வசூலில் சக்கை போடு... சுகாதாரத்தில் வெட்கக்கேடு! லாட்டரி நிறைந்த செரங்காடு... லஞ்சம் வாங்கும் சாபக்கேடு!| Dinamalar

வசூலில் சக்கை போடு... சுகாதாரத்தில் வெட்கக்கேடு! லாட்டரி நிறைந்த செரங்காடு... லஞ்சம் வாங்கும் சாபக்கேடு!

Added : டிச 12, 2017 | |
அன்று விடுமுறை நாள் என்பதால், வீட்டில் அமர்ந்து, ஹாயாக வாரமலர் படித்துக்கொண்டிருந்தாள் மித்ரா, காலிங் பெல் ஒலிக்கவே, கதவை திறந்து, ""ஓ... வாங்க, வாங்க...'' என்றவாறே சித்ராவை வரவேற்று, உள்ளே அமர வைத்தாள்.""ஆர்.கே., நகர் இடைத்தேர்தல் பிரசாரம், ஸ்பீடாக போகுதே,'' என்றபடியே, டீப்பாய் மேலிருந்த பேப்பரை புரட்டினாள் சித்ரா.""அங்க எலக்ஷனை வெச்சு, இங்க கலெக்ஷனில் சிலர்
வசூலில் சக்கை போடு... சுகாதாரத்தில் வெட்கக்கேடு! லாட்டரி நிறைந்த செரங்காடு... லஞ்சம் வாங்கும் சாபக்கேடு!

அன்று விடுமுறை நாள் என்பதால், வீட்டில் அமர்ந்து, ஹாயாக வாரமலர் படித்துக்கொண்டிருந்தாள் மித்ரா, காலிங் பெல் ஒலிக்கவே, கதவை திறந்து, ""ஓ... வாங்க, வாங்க...'' என்றவாறே சித்ராவை வரவேற்று, உள்ளே அமர வைத்தாள்.""ஆர்.கே., நகர் இடைத்தேர்தல் பிரசாரம், ஸ்பீடாக போகுதே,'' என்றபடியே, டீப்பாய் மேலிருந்த பேப்பரை புரட்டினாள் சித்ரா.""அங்க எலக்ஷனை வெச்சு, இங்க கலெக்ஷனில் சிலர் குறியாக இருக்காங்க,'' என்றவாறு, டீகோப்பையை நீட்டினாள் மித்ரா.அதை வாங்கி பருகிய சித்ரா, ""அப்படியா? யாரு, எங்க வசூல் பண்றாங்க,'' என்று, ஆச்சரியத்தோடு கேட்டாள்.""லிங்கேஸ்வரர் இருக்கும் ஊர்ல தான் இந்த கூத்து. அங்கிருக்கிற, "டாஸ்மாக்' பார்களுக்கு போன கட்சி நிர்வாகி ஒருத்தரு, ஒவ்வொரு பாரிலும், "தேர்தல் செலவுக்கு, 10 ஆயிரம் ரூபாய் கொடுங்க'ன்னு கட்டாயப்படுத்தி கேட்டிருக்காரு. அதெல்லாம் தர முடியாதுன்னு, பார் உரிமையாளர் தரப்புல கறாரா சொல்லீட்டாங்க,'' என்றாள் மித்ரா.""கட்சிக்காரங்கள எதிர்க்கிற அளவுக்கு, அவுங்களுக்கு தைரியம் வந்துருச்சா?'' என்று, சித்ரா குறுக்கிட்டாள்.""பார் நடத்தறவங்க, ஆளுங்கட்சிக்காரங்க; வசூலுக்கு போனது, எதிர்க்கட்சி பிரமுகர். அதனால, முடியாதுன்னு சொல்லிட்டாங்க. கோபமடைந்த எதிர்க்கட்சி பிரமுகர், பார்களின் விதிமீறலை பத்தி, "டாஸ்மாக்' அதிகாரிகளுக்கு பெட்டிஷன் போட்டுட்டாரு,'' என்றாள் மித்ரா.""அப்புறம் என்ன ஆச்சு?'' என்று ஆர்வமானாள் சித்ரா. ""அதிகாரிகளும் "சுண்டக்காய்' சைசுக்கு பைன் போட்டாங்களாம்,'' என்று மித்ரா கூறியதும், ""கட்டப்பஞ்சாயத்து செய்யும் பழனிசாமி' என்ற பேப்பர் செய்தியை,'' சித்ரா சத்தமாக வாசித்தாள்.""