அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'ஜாக்பாட்?'
அ.தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு அடிக்க போகுது...
அனைவருக்கும் விரைவில் சென்னையில் சொந்த வீடு

சென்னைக்கு வந்தால், தாங்கள் தங்குவதற்கு வீடு இல்லை என, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் புலம்பியதால், அவர்களுக்கு, பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு வீடுகளை இலவசமாக அளிக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவிக்காலம் முடிவதற்கு, இன்னும் ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில், தங்களுக்கு அடிக்கப் போகும் அதிர்ஷ்டத்தில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், மகிழ்ச்சியில் மிதக்கின்றனர்.

A.D.M.K,ADMK,Chennai,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,எம்.பி.,ஜாக்பாட்?,அனைவருக்கும்,சென்னை,சொந்த வீடு


ஒவ்வொருமுறையும், பார்லிமென்ட் கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன், எம்.பி.,க்களின் ஆலோசனைக் கூட்டத்தை அ.தி.மு.க., தலைமை சென்னையில் கூட்டுவது வழக்கம். இதில், தமிழக திட்டங்களின் கோரிக்கைகள், மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள மசோதாக்களின் மீதான நிலைப்பாடு, மாநில, தேசிய அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி, பல்வேறு பிரச்னைகளில், எம்.பி.,க்கள் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்து ஆலோசிக்கப்படும்.

இந்நிலையில், விரைவில் துவங்கவுள்ள, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடருக்காக, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், சென்னையில் சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரும் ஒரு முக்கிய கோரிக்கையை எழுப்பினர்.

அவர்கள் எழுப்பிய கோரிக்கை: பல்வேறு விஷயங்களில், மக்கள் சேவை ஆற்றுவதற்கு, அடிக்கடி சென்னை வந்து போக வேண்டியுள்ளது. பல ஊர்களிலிருக்கும் நாங்கள், டில்லிக்கு செல்ல வேண்டு மெனில், சென்னைக்கு வந்து, விமானம் பிடிக்க வேண்டியுள்ளது. எனவே, சென்னையில் எங்கு தங்குவது என்பதில், நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

ஜெயலலிதா இருந்த போதே, அவரிடம், சென்னையில், அரசு சார்பில், வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டி, கடிதங்கள் தந்தோம். அதை நிறைவேற்ற வேண்டும். அந்த கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளன. அந்த கோரிக்கையை தற்போது நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, 'ஓரிரு வாரங்களில், இந்த கோரிக்கை நல்லமுறையில் நிறைவேறும்' என அந்த கூட்டத்திலேயே, வாக்குறுதி தரப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக அரசின் வீட்டு வசதி வாரியம் சார்பில், சென்னையில் உள்ள திருமங்கலத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் அனுமதிச் சான்றிதழுக்காக, இந்த குடியிருப்புகள் காத்திருக்கின்றன. சான்றிதழ் கிடைத்தவுடன், மின்சாரம், குடிநீர் இணைப்புக்கான வசதிகள் செய்யப்பட்டு விடும். அதற்கு பின், எம்.பி.,க்களுக்கு, வீடுகளை ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

யாரெல்லாம் கடிதம் தந்துள்ளனரோ, அவர்களுக்கு, வீடுகள் தரப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஒரு முக்கிய நிபந்தனை உள்ளது. ஒதுக்கீடு பெறும், எம்.பி.,க்கு சொந்த வீடு இருக்க கூடாது. இதனால், சொந்த வீடு இருப்பதை காட்ட வேண்டாம். அது மட்டுமல்லாமல், எம்.பி.,க்களின் பெயரில் இந்த வீடுகளை ஒதுக்கீடு செய்தால், ஏதாவது பிரச்னை வரலாம் என்பதால், உறவினர்கள் பெயரில், வீடுகளை பெற்றுக் கொள்ளும்படி, எம்.பி.,க்களிடம் கூறப்பட்டுள்ளது.

மத்தியில், தற்போதுள்ள ஆட்சி, முழு பதவிக் காலத்திலும் நீடித்தாலும், இன்னும் ஒன்றரை ஆண்டுகள் தான் உள்ளன. அதிலும், குஜராத்தில், பா.ஜ., வெற்றி பெற்றால், லோக்சபாவுக்கு, முன்கூட்டியே தேர்தல் நடக்கப்போவது உறுதி. இதனால், லோக்சபா எம்.பி.,க்களின் பதவிக்காலம், இன்னும் ஓராண்டு கூட இல்லை. அதன்பின், அ.தி.மு.க.,வின் இந்த, 37 பேருமே, முன்னாள் எம்.பி.,க்கள்தான்.

