உடுமலை கவுசல்யா | சாதிகள் இருக்குதடி பாப்பா...| Dinamalar

சாதிகள் இருக்குதடி பாப்பா...

Updated : டிச 07, 2017 | Added : டிச 07, 2017 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சாதிகள் இருக்குதடி பாப்பா...

உடுமலை கவுசல்யா
கடந்த பத்தொன்பது மாதங்களுக்கு முன்பாக உடுமலையில் நடந்த ஆணவப்படுகொலையின் காரணமாக இருபது வயது நிரம்புவதற்குள் கணவரை இழந்தவர்.

தன் மனதிற்கு பிடித்த ஆணுடன் குடும்பம் நடத்திய குற்றத்திற்காக, திருமணமான எட்டாவது மாதமே பட்டப்பகலில் கூலிப்படையினரால் கண் எதிரே கணவன் சங்கரை வீச்சரிவாளுக்கும் வெட்டுக்கத்திக்கும் பலிகொடுத்தவர்.சிசிடிவி புட்டேஜ் காரணமாக இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட காரணமாக இருந்தவர்.

சம்பவத்தில் கவுசல்யாவும் தலையில் வெட்டுக்காயத்துடன் பாதிக்கப்பட்டார்,தீவிர சிகிச்சை காரணமாக பிழைத்துக் கொண்டார்,சிகிச்சைக்கு பின் கணவரோடு வாழ்ந்த வீட்டிற்கே திரும்பியவர்.
பல்வேறு அரசியல் தலைவர்களும் அரசும் வழங்கிய அனைத்து நிதியையும் கணவர் குடும்பத்திற்கே செலவழித்தார்.கழிப்பறை கூட இல்லாமல் குடிசை வீட்டில் வாழ்ந்தவர்களுக்கு கழிப்றையோடு கூடிய சிறிய வீடு கட்டித்தர உதவினார்.

அன்றாடம் மற்றும் அவ்வப்போது சந்தித்தவர்களில் உண்மையிலேயே தன் மீது அக்கறை கொண்டவர்கள் யார் யார் என அடையாளம் கண்டு கொண்டார், அவர்களில் முக்கியமானவர்கள் சென்னையைச் சேர்ந்த இளங்கோவன்-கீதா தம்பதியினர்.
இவர்களது வழிகாட்டுதலின் பேரில் மத்திய அரசு பணிக்கு விண்ணப்பித்து தகுதி அடிப்படையில் தற்போது குமாஸ்தா வேலை பார்த்து வருகிறார்.வேலை காரணமாக வெளியூர் விடுதியில் இருக்கிறார்.வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கணவர் வீட்டிற்கு சென்று கணவர் குடும்பத்தாரோடு நேரத்தை செலவழித்து வருகிறார்.

இவை எல்லாவற்றையும் விட மனிதர்களை கீழ்த்தரமாக்கி, தன் வாழ்க்கை சீரழித்த சாதியை ஒழிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளார், இதற்கான சமூக களங்களில் ஒரு போாரளியாக தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார், தனக்கு ஏற்ப்பட்ட நிலமை இனி எந்தப் பெண்ணிற்கும் நேரக்கூடாது என்பதற்க்காகவும் சாதி ஆணவப்படுகொலையில் ஈடுபடுவோர் இனியாவது திருந்த வேண்டும் என்பதற்காகவும் மேடைகள் கண்டுவருகிறார்.பல்சர் ஒட்டுகிறார், பறை இசைக்கிறார், மனதில் இருப்பதை தைரியமாக பேசுகிறார்.

சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.இந்நிலையில் சென்னையில் 'ஜாதிகள் இருக்கேயடி பாப்பா' என்ற ஆவணப்பட வெளியீட்டு விழாவில் கவுசல்யா கலந்து கொண்டார்.