நானும், ஒரு வசூல் மேட்டரை சொல்றேன். கரூர் மாவட்டத்தில் இருந்து, திருப்பூருக்கு வரும் மணல் லாரிகளை அனுமதிக்க, மொத்தமா ஒரு அமவுன்ட் போலீசுக்கு போயிடுதாம். அந்த பகுதியை சேர்ந்த, மூன்று முக்கிய கம்பெனிகளோட லாரிகள், மணல் லோடு ஏத்தி வரும்போது, காங்கயம், ஊத்துக்குளி போலீஸ் எல்லைகளில், எந்த தொந்தரவும் பண்ணக்கூடாதுன்னு ஒப்பந்தமாம். திருப்பூர் சிட்டி லிமிட்ல, அவங்க தலையிட மாட்டாங்களாம். இது எப்படி இருக்கு,'' என்றவாறே, டீ கோப்பையை கீழே வைத்தாள் சித்ரா.""ஆனா, மணல் லாரிகளை கண்டுக்காம விடற அவங்க, எம்சாண்ட் லோடு வர்ற லாரிகளை நிறுத்தி வசூல் பண்றாங்களாம். முன்ன மாதிரி, 10, 20 எல்லாம் வாங்கறதில்லை. குறைந்த பட்சம், 100 ரூபாய் கேக்கறாங்களேன்னு, லாரி டிரைவருங்க, தலையில் அடிச்சுக்கறாங்க,'' என்றாள் மித்ரா.""கதவு இல்லையே; எப்படி "சீல்' வைக்கறதுனு, தாசில்தாரே குழம்பீட்டாராம்,'' என்ற சித்ரா, ரெவின்யூ டிபார்ட்மென்ட் மேட்டரை ஆரம்பித்தாள்.""அட, இப்படியெல்லாம் காமெடி நடக்குதா?'' என்றாள் மித்ரா.""ஆமா. நல்லாறு சர்வேயை பார்த்துட்டு வந்த சப்கலெக்டர், வழியில் இருக்கிற பார், காலை, 9:00 மணிக்கே செயல்பட்டிருக்கிறதை பார்த்து, உள்ளே நுழைஞ்சுட்டார். அங்கு, காலையிலேயே வியாபாரம் பட்டய கிளப்பிட்டு இருந்துருக்கு. ரொம்பவே "நாறிக்கிடந்ததை' பார்த்து டென்ஷன் ஆன சப்கலெக்டர், அங்கிருந்த ஊழியர்களை வறுத்தெடுத்திட்டாராம். அப்புறமா, பாருக்கு "சீல்' வைக்க, தாசில்தார் போயி பார்த்திருக்காரு,''என்று சித்ரா சொன்னாள்.""ஓ! அப்புறம் என்னாச்சு,'' என்றாள் மித்ரா.""டாஸ்மாக் கடை "பார்'னா சும்மாவா? "நல்லா பார்த்துக்கறோம்' னு, இன்னொரு ஆளு மூலமா, தாசில்தார்கிட்ட பேசியிருக்காங்க. தாசில்தாரும் உடனே "சீல்' வைக்காம, தாலுகா ஆபீசுக்கு திரும்பி போயிட்டாரு. பத்திரிகைகாரங்க "சீல்' வச்சாச்சான்னு தாசில்தார்கிட்ட கேட்டப்ப, சப்கலெக்டர் "சீல்' வைக்க சொன்னாருங்க. ஆனா, கதவு இல்லையே,'னு இழுத்திருக்காரு,''""அதுக்கு அப்புறம், சப்கலெக்டர் ஆபீசுல இருந்து விசாரிச்ச பிறகு தான், ஓடிப்போயி, "சீல்' வச்சுட்டு வந்திருக்காரு. அதுக்குள்ள, உள்ளே இருந்த சரக்கை, பத்திரமா வெளியே கொண்டு போயிட்டாங்களாம்,'' என, நீளமாக விளக்கினாள் சித்ரா.""