ஆர்.கே.நகரில் ஓட்டுச்சாவடிக்கு 250 ஓட்டுகள் பெற கட்சிகள் போட்டா போட்டி! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆர்.கே.நகர் தேர்தல், RK Nagar election, ஓட்டுகள், votes,பணப் பட்டுவாடா, தேர்தல் கமிஷன்,Election Commission, பறக்கும் படை, Flying squad, சட்டசபை தேர்தல்,Assembly Election, தி.மு.க.,DMK, அ.தி.மு.க.,AIADMK, தினகரன் , Dinakaran,ஜெயலலிதா,Jayalalithaa, இரட்டை இலை,irattai ilai, கூடுதல் கமிஷனர் ஜெயராம், Additional Commissioner Jayaram,இணை கமிஷனர் சுதாகர், Associate Commissioner Sudhakar

சென்னை, ஆர்.கே.நகரில், ஒரு ஓட்டுச்சாவடிக்கு, 250 ஓட்டுகளை பெற, வியூகம் அமைத்துள்ள கட்சிகள் இடையே, போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது. இதற்காக, இக்கட்சிகள் செய்யும் பணப் பட்டுவாடா தொடர்பான புகார்கள், தினமும் வந்து குவிவதால் திணறும் தேர்தல் கமிஷன், அறிக்கை அளிக்கும்படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பட்டுவாடாவை தடுக்க, பறக்கும் படையினர், விடிய விடிய அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.

ஆர்.கே.நகர் தேர்தல், RK Nagar election, ஓட்டுகள், votes,பணப் பட்டுவாடா, தேர்தல் கமிஷன்,Election Commission, பறக்கும் படை, Flying squad, சட்டசபை தேர்தல்,Assembly Election, தி.மு.க.,DMK, அ.தி.மு.க.,AIADMK, தினகரன் , Dinakaran,ஜெயலலிதா,Jayalalithaa, இரட்டை இலை,irattai ilai, கூடுதல் கமிஷனர் ஜெயராம், Additional Commissioner Jayaram,இணை கமிஷனர் சுதாகர், Associate Commissioner Sudhakar


கடந்த சட்டசபை தேர்தலின் போது, ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்த வாக்காளர்களில், 45 ஆயிரம் பேர், இரட்டை பதிவு, இடம் மாறியது உட்பட, பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது, 2.28 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம், 256 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.ஒரு ஓட்டுச்சாவடியில், 500 - 1,300 வாக்காளர்கள் உள்ளனர். தி.மு.க., - அ.தி.மு.க., - தினகரன் தரப்பு ஆகியவை, தேர்தலில் வெற்றி பெற, ஒரு ஓட்டுச்சாவடிக்கு, குறைந்தது, 250 ஓட்டுகளை பெற திட்டமிட்டு உள்ளன.

ஒரு ஓட்டுச்சாவடிக்கு, 250 ஓட்டுகள் வாங்கினால், 64 ஆயிரம் ஓட்டுகள் கிடைக்கும்.வாய்ப்புஎந்த கட்சி, 64 ஆயிரம் ஓட்டுகளை தக்க வைத்து, அதனுடன், கூடுதல் ஓட்டுகள் வாங்குகிறதோ, அந்த கட்சிக்கு, வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.க., 57 ஆயிரம் ஓட்டுகள் வாங்கியது.


தற்போது, ஜெயலலிதா இல்லாதது; அ.தி.மு.க., வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல்; ஊழல் புகார்;கூட்டணி கட்சிகளின் பலம் போன்ற காரணங்களால், கூடுதலாக, 20 ஆயிரம் ஓட்டுகள் கிடைக்கும் என, அக்கட்சி கருதுகிறது.
தினகரன் தரப்பு, 250 ஓட்டுகளை பெற முடியாவிட்டாலும், அதில் பாதியாவது கிடைத்து விட்டால், அ.தி.மு.க.,வுக்கு செல்லும், 32 ஆயிரம் ஓட்டுகள் பிரிகிறது. இதன் வாயிலாக, அ.தி.மு.க., வெற்றியை தடுத்து விட முடியும் என,கருதுகின்றனர்.

வியூகம்


இதை தடுக்க, ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வும், ஒரு ஓட்டுச்சாவடிக்கு, 250 ஓட்டுகள் என, 64 ஆயிரம் ஓட்டுகளை தக்கவைக்க, வியூகம் வகுத்துள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைத்து உள்ளதாலும், அனைத்து வாக்காளர்களுக்கும் தாராளமாக பண பட்டுவாடா செய்வதாலும், கூடுதலாக, 30 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தால், வெற்றி நிச்சயம் என, அக்கட்சி எதிர்பார்க்கிறது.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு, பணப்பட்டுவாடா நடப்பதாக, தேர்தல் கமிஷனுக்கு,புகார்கள் வந்தபடி உள்ளன. தி.மு.க., - பா.ஜ., போன்ற கட்சிகளும், புகார் மனு அளித்துள்ளன.'தேர்தல் விதிமீறல்களை தடுக்க, காவல் துறையினரும், தமிழக அதிகாரிகளும், போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை' என, தேர்தல் பார்வையாளர்களும், தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

புகார்கள் குவிவதால், தொகுதியில் என்ன நடக்கிறது என, அறிக்கை அளிக்கும்படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

ஆலோசனை அதைத் தொடர்ந்து, பறக்கும் படை அதிகாரிகள், விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர்.