கட்சியிலும், ஆட்சியிலும், தமிழக அரசியலிலும் அடிக்கும் சூறாவளியில், இந்த, 37 பேரில், எத்தனை பேர், மீண்டும் போட்டியிட வாய்ப்பு பெறுவர் என தெரியவில்லை. அப்படியே வாய்ப்பு பெற்றாலும், அதில் எத்தனை பேர் வெற்றி பெற்று எம்.பி., ஆவர் என்பதையும் திட்டவட்டமாக கூற முடியாது. முன்னாள் எம்.பி., என்ற சூழ்நிலையை எட்டவுள்ளவர்களுக்கு, அரசு சார்பில் வீடுகள் ஒதுக்கப்படுவது, பல தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

டில்லியில், மத்திய அரசு வீடுகளை வழங்குகிறது என்றால், அவை எல்லாம், எம்.பி.,யாக இருக்கும் வரை மட்டுமே. பதவி காலம் முடிந்தவுடன், காலி செய்து விட வேண்டும். ஆனால், திருமங்கலத்தில் நடக்கப்போவதோ, பலகோடி ரூபாய் மதிப்பிலான நிரந்தர ஒதுக்கீடு வீடுகள். இதனால், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.

Advertisement


‛'போதும்ணே, போதும்ணே... ரொம்ப போரடிக்குது'

ஜெயலலிதா காலத்தில், எம்.பி.,க்கள் கூட்டம் ராணுவ கட்டுப்பாட்டுடன் நடக்கும். சில நிமிடங்கள் மட்டுமே நடந்தாலும், அதில் அவர் மட்டுமே பேசுவார். மற்றபடி, 'கப்சிப்' தான். ஆனால், அவர் மறைவுக்கு பின், இரு அணிகளும் இணைந்த பின் நடந்த முதல் கூட்டத்தில், இரைச்சல் அதிகம். முதலில் வேணுகோபால் தான் பேசினார். அவர் பேசும்போதே, எஸ்.ஆர்.பாலசுப்ரமணியமும் பேசினார். பின், அவரையும் பேச விடாமல், எழுமலை குறுக்கிட, இறுதியாக, நவநீதகிருஷ்ணன் பேசினார். அவர் பேசத் துவங்கியதுமே, 'அய்யோ; போதும்ணே, போதும்ணே, போரடிக்குது' என, மற்ற, எம்.பி.,க்கள் வெளிப்படையாகவே கூச்சல் போட்டு, அவரை பேசவிடாமல் செய்தனர்.‛'வழக்குகள் உள்ளன ஞாபகம் கொள்ளவும்'

'மத்திய அரசு தாக்கல் செய்யும் சில மசோதாக்களை எதிர்க்க வேண்டும்' என, மூத்த எம்.பி.,க்கள் சிலர் பேசினர். அதிலும் சிலர், மத்திய அரசை எதிர்ப்பதே சரி என்றுகூட பேசினர். அதற்கு, மூத்த தலைவர் ஒருவர், 'ஜெயலலிதா காலத்தில், எவ்வாறு இருந்ததோ, அதுபோல பிரச்னைகளின் அடிப்படையில், தேவைக்கேற்றபடி, எதிர்க்கவும் ஆதரிக்கவும் செய்யலாம்' என்றார். மற்றொரு மூத்த தலைவரோ, 'கட்சி, ஆட்சி என, இரண்டையும் நிலைநிறுத்த எவ்வளவு போராடுகிறோம் என்பதும், எத்தனை வழக்குகள் நம் முன்னால் உள்ளன என்பதும் உங்களுக்கு தெரியும். அனைத்தையும், ஒரு முறைக்கு இருமுறை, யோசித்து நினைவில் வைத்து, குளிர்கால கூட்டத் தொடருக்கு செல்லுங்கள்' என கூறி, அனுப்பி வைத்தார்.- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kamaludin Muhamed - Guangzhou,சீனா
11-டிச-201722:52:46 IST Report Abuse

Kamaludin Muhamedதிருட்டு களவாணிகள். உழைத்து சாப்பிட வழி இல்லாத பிச்சைக்காரர்கள். இடி விழுந்து தான் சாகநேரிடும் .

Rate this:
Thiyagarajan - Bangalore,இந்தியா
11-டிச-201721:06:55 IST Report Abuse

Thiyagarajannallathu

Rate this:
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
11-டிச-201719:23:25 IST Report Abuse

K. V. Ramani Rockfortவந்தே மாதரம், பாரதமாதாக்கு ஜெ, இயற்கை தனது வேலையைக் காட்டுவதைத் தவிர வேறு யாராலும் இவர்களுக்கு பாடம் புகட்ட முடியாது,

Rate this:
மேலும் 48 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X