்ன, கமிஷனர், "இரண்டாவது மண்டல, ஏ.சி.,க்கு காரை கொடுத்திடுங்க'ன்னு சொன்னதால, அவருக்கு கொடுத்துட்டாங்களாம்,'' என்று மூச்சு விடாமல் பேசினாள் மித்ரா.அப்போது, சுடச்சுட போன்டாவுடன் வந்த மித்ராவின் தாயார், டீபாயின் மேல் வைத்து விட்டு சென்றதும், குளிருக்கு இதமாக இருவரும், ஆளுக்கொன்று எடுத்து சாப்பிட்டனர். ""ஓபன் மீட்டிங்கில், இந்த சி.இ.ஓ., மிரட்டியது தெரியுமா?'' என்று எஜூகேஷன் மேட்டருக்கு புகுந்தாள் சித்ரா.""அப்படியா, என்ன நடந்தது?'' என்று ஆச்சரியப்பட்டாள் மித்ரா.""எச்.எம்., மீட்டிங் சமீபத்தில் நடந்தது. அதில, குறிப்பிட்ட சில ஸ்கூல் எச்.எம்.,கிட்ட, பள்ளியில் நிலவும் சுகாதார சீர்கேட்டை பத்தி சரமாரியா கேள்வி கேட்டாங்களாம். அதிலும், சீனியர் எச்.எம்.,களை ஒருமையிலேயே பேசினாராம்,'' என்று சித்ரா கூறியதும், ""ஏன், இதிலென்ன இருக்கு?'' என்று மித்ரா கேள்வி கேட்டாள்.""கலெக்டர், டெங்கு சம்பந்தமா, ஸ்கூல் விசிட் போறப்ப, மோசமாக இருக்கிற ஸ்கூல் பற்றி, சி.இ.ஓ.,கிட்ட "டோஸ்' விட்டாராம். அதனால, கடுப்பான, சி.இ.ஓ.. அதை, எச்.எம்., கிட்ட சத்தம் போட்டு இருக்கிறார்,'' என்று சித்ரா விளக்கமளித்ததும், ""என்னப்பா, போலீஸ் மேட்டரையே காணோம்,'' என்றாள் மித்ரா.""அது இல்லாமலா? திருப்பூர், திருட்டு நகை வாங்குற ஊராக மாறிட்டு வருது தெரியுமா? வெளி மாவட்டத்தை சேர்ந்த திருடர்கள், தாங்கள் திருடிய நகைகளை இங்கு விற்பனை செய்திட்டு போறாங்களாம். குறிப்பா, புது மார்க்கெட் வீதியில், நகைக்கடை வெச்சுருக்கிற ரெண்டு பேருக்கு இதே வேலையாம்,'' என்றாள் சித்ரா.""அதெப்படி, போலீசுக்கு தெரியாம போயிருமா?'' என்று மித்ரா கேள்வி கேட்டதும், ""அதைத்தான் சொல்ல வந்தேன். திருட்டு நகையை, உருக்கி, புதுசா செஞ்சறாங்களாம். இது போன்ற நபர்களால், மற்ற நகைக்கடைக்காரங்களுக்கு, கெட்ட பேர் வருதாம். அந்த கறுப்பு ஆடுகளை, களை எடுக்கணும்னு, கமிஷனர் கிட்ட "கம்ப்ளைன்ட்' தர ஒரு தரப்பு ரெடியாகுதாம்,'' என்று சொல்லி, ""மழை நின்னுடுச்சு. நான் கௌம்பறேன்,'' என்று, ஹெல்மெட் சகிதம் கிளம்பினாள்,'' சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X