பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
விளாசல்!
'என்னை கொல்ல பாக்., உதவியை மணிசங்கர் நாடினாரா';
குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கேள்வி

பனாஸ்காந்தா : ''இந்தியா - பாகிஸ்தான் இடையே, உறவு சுமுகமாக இருக்க வேண்டுமானால், 'தடையாக உள்ள என்னை நீக்க வேண்டும்' என, காங்கிரஸ் மூத்த தலைவர், மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார். என்னை கொலை செய்வதற்கு, பாகிஸ்தான் உதவியை அவர் நாடினாரா?'' என, பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார்.

மணிசங்கர் அய்யர்,Mani Shankar Aiyar, பிரதமர் நரேந்திர மோடி,Narendra modi, பாகிஸ்தான்,Pakistan,  இந்தியா, India, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ,Gujarat Chief Minister Vijay Rupani, குஜராத் சட்டசபை தேர்தல், Gujarat assembly election,  மோடி, Modi,


குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு உள்ளது. இங்கு இரண்டு கட்டங்களாக, சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. முதற்கட்ட தேர்தல் இன்று நடக்க உள்ள நிலையில், பிரதமர் மோடி குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர், மணிசங்கர் அய்யர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையானது. அதையடுத்து, காங்.,கில் இருந்து அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குஜராத்தின், பனாஸ்காந்தா மாவட்டத்தில், நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: மணிசங்கர் அய்யர் என்ன செய்தார் தெரியுமா? அவர் அவமானப்படுத்தியது என்னையா, உங்களையா? அவர் அவமானப்படுத்தியது என்னையா, குஜராத்தையா? கலாசாரத்தில் சிறந்து விளங்கும் இந்த நாட்டை அவமானப்படுத்தினாரா, என்னையா? அவருடைய பேச்சு குறித்து, இனி நான் பேசப்போவதில்லை. அந்த பேச்சுக்காக, காங்கிரசுக்கு என்ன பதிலளிக்க வேண்டும் என்பதை, மக்கள் முடிவு செய்து விட்டனர். தேர்தல் முடிவில் அது தெரியவரும்.

ஆனால், ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். நான் பிரதமரான பின், மணிசங்கர் அய்யர் பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு, சில பாகிஸ்தானியர்களை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பு குறித்த விபரங்கள், சமூகதளங்களில் உள்ளன. அந்த சந்திப்பின் போது, 'மோடியை நீக்காவிட்டால், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படாது' என, மணிசங்கர் கூறியுள்ளார்.

பாதையில் இருந்து நீக்குவது என்றால், என்ன அர்த்தம் என்று யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள். என்னை கொல்வதற்கு சதி செய்யவே, அவர் பாகிஸ்தானுக்கு சென்றார்; அவர்களுடைய உதவியை நாடினார் என, எடுத்துக் கொள்ளலாமா?

இந்த சந்திப்பு நடந்து மூன்று ஆண்டுகளாகி விட்டது. ஆனால், காங்., எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் அதை மூடிமறைக்க முயற்சித்தனர்.

நான் செய்த தவறு என்ன? மக்களால் ஜனநாயக முறைப்படி, நான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், என்னை பாதையில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக, இவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

நடந்தது என்ன?


கடந்த, 2015 நவம்பரில், மணிசங்கர் அய்யர் பாகிஸ்தானுக்கு சென்று, அங்கு நடந்த தனியார், 'டிவி' விவாதத்தில் பங்கேற்றார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்படுவதற்கான வாய்ப்பு குறித்த கேள்விக்கு, அவர் கூறியதாவது:

முதலில் செய்ய வேண்டியது, மோடியை நீக்க வேண்டும். அதன் பின்னே, இரு தரப்பு பேச்சில் முன்னேற்றம் ஏற்படும். மோடி பிரதமராக இருக்கும்போதே பேச்சு நடத்தலாம் என, இந்த விவாதத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர். ஆனால், அதற்கு சாத்தியமில்லை. அவர்களை நீக்கி, காங்கிரசை ஆட்சிக்கு கொண்டு வாருங்கள். நாங்களாக அவர்களை நீக்க வேண்டுமானால், நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மணிசங்கரின் இந்த பேச்சையே, மோடி குறிப்பிட்டு, தன்னை கொல்ல சதி நடந்ததா என, கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், குஜராத் தேர்தல் களம் மேலும் சூடாகியுள்ளது.