தலை முதல் உடை வரையிலான இவரது தோற்றம் மாறியிருக்கிறது எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் இருக்கிறது ,பெரியாரிடம் இருந்தும் அம்பேத்காரிடம் இருந்தும் கற்ற பெற்ற விஷயங்களை மேற்கொள்காட்டி பேசத்தெரிந்து இருக்கிறது.
சிறுவர் சிறுமிகளுடன் கவுசல்யா உரையாடுவதுதான் ஆவணப்படத்தின் கரு.இதில் பங்கேற்ற சிறுவர்களுக்கு காதல் பற்றி ,சாதி பற்றி என்ன புரிதல் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள இந்த ஆவணப்படம் உதவுகிறது.

இனிமேல் காதலிக்கிறதுக்கு முன்னாடி நீ என்ன சாதின்னு கேட்டுதான் காதலிக்கணுமா? பயமிருக்குக்கா?என்ற கேள்விக்கு அப்படி கேட்டு காதலிப்பது காதல் இல்லை, காதலிப்பது மனசாக மட்டுமே இருக்கவேண்டும் என்று பதில் தருகிறார் கவுசல்யா.
இந்த ஆவணப்படத்தை யூடியூப்பில் பதிவேற்றும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது ஆகவே அதில் முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த ஆவணப்பட வெளியீட்டு விழாவிற்கு அழைத்த எம்.ஜே.பிரபாகருக்கும்,கூடுதல் விவரங்கள் தந்து உதவிய இளங்கோவன்-கீதா தம்பதியினருக்கும் நன்றி!

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishna - cbe,இந்தியா
28-டிச-201709:11:44 IST Report Abuse
krishna ஜாதி ஒழிப்பு போராளிகள் ஏன் அரசாங்க சலுகைகள் மற்றும் ஜாதி ரீதியான இட ஒதுக்கீடுகளை ஆதரிக்கின்றனர் .அதிலும் ஜாதியை ஒழிக்க வேண்டியது தானே.திறமை இருப்பவர்களுக்கு முன்னுரிமை தரலாமே.
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா
14-டிச-201707:05:13 IST Report Abuse
Krishnamurthy Ramaswamy சாதி மறுப்பு , சாதி ஊழிப்பு என்பவற்றை திராவிட காட்சிகள் குறிப்பாக கருணாவின் தி மு க 'பார்ப்பனரை ஒதுக்கி அவர்களை அவமானப்படுத்தி, தமிழ் நாட்டில் இருந்து பலரை [ அவர்கள் பெருபாலும் தமிழ் பேசுபவர்கள் எங்கு இருந்தாலும் ] விரட்டவே பயன்படுத்தினர். ஆனால் உண்மையில் ' ஜாதி கொடுமைகள் ,ஜாதகி பற்றி சிறு குழந்தையொகள் யஹீரிந்து இருப்பது ,ஒரே சாதியில் பல பிரிவுகளை மிகைப்படுத்தி தேர்தலில் வாக்கு பெற்று அதன் மூலம் 'தாங்கள் தமிழகத்தை கொள்ளை அடித்து தானும் தன்னை சார்ந்த குடுபங்களும் பல தலைமுறைகளுக்கு கோடி கோடி யாக சேர்ப்பதற்கும் மட்டும் உபயோகித்து ' ஜாதி கொடுமைகள் மேல் நோக்க செத்தனர்' இன்று தமிழகத்தில் இருப்பதுபோன்ற 'ஜாதி பைத்தியம் வேறு மாகாணத்தில் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
14-டிச-201704:40:15 IST Report Abuse
Swaminathan Chandramouli பார்ப்பனர்களை தவிர மற்ற எல்லா ஜாதிகளும் தான் பிரச்சினை செய்கின்றன . ஆணவ கொலைகள் பார்ப்பனர்கள் செய்யவில்லை அதனையும் பார்ப்பனர் அல்லாதவர் தான் அவர்களுக்குள் மேல் ஜாதி கீழ் ஜாதி பார்த்து இந்த முறை கேடான கொலைகளை செய்கிறார்கள் . ஆனால் பார்ப்பானை திட்டுவதில் இந்த பொறுக்கிகளுக்கு ஏக மகிழ்ச்சி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X