பொது செய்தி

இந்தியா

5 ஆண்டுகளில் 4 முறை உயர்த்தப்பட்ட எம்.பி.,க்கள் சம்பளம்

Updated : டிச 11, 2017 | Added : டிச 11, 2017 | கருத்துகள் (21)
Advertisement
பார்லிமென்ட் , Parliamentary, எம்.பி.,MP, சம்பளம்,Salary,  பார்லிமென்ட்  குளிர்கால கூட்டத்தொடர், Parliament Winter Session,
பார்லிமென்ட் நிலைக்குழு,Parliamentary Standing Committee, ஆராய்ச்சி படிப்பு,Research Study,  பட்ட மேற்படிப்பு , Post Graduation,

புதுடில்லி: இந்த பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் தாமதமாக துவங்குவது, அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்நிலையில், கடந்த காலங்களில் பார்லி.,யின் செயல்பாடு எப்படி இருந்தது என்ற புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.


மசோதாக்கள் நிறைவேற்றம் :


இதில், 1952 முதல் 1972 வரையிலான 20 ஆண்டுகள் சராசரியாக 128 முதல் 132 நாட்கள் பார்லி., குளிர்கால கூட்டம் நடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், சராசரியாக 66 முதல் 67 நாட்கள் வரையே பார்லி., கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த 10 ஆண்டுகளில் 47 சதவீதம் மசோதாக்கள், விவாதம் ஏதும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில் 24 சதவீதம் மசோதாக்கள் கடந்த கூட்டத் தொடரின் கடைசி 3 மணி நேரங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த, 10 ஆண்டுகளில் 31 சதவீதம் சட்டங்கள் பார்லி., நிலைக்குழு அல்லது ஆலோசனை கமிட்டியால், எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வு செய்யும் அவசியம் ஏற்படாததால் உடனடியாக இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


படித்தவர் குறைவு :


இதே போன்று, கடந்த 20 ஆண்டுகளில் ஆராய்ச்சி படிப்பு, ஆராய்ச்சி மேற்படிப்பு, பட்ட மேற்படிப்பு முடித்த எம்.பி.,க்களின் எண்ணிக்கை 62 சதவீதம் குறைந்துள்ளதாக பார்லி., புள்ளி விபர அறிக்கை கூறுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 30 வயதிற்கு உட்பட்ட எம்.பி.,க்கள் 71 சதவீதம் பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இரண்டாவது அல்லது 3வது தலைமுறை பார்லி., உறுப்பினர்களாக உள்ளனர். இதே போல் 40 வயதிற்கு உட்பட்ட எம்.பி.,க்களின் எண்ணிக்கை 57 சதவீதமாக இருந்துள்ளது.


சம்பளம் 4 முறை உயர்வு :


கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் எம்.பி.,க்களின் சம்பளம் 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 ஆண்டுகளில் பார்லி.,யில் 11 சதவீதம் மற்றும் மாநில சட்டசபைகளில் 9 சதவீதம் பேர் மட்டுமே பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
12-டிச-201710:25:14 IST Report Abuse
ஜெயந்தன் குஜராத் தேர்தல் முடியும் வரை பாராளுமன்றத்தை கூட்ட மாட்டார்கள்.......இன்னும் 2019 இல் பிஜேபி திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் என்பதே இருக்காது..மொத்தமாக பாராளு மன்றம் பூட்டப்படும்.....
Rate this:
Share this comment
kundalakesi - VANCOUVER,கனடா
12-டிச-201712:58:06 IST Report Abuse
kundalakesiஅதுதான் அராபிய வந்தேறிகளின் வயிற்றில் புளிய கரைக்குது...
Rate this:
Share this comment
ஜெயந்தன் - Chennai,இந்தியா
13-டிச-201716:06:33 IST Report Abuse
ஜெயந்தன்காதுல தொங்க வேண்டியதெல்லாம் கமெண்ட் போடுது......
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
12-டிச-201701:18:12 IST Report Abuse
Anandan இப்போது சொல்லுங்கள் இவர் ஏழைகளுக்கு பாடுபடும் பிரதமரா? எப்போது நாம் அடிமைத்தனத்தையும் இனவெறி இணைப்பாகுபாடுகளை கலைகிறோமோ அப்போதுதான் நம் நாடு உருப்படும். எல்லா கட்சிகளும் மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கும் நாம் இப்படி இருக்கும் வரை.
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
11-டிச-201721:12:27 IST Report Abuse
Poongavoor Raghupathy What is the contribution of MPs for the poor people. I search and not able to get any. If anybody knows MPs contribution please comment. MPs salary is raised whenever they feel like. Is it for supporting BJP it is not clear. Modiji says that his Govt is for the poor Is it really so. This force us to think that the power is in wrong hands. How this salary rise is justified. The authourities should spell out.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X