அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நடிகர், நடிகையரை களமிறக்க கட்சிகள் திட்டம்
ஆர்.கே.நகரில் மின்னப்போகுது நட்சத்திர கூட்டம்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், நடிகர், நடிகையரை பிரசாரத்திற்கு அழைப்பதில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

நடிகர், நடிகையரை களமிறக்க கட்சிகள் திட்டம் ; ஆர்.கே.நகரில் மின்னப்போகுது நட்சத்திர கூட்டம்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல், டிச., 21ல் நடக்கிறது. இந்த தேர்தல், ஆளுங்கட்சியின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கிற தேர்தலாக அமைந்துள்ளது.எனவே, முழு வீச்சில் களமிறங்கியுள்ள ஆளும் தரப்பு, மதுசூதனன் வெற்றிக்கு வேலை செய்து வருகிறது.
ஆனால், தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டுகள், கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், ஆளுங்கட்சியால், அதிகார பலத்தை பயன் படுத்துவதில், முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவின்போது, யாருக்கு ஓட்டு பதிவு ஆகியுள்ளது என்பதை, வாக்காளர்கள் பார்க்க முடியும் என்பதால், தில்லுமுல்லுக்கும் வாய்ப்பு இல்லை.

பிரசாரம்


எனவே, ஓட்டுகளை கணிசமாக திரட்டுவதற்கு, பிரபல சினிமா நட்சத்திரங்களை, பிரசாரத்தில் ஈடுபட வைக்க, ஆளும் கட்சி தயாராகியுள்ளது. அ.தி.மு.க., சார்பில், நடிகர்கள் ராமராஜன்,

பொன்னம்பலம், அஜய் ரத்னம், அருள்மணி, சிங்கமுத்து, வையாபுரி, தியாகு, குண்டு கல்யாணம், சுந்தரராஜன், மனோபாலா, ஏ.கே.ராஜேந்திரன், அனுமோகன், சினிமா இயக்குனர்கள், ஆர்.வி.உதயகுமார், லியாகத் அலிகான், பி.சி.அன்பழகன், சக்தி சிதம்பரம் ஆகியோர், பிரசாரத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நடிகையரில், டி.கே.கலா, வெண்ணிற ஆடை நிர்மலா, ஆர்த்தி, செய்தி வாசிப்பாளர்கள், நிர்மலா பெரியசாமி, பாத்திமா பாபு ஆகியோர், பிரசாரத்தில் ஈடுபட்டுஉள்ளனர்.

கேள்விக்குறி


மேலும், நடிகையர் சுகன்யா, பானுபிரியா போன்றவர்களையும், பிரசாரத்திற்கு அழைக்க, அ.தி.மு.க., மேலிடம் முடிவு செய்துள்ளது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்த, பிரபல வில்லன் நடிகர், ஆனந்தராஜ், தற்போது, சசிகலா அணியை கடுமையாக எதிர்த்து வருகிறார். அவர், இந்த தேர்தலில் யாரை ஆதரித்து, பிரசாரம் செய்வார் என்பதுகேள்விக்குறியாக உள்ளது.
அதேபோல், சிரிப்பு நடிகர் செந்தில், தற்போது, சசிகலா அணியில் இணைந்துள்ளதால், அவர், தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார். நடிகையர் விந்தியாவும், தினகரனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதிக்கவுள்ளார்.
மேலும், வாக்காளர்களை கவரவும், கூட்டத்தை அதிகமாக திரட்டும் வகையிலும், திரைப்பட இயக்குனர், டி.ராஜேந்தர், 'காமெடி' நடிகர், கஞ்சா கருப்பு, நடிகை, பத்மபிரியா போன்றவர்களை யும் அழைக்க, அ.தி.மு.க., மேலிடம் ஆலோசித்துள்ளது.

Advertisement

நடிகை லதா, கடந்த முறை மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்; தற்போதும், அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

நம்பிக்கை


தி.மு.க.,வில், பிரபல காமெடி நடிகர், சந்தானத்தை அழைத்து வரும் பொறுப்பை, உதயநிதி ஏற்றுள்ளார். ஆனால், பிரசாரம் மேற்கொண்டால், தன், 'சினிமா மார்க்கெட்' பாதிக்கப்படுமோ என, சந்தானம் தயங்குவதாக தகவல்.நடிகர்கள், ராதாரவி, சந்திரசேகர், வாசு விக்ரம், போஸ் வெங்கட், தாடி பாலாஜி, பட்டிமன்ற பேச்சாளர், திண்டுக்கல் லியோனி, சேலம் சுஜாதா ஆகியோர், பிரசார களத்தில் குதிக்கின்றனர்.
நடிகர் விஷால், தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வாரா என்ற கேள்வியும்எழுந்துள்ளது. நடிகர், நடிகையரின் பிரசாரம், யாருக்கு கை கொடுக்கப் போகிறதோ தெரியவில்லை; கூட்டத்தை வரவழைக்க வாவது உதவும் என்ற நம்பிக்கையில், கட்சிகள் உள்ளன. - நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N. Sridhar - chennai,இந்தியா
12-டிச-201714:05:02 IST Report Abuse

N. Sridharவாணியம்பாடி காளிராஜ் சொன்னதைப்போல ஜெயலலிதா வேஷம் போடவில்லை. ஏன் என்றால் 1௦௦% பிராடுக்கு வேஷம் போட அவசியம் இல்லை

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
10-டிச-201723:06:20 IST Report Abuse

Bhaskaranநடிகர் தாடி பாலாஜி பெண்டாட்டியுடன் குடும்பம் நடத்த தெரியாத ஒரு சைக்கோ தன குழந்தைகளை தீ வைத்து பொசுக்கி மகிழும் ஒரு சாடிஸ்ட் இவனை தளபதி பிரச்சாரத்துக்கு அழைத்து பேசச்செய்தால் மிகவும் அதிகமான வோட்டர் திமுகவுக்கு ஆதரவாக போடுவது உறுதி

Rate this:
M.SRINIVASAN. - pathamadai.tirunelveli dist,இந்தியா
10-டிச-201720:22:12 IST Report Abuse

M.SRINIVASAN. தமிழ்நாட்டில் மட்டும் இது சாத்தியப்படும் .கேரளாவில் நடிகர்களை ஒரு நாடக தொழிலாளிகளாக மட்டும் பார்க்கின்றனர் .அதனாலேயே கேரளம் வேகமாக வளர்ந்துவருகிறது .

Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X