பண பட்டுவாடா புகாரால், தேர்தல் கமிஷன், இடைத்தேர்தலை ரத்து செய்து விடுமோ என்ற சந்தேகம், கட்சிகளிடம் எழுந்துள்ளது. இதனால், வாக்காளர்களுக்கு, பண பட்டுவாடா செய்வதை தற்காலிகமாக நிறுத்தி, தேர்தல் நெருக்கத்தில் வழங்கலாமா என்பது குறித்தும், கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.

'வாட்ஸ் ஆப்' வாயிலாக குவியும் புகார்கள்


'ஆர்.கே.நகர் தொகுதியில், தேர்தல் தொடர்பாக நடக்கும் முறைகேடுகள் குறித்து, 99405 99465 என்ற, பிரத்யேக, 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு புகார் அனுப்பலாம்' என, போலீசார் தெரிவித்திருந்தனர். அந்த எண்ணிற்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

அரசியல் கட்சியினர், வீட்டிற்கு அடிக்கடி வந்து, தங்களை துாங்க கூட விடாமல் தொல்லை கொடுத்து வருவதாகவும், பணப் பட்டுவாடா எப்படி நடக்கிறது; அதில், ஈடுபடுவோர் யார் என்பது உள்ளிட்ட விபரங்களையும், 'வீடியோ'வாக எடுத்து, போலீசாரின் பிரத்யேக, 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு, பொதுமக்கள் அனுப்புகின்றனர். பொதுமக்களின் இந்த புகார்கள், போலீசாரை திக்குமுக்காடச் செய்துள்ளன.

இது குறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆர்.கே.நகர் தொகுதியில், தேர்தல் தொடர்பான பாதுகாப்புக்கு, பொதுமக்களின் பங்களிப்பு திருப்தியாக உள்ளது.அவர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து, பதிலும் தெரிவித்து விடுகிறோம். தொகுதி முழுவதும் கூடுதல் கமிஷனர், ஜெயராம், இணை கமிஷனர், சுதாகர் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (56)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
rauf thaseem - mawanella,இலங்கை
13-டிச-201707:12:30 IST Report Abuse

rauf thaseemஅரசியல் வாதிகள் நம்மை காலம் பூரா ஏமாத்துறானுக , நம்மளுக்கு அவனுகள ஏமாத்த கிடக்கிற சந்தர்ப்பம் தேர்தல் கொடுக்கிறவனுடஎல்லாம் வாங்கிக்க வேண்டியது , அவன் சொந்த கசையா கொடுக்கிறான் நம்மகிட்ட கொள்ளை அடிக்கலாமென்ற தைரியத்தில் கொடுக்கிறான் , பணப் பட்டு வாடாவை நிறுத்த ஒரே வழி எல்லண்டையும் வாங்கணும் , அப்பால நம்ம யோசித்து நல்லவனா பாத்து குத்த வேண்டியது , துட்டு வாங்கினா அவனுக்கு போடணுமுன்னு விதியா பொழைக்கிற வழியப்பருங்கண்ணா \

Rate this:
தாமரை - பழநி,இந்தியா
13-டிச-201700:00:03 IST Report Abuse

தாமரை தமிழக அரசியல் காட்சிகள்: நாங்கள் தமிழர்களை வாழவைக்கவே அவதாரமெடுத்துள்ளோம்.அதனால்தான் கை நிறைய காசைக்கொடுத்து ஜாலியாக செலவு செய்யச் சொல்கிறோம். வாக்காளர்கள்: நாங்கள் இனமானத் தமிழர்களாக்கும். காமராஜரையே விரட்டியடித்த வீரப்பரம்பரையாக்கும். யார் தடுத்தாலும் நாங்கள் வாங்குவதை வாங்குவோம். தமிழகத் தேர்தல் கமிஷன்: ங்கே........

Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
12-டிச-201720:20:15 IST Report Abuse

Rafi தேர்தல் கமிஷன் வெட்கப்பட வேண்டும். சென்ற தேர்தல் ரத்தான போதே குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் பணம் கொடுப்பதற்கு பயம் வந்திருக்கும், நடவடிக்கை இல்லை என்கின்றபோது, தைரியமாக செயல் படுகின்றார்கள்.

Rate this:
மேலும் 53 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X