நாளை நடக்கும் குஜராத் சட்டசபை தேர்தலில் மோடிக்கு... சோதனை! வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் தீவிர பிரசாரம் Dinamalar
பதிவு செய்த நாள் :
சோதனை!
நாளை நடக்கும் குஜராத் சட்டசபை தேர்தலில் மோடிக்கு...
வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் தீவிர பிரசாரம்

நாடே எதிர்பார்க்கும், குஜராத் மாநில சட்டசபை தேர்தல், முதல் கட்ட ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது. பிரதமர் மோடி மற்றும், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால், வெற்றி பெற்றே தீர வேண்டிய நிலை, பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தல், Gujarat assembly election, பிரதமர் மோடி, PM Modi,  பா.ஜ.,BJP, அமித் ஷா, Amit Shah, பண மதிப்பிழப்பு ,demonetization, ஜி.எஸ்.டி., GST,  பதிதார் - படேல், Pathithar - Patel,ஹர்திக் படேல், Hardik Patel,ஆனந்தி பென் படேல், Anandiben Patel, கருத்துக் கணிப்புகள், opinion polls,மஹாராஷ்டிராவில் இருந்து பிரிந்து, 1960ல், குஜராத் தோன்றியது முதல், காங்., வசம் இருந்த ஆட்சி பொறுப்பு, 1990ல் பறிபோனது; அப்போது, ஜனதா தளம் - பா.ஜ., இணைந்து ஆட்சி அமைத்தன. பின், 1995ல், பா.ஜ., தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. அப்போது முதல், 22 ஆண்டுகளாக ஆட்சியில் தொடரும், பா.ஜ., முதல் முறையாக, கடும் நெருக்கடிக்கு இடையே தேர்தலை, நாளை சந்திக்கிறது.

கடும் நெருக்கடி:


கடந்த, 2001 முதல், பிரதமராக பதவியேற்ற, 2014 வரை, மூன்று சட்டசபை தேர்தல்களில், அங்கு தொடர்ந்து வெற்றி பெற்றவர் மோடி. அவர், பிரதமராக பதவியேற்ற பின், நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. அதனால், இதுவரை இல்லாத கடும் நெருக்கடி, மோடிக்கும், அவரது மூளையாகச் செயல்படும், அமித் ஷாவுக்கும் ஏற்பட்டுள்ளது.

தேர்தலின்போது வழக்க மாக ஆளுங்கட்சிக்கு எதிராக ஏற்படும் மனநிலை, அதுவும், 22 ஆண்டு கால ஆட்சி என்பதால்,

இங்கு, சற்று கூடுதலாகவே இருக்கக்கூடும். வணிகர்கள் அதிகம் நிரம்பிய மாநிலம் என்பதால், பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி., பிரச்னையில் அங்கு எதிர்ப்பலை ஏற்பட்டது. சூரத்தில் நடந்த, மாபெரும் போராட்டமே அதை உணர்த்தியது.

பா.ஜ.,வின் ஓட்டு வங்கியான, வணிகர்கள் நிரம்பிய, பதிதார் - படேல், உயர் சமுதாயத்தைச் சேர்ந்தவரும், அவர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு போர்க்கொடி உயர்த்தியவருமான, ஹர்திக் படேல், பெரும் சவாலாக உருவெடுத்து உள்ளார். ஆனந்தி பென் படேலை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிய கோபமும், அவர்களுக்கு உள்ளது.

இது போதாதென, ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த, ஜிக்னேஷ் மேவானி, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அல்பேஷ் தாகூர் ஆகியோரும், பா.ஜ.,வுக்கு கடும் எதிர்ப்பை காட்டுகின்றனர். ஹர்திக் உட்பட இவர்கள் மூவரும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்திருப்பது, பா.ஜ.,வுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் மூவருடனும், ராகுல் கைகோர்த்துள்ளதால், பா.ஜ., வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது. அகில இந்திய தலைவர் பொறுப்பு கிடைக்கவிருப்பதால், அதற்கு தகுதியானவர் என்பதை நிரூபிக்க, தீவிரமாக களம் இறங்கி உள்ளார் ராகுல்.

அமித் ஷாவின் மகன், ஜெய் ஷாவின் சொத்து, பன்மடங்கு அதிகரித்தது தொடர்பான புகாரில் சிக்கியதும், பா.ஜ., வுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஆனால், பண மதிப்பிழப்புக்கு பின் கிடைத்த உ.பி., தேர்தல் வெற்றி மற்றும் சமீபத்திய உள்ளாட்சி தேர்தல் வெற்றி ஆகியவை, பா.ஜ.,வுக்கு ஆறுதல்.

