வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை

Updated : ஜூன் 16, 2010 | Added : ஜூன் 14, 2010 | கருத்துகள் (12)
Share
Advertisement
ஸ்ரீநகர் : காஷ்மீரில் துணிச்சலாக செயல்பட்டு பயங்கரவாதியை கொலை செய்த ருக்ஷனா, தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளார். "என் கணவரை சந்திப்பதற்கு அனுமதி அளிக்க மறுத்து, வீட்டை விட்டு வெளியேற விடாமல் என் பெற்றோர் தொல்லை கொடுக்கின்றனர்' என, அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீர், ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ருக்ஷனா. கடந்தாண்டு, பயங்கரவாதிகள் இவரது வீட்டில் தாக்குதல்
வீரப் பெண், ருக்ஷனா, பெற்றோர் கொடுமை,கணவர், சந்திப்பு, அனுமதி இல்லை, Rukshana,parents

ஸ்ரீநகர் : காஷ்மீரில் துணிச்சலாக செயல்பட்டு பயங்கரவாதியை கொலை செய்த ருக்ஷனா, தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளார். "என் கணவரை சந்திப்பதற்கு அனுமதி அளிக்க மறுத்து, வீட்டை விட்டு வெளியேற விடாமல் என் பெற்றோர் தொல்லை கொடுக்கின்றனர்' என, அவர் தெரிவித்துள்ளார்.


காஷ்மீர், ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ருக்ஷனா. கடந்தாண்டு, பயங்கரவாதிகள் இவரது வீட்டில் தாக்குதல் நடத்தியபோது, துணிச்சலாக அவர்களை எதிர்த்து போராடியவர். இதில், லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் அபு ஒசாமாவை, ருக்ஷனா கொலை செய்தார். இந்த தைரியத்தை பாராட்டிய மத்திய அரசு, ருக்ஷனாவுக்கு கீர்த்தி சக்ரா விருது கொடுத்து கவுரவித்தது. மேலும், பாதுகாப்புப் படையிலும் அவருக்கு வேலை கிடைத்தது. இந்த சம்பவத்தை அடுத்து, ருக்ஷனா மிகவும் பிரபலமாகி விட்டார். இதற்கிடையே, அவரின் பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்ட கபீர் உசேனுடன், ருக்ஷனாவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இந்த திருமணத்தை ருக்ஷனாவின் பெற்றோர் கடுமையாக எதிர்த்தனர். வீட்டை விட்டு வெளியேற விடாமல், ருக்ஷனாவை அடைத்து வைத்துள்ளதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


இதுகுறித்து தொலைபேசி மூலமாக பத்திரிகை ஒன்றுக்கு ருக்ஷனா அளித்த பேட்டி: எனக்கும், கபீர் உசேனுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்து விட்டது. என் பெற்றோர் இதை ஏற்க மறுக்கின்றனர். என் உறவுக்கார பையனை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகின்றனர். எங்களுக்கும், அவர்களது குடும்பத்துக்கும் நீண்ட காலமாக சரியான உறவு இல்லை. நாங்கள் வறுமையில் இருந்ததால், அவர்கள் எங்களை மதிப்பது இல்லை. எங்களை அவமானப் படுத்தும் வகையில் பேசி வந்தனர். எனக்கு வேலை கிடைத்ததால், என் வருமானத்துக்கு ஆசைப்பட்டு, தற்போது உறவு கொண்டாடுகின்றனர். அவர்களது மகனை எனக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர். இதற்கு என் பெற்றோரும் உடந்தையாக உள்ளனர். எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. மீண்டும் ஒருவரை எப்படி திருமணம் செய்ய முடியும். பெற்றோரின் விருப்பத்தை ஏற்க மறுத்ததால், என் கணவருடன் சந்திப்பதற்கு எனக்கு அனுமதி மறுக்கின்றனர். வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர். வீட்டை விட்டு வெளியேறினால், பாதுகாப்புக்காக பின்தொடர்ந்து வருகின்றனர். இதனால், மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ருக்ஷனா கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yuvarani - Tirupur,இந்தியா
15-ஜூன்-201016:11:10 IST Report Abuse
 yuvarani    தேனீ குமரன் உங்கள் கருத்துக்கு நான் தலை வணக்குகிறேன் கட்டாயம் பெண் விடுதலை வேண்டும்
Rate this:
Cancel
praveen - falcon,வெனிசுலா
15-ஜூன்-201015:35:12 IST Report Abuse
 praveen இதெல்லாம் ஒரு பப்ளிசிட்டி தான் ,,,ஒரு முறை எப்படியோ தைரியம் வந்து ஏதாவது சாதனை செய்து விட்டால் போதும் ,,அவர் பெரிய ஹிரோ ஆகிவிடுவார்,,ஆக்கி விட்டு விடுவார்கள். இந்த கேடு கெட்ட அரசியல் வாதிகள்,,, பின் அவர்களை பற்றி கண்டுக்கவே மாட்டார்கள்,,, இதுதான் இந்தியாவின் நிலைமை,,,அவர் பாதுகாப்பு படையில் சேர தகுதி உள்ளவரா????அவர் செயலுக்கு ஏதாவது பரிசு கொடுக்கத்தான் வேண்டும் ,,இல்லையென்று சொல்லவில்லை,, ஆனால் தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடுவது,, பின்னர் திடீரென்று கீழே போடுவது,, கேட்கவே அசிங்கம்,,,... Sateesh's commentry is excelent
Rate this:
Cancel
இக்பால் - Dammam,சவுதி அரேபியா
15-ஜூன்-201014:19:36 IST Report Abuse
 இக்பால் என்ன கொடும்மை சார் இது!!!!!!!! இவர் பாரதி கண்ட பூதுமை பெண். வாழ்க!! வளமுடன்.................. ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X