பொது செய்தி

இந்தியா

வெளிநாட்டு மோகம் குறைகிறது

Added : டிச 10, 2017 | கருத்துகள் (51)
Advertisement
வெளிநாட்டு மோகம் குறைகிறது

டேராடூன்: அமெரிக்காவில் கிடைத்த பணியை உதறி தள்ளி ராணுவத்தில் இணைந்த இளைஞர், நாட்டுக்கு சேவை செய்வது பெருமையாக உள்ளதாக கூறியள்ளார்.


லட்சியம்

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள சிமென்ட் தொழிற்சாலை ஒன்றில் தினக்கூலியாக வேலை செய்பவர் பர்னானா குணயா. அவரது மகன் பர்னானா யதகிரி. நன்றாக படிக்கும் அவர், அரசு உதவித்தொகை மூலம் தனது பள்ளி படிப்பை முடித்தார். தொடர்ந்து, ஐதராபாத்தில் உள்ள ஐஐஐடி எனப்படும் சர்வதேச தொழில்நுட்ப கல்லூரியில் மென்பொருள் பொறியாளராக பட்டம் பெற்றார். யதகிரி திறமையை பார்த்த அமெரிக்காவின் யூனியன் பசிபிக் ரயில் சாலை என்ற அமெரிக்க நிறுவனம் அவரை வேலையில் அமர்ந்தி பணியாணை அனுப்பியிருந்தது.
மேற்படிப்புக்காக இந்தூரில் உள்ள இந்திய மேலாண்மை கல்லூரி(ஐஐஎம் இந்தூர்)யிலும் அவர் நுழைவு தேர்வு எழுதி 93.4 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால், இவற்றையெல்லாம் உதறிய யதகிரி, ராணுவ அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்தை நிறைவேற்ற ராணுவத்தில் இணைந்துள்ளார். ராணுவ பயிற்சி கல்லூரியில், தொழில்நுட்ப பிரிவில் பயிற்சி முடித்து வெள்ளி பதக்கம் வென்றார். தற்போது அவர் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


அமெரிக்க வாய்ப்பை உதறினார்


இது குறித்து யதகிரி கூறியதாவது: எனது தந்தை சாதாரண நபர். நான் சாதாரண வீரராக ராணுவத்தில் இணைவதாக நினைத்து கொண்டுள்ளார். அதனால், அதிக சம்பளம் கிடைக்கும் வேலையை விட்டுவிட்டு ராணுவத்தில் சேர்ந்து தவறு செய்ய உள்ளதாக கூறினார். கார்பரேட் உலகத்தில் சிக்கி கொண்டு ஏராளமான பணம் சம்பாதிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், எது எனது மனதிற்கு திருப்தி தராது. தாய் நாட்டிற்காக வேலை செய்வதால் கிடைக்கும் மன நிறைவை, எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காது. நாடு பெருமைப்படும் வகையில் எனது பணி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SmartRascal - Bangalore,இந்தியா
11-டிச-201707:04:46 IST Report Abuse
SmartRascal யோவ் என்ன மனுஷன் யா நீ?? பணத்துக்காக என்னலாமோ பண்ற இதே நாட்ல இப்படியும் ஒரு மனிதனா?? ரொம்ப வியப்பா இருக்கு..உங்கள் உயர்ந்த எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்..
Rate this:
Share this comment
Cancel
Jaganathan -  ( Posted via: Dinamalar Android App )
11-டிச-201705:08:04 IST Report Abuse
Jaganathan Salute sir
Rate this:
Share this comment
Cancel
rameshkumar - chennai,இந்தியா
10-டிச-201723:02:33 IST Report Abuse
rameshkumar வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X