Advertisement

உறுதி இல்லை:


கருத்துக் கணிப்புகள், பா.ஜ,,வுக்கு ஆதரவாக இருந்தாலும், முடிவு வரும் வரை, உறுதி இல்லை என்பதை பா.ஜ., உணர்ந்துள்ளது. மோடி என்னும் தனிமனிதர் செல்வாக்கு மற்றும் வளர்ச்சி என்னும் முழக்கம் ஆகிய இரு அம்சங்களை மட்டும் நம்பி, பா.ஜ., களம் இறங்கியுள்ளது. மோடி, வாரத்திற்கு மூன்று முறை, குஜராத் சென்று பிரசாரம் செய்தது, அவருக்கு ஏற்பட்ட நெருக்கடியை காட்டியது. குஜராத் தேர்தல் அறிவிப்பு தாமதம் ஆனது.
அதற்கு இடைப்பட்ட நேரத்தில், நர்மதா அணை திறப்பு, மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம், விவசாயிகளுக்கு சலுகைகள் மற்றும் ஜி.எஸ்.டி.,யில், 178 பொருள் விலை குறைப்பு என மத்திய, மாநில பா.ஜ., அரசுகள், சலுகைகளை வாரி வழங்கியது. இது, பா.ஜ.,வுக்கு ஏற்பட்ட அச்சத்தை வெளிச்சம் போட்டு காட்டியதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இது போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே, குஜராத் எனப்படும் நெருப்பாற்றை கடக்க வேண்டியுள்ளது. அதை கடந்தால் தான், அடுத்து வரும் கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் தேர்தல்கள் மற்றும், 2019 லோக்சபா தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்.

படேல் ஓட்டுகள் பாதிக்குமா?

கேசுபாய் படேல், பா.ஜ.,வில் இருந்து விலகி, தனிக்கட்சி துவங்கிய போது, 2012ல், படேல் சமூகத்தினர் அவரை கைவிட்டனர். மின்சாரம், குடிநீர் கிடைக்காத ஊர்களுக்கு, அதை சாத்தியப் படுத்திய, பா.ஜ.,வை, படேல் சமூகத்தினர் மறக்கவில்லை. ஆனால், இப்போது, ஹர்திக் படேலுடன் கைகோர்த்துள்ள இளைஞர்கள், 1995க்குப் பின் பிறந்தவர்கள். அவர்களுக்கு, மின்சாரம், குடிநீர் வசதி பற்றிய பெரிய மனக்குறை இல்லை. அதனால், இம்முறை, படேல் சமூக ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு கிடைக்குமா என்பதில் தெளிவில்லை.- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஈரோடுசிவா - erode ,இந்தியா
08-டிச-201722:01:53 IST Report Abuse

 ஈரோடுசிவாநாளை நடக்கும் குஜராத் சட்டசபை தேர்தலில் மோடிக்கு... சோதனை //////// சோதனை மோதிஜிக்கல்ல ... குஜராத் மக்களுக்கு தான் ... மாநிலத்தை இந்தியாவிலேயே நெ -1 ஆக மாற்றி அமைத்த பாஜக ஆட்சியை தக்கவைத்து கொள்கிறார்களா ... இல்லை ., நன்றி மறந்து நயவஞ்சக கான் + கிராஸ் கும்பலுக்கு ஆதரவளிப்பார்களா .... என்று சத்தியசோதனை நடைபெற உள்ளது ... ஆனால் ., குஜாராத்தியர்கள் புத்திசாலிகள் ... தாமரையை மலரச்செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது ... அவர்கள் ஒன்றும் வீணாய்போன ''டுமீளன்ஸ் '' அல்லவே ... ?

Rate this:
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
08-டிச-201719:58:14 IST Report Abuse

சூரிய புத்திரன்என் வேலை இங்கு என் கருத்துக்களை சொல்வதே. இத்தாலிய அடிமை அடிவருடிகளுக்கும், தீராவிடங்களுக்கும், வெள்ளை, பச்சை தேச துரோகிகளுக்கும் பதில் சொல்வதில்லை. சோதனைகளை சாதனையாக்கி எம் இந்திய மக்களின் வேதனை தீா்க்க வந்த ஒப்பற்ற தலைவன் திரு. மோடிஜி. பா.ஜ.க என்ற தேசபக்த இயக்கத்தின் வெற்றி பயணத்தை யாராலும் தடை செய்ய முடியாது, இத்தாலிய.அடிவருடிகள் குஜராத்தில் தோற்றதற்கான பொய் காரணங்களை இப்போதே தேடி வைத்துக்கொள்வது.நல்லது 19ம் தேதி உதவும். EVM காரணம் கேட்டு காது புளித்துவிட்டது.

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
08-டிச-201718:02:37 IST Report Abuse

K.Sugavanamஅடப்பாவமே கருத்துக்கணிப்புகள் டுபாக்கூர் என முழங்கி திரிந்தவர்கள் இப்போ அவைகளை துரத்துகிறார்கள்..

Rate this:
மேலும் 50 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X