இன்று முதற்கட்ட தேர்தல்:


குஜராத்தில், 89 தொகுதிகளுக்கு, இன்று முதற்கட்ட சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

குஜராத் சட்டசபைக்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. சவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தில், இன்று நடக்க உள்ள தேர்தலில், 89 தொகுதிகளில், 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாம் கட்டமாக, 14ம் தேதி, 93 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. 18ல், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இன்று நடக்கும் தேர்தலில், பா.ஜ., முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். தொடர்ந்து, ஐந்தாவது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில், பா.ஜ., உள்ளது.

Advertisement

கட்சி தலைவராக, ராகுல் பொறுப்பேற்க உள்ள நிலையில், குஜராத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் உள்ளது.

முதற்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில், பிரதமர் நரேந்திர மோடி, 15 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல், ஏழு நாட்களில், ஏழு கூட்டங்களில் பங்கேற்றார்.

தேர்தல் அறிக்கை வெளியீடு:

குஜராத்தில், முதற்கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடக்க உள்ள நிலையில், பா.ஜ., தன் தேர்தல் அறிக்கையை, நேற்று வெளியிட்டது. 'குஜராத் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை கூட, பா.ஜ., வெளியிடவில்லை' என, காங்கிரஸ் விமர்சனம் செய்திருந்தது. இந்நிலையில், கட்சியின் தேர்தல் அறிக்கையை, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, நேற்று வெளியிட்டார். அப்போது, அவர் கூறியதாவது: செய்யவே முடியாத உறுதிகளை, காங்கிரஸ் கூறியுள்ளது. ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், குஜராத் முன்னிலையில் உள்ளது. ஐந்து ஆண்டுகளில், சராசரியாக, 10 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதை தொடர்ந்து பராமரிப்பதுடன், உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும்; இளைஞர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும்; பாரம்பரிய விளையாட்டுகள் ஊக்குவிக்கப்படும் உள்ளிட்டவை, தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.தண்டனை ஏற்க தயார்!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து, நான் கூறிய கருத்தால், குஜராத் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அதற்காக எந்த தண்டனை அளித்தாலும், ஏற்கத் தயாராக உள்ளேன்.

-மணிசங்கர் அய்யர்மூத்த தலைவர், காங்.,


Advertisement

வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) பிரதமர் இப்படி பேசியிருக்க கூடாது... தவரான முன் உதாரணம்... பி. ஜே. பி காரர்கள் யாரும் இதுவரை பாகிஸ்தான் சென்றதே இல்லையா? நீங்களே திடீர் விஜயம் செய்தீர்கள்... பாகிஸ்தான் இந்திய பிரதமரை எதுவேண்டுமானாலும் செய்யும் நிலையிலா நம் நாடு உ‌ள்ளது?

Rate this:
raja - Kanchipuram,இந்தியா
09-டிச-201721:58:20 IST Report Abuse

rajaஅப்போ நீங்க யாரை தீர்க்க பாகிஸ்தான் போனீர்கள். அதுவும் தீடீர் என. இப்படி பேசியே இங்குள்ள திராவிட கூட்டம் போல உத்தியை பயன்படுத்தியே காரியத்தை முடித்து கொள்கிறீர்கள்

Rate this:
INDIAN - Mamallpuram ,இந்தியா
09-டிச-201719:09:31 IST Report Abuse

INDIANஎன்ன ஒரு மோசமான பிரதமர் .இது வரை இந்தியா கண்டிராத பிரதமர். ஓட்டுக்காக அழுது வேஷம் போட்டு தான் ஜெயிக்க வேண்டுமா? ஓட்டுக்காக வேஷம் போடுவதற்கு கூட அளவு கிடையாதா? சாதனைகளை சொல்லி கேட்கும் காலம் போய் அழுது கேட்கும் காலம் வந்துவிட்டது. பதவி வெறி

Rate this:
இந்துத்தமிழன் - Tamilnadu,இந்தியா
09-டிச-201723:28:07 IST Report Abuse

இந்துத்தமிழன்உங்க வெறுப்புல கூட ஓர் உண்மையைச் சொல்லிவிட்டீர் . "இது வரை இந்தியா கண்டிராத பிரதமர்" மிகவும் சரி. மோடிஜி தலைமையில் இந்தியா மென்மேலும் வளரும். புலம்புபவர்கள் புலம்பிக்கொண்டே இருங்கள் ...

Rate this:
மேலும் 57 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X