பேசாம "பைன்' கட்டியிருக்கலாம்; கோர்ட்டுக்கு போனதால, வினை வந்திருச்சுனு ஒரே பேச்சா இருக்கு,'' என்றாள் மித்ரா.""நீ என்ன சொல்ல வர்றேனு புரியலையே,'' என்று சித்ரா தலையை தேய்த்து கொண்டாள்.""மண் லாரி மேட்டரை சொல்றேன். "லைசென்ஸ் இல்லாம "கிராவல்' மண் எடுத்துட்டுப்போற லாரியை பிடிச்சா, 25 ஆயிரம் ரூபா "பைன்' கட்டி, எடுத்துட்டு போவாங்க. திருப்பூர் லிமிட்ல லாரி அடிக்கடி மாட்டுதேன்னு கோபப்பட்ட சிலர், கோர்ட்டுக்கு போயிருக்காங்க. ஆனா, கோர்ட் சில வழிகாட்டுதல் சொல்லியிருக்கு,'' என்று மித்ரா கூற, ""அதென்ன?,'' என்று ஆர்வத்தோடு கேட்டாள் சித்ரா.""லைசென்ஸ் இல்லாத லாரிகளை பிடிச்சா, அதன் உரிமையாளரே இனி, நேரில் ஆஜராகி, "பைன்' கட்டணும்னு சொல்லியிருக்காங்க. பேசாம இருந்திருந்தா, 25 ஆயிரம் அபராதத்தோட போயிருக்கும். இப்ப, 60 ஆயிரம் ரூபாய் வரைக்கும் "பைன்' போட முடியும்னு ரெவின்யூ அதிகாரிங்க, சொல்றாங்களாம்,'' என்று கூறி மித்ரா சிரித்தாள்.""ஓகே..பா...! இந்த போலீஸ் மேட்டரை கேளு. "சிட்டி' போலீஸ்காரங்க, "மைக் 23' ஐ கண்டாலே அலறியடிச்சு ஓடறாங்க. ஏன்னா, "டிடி' கேஸ் போடுங்கன்னு, ரொம்ப "டார்ச்சர்' பண்றாராம். அதனால, கணக்கு காட்ட வேண்டுமென்ற கட்டாயத்தில், வேலை முடிஞ்சு வீட்டுக்கு போற, பனியன் தொழிலாளிகளை பிடித்து, அபராதம் போட்டு தீட்டுறாங்களாம். "ஆனா, டூவீலரில் போறவங்களை பிடிக்கும் போலீஸ்காரங்க, காரில் "புல்லா' போறவங்களை பிடிக்கிறதில்லை,'ன்னு, பாதிக்கப்பட்ட தொழிலாளி ஒருத்தரு, ஸ்டேஷன் வாசலிலேயே சத்தம் போட்டாராம்,'' என்று சித்ரா கூறியதும், ""போலீஸ், எப்பவுமே இப்படித்தான். அதிகாரிங்க சொன்னா, மக்களை போட்டு வதைக்கிறது,'' என்று மித்ரா சலித்து கொண்டாள்.""அடுத்த விஷயத்தை கேளு. கமிஷனர் "சாட்டையை' சுழற்றுவதால், சிட்டியில், லாட்டரி, மதுவிற்பனை, புகையிலை பொருட்கள் வழக்கு அதிகமாக போடறாங்க தெரியுமா? அப்படியிருந்தும்கூட, செரங்காட்டில் லாட்டரி ஓஹோன்னு விக்கிதாம். என்ன காரணம்னு விசாரிச்சா, செரங்காட்டில் ரோட்டுக்கு அந்தப்பக்கம் தெற்கு, இந்தப்பக்கம் ரூரல் போலீஸ் லிமிட் வருதாம்,''"" லாட்டரி விற்பனை குறித்து போலீசுக்கு மக்கள் சொன்னவுடன், "ஸ்பாட்'டுக்கு போலீஸ் போறதுக்குள்ள, விசுவாச போலீசார், லாட்டரி விற்கிற ஆளுக்கு, தகவல் "பாஸ்' பண்றாங்களாம். அப்புறம் போலீஸ் போய் பார்த்துட்டு, "இது எங்க லிமிட் கிடையாது,' ன்னு கை கழுவிட்டு வந்துடறாங்களாம். ஏற்கனவே, செரங்காட்டில், போலீஸ் எட்டி பார்க்கிறது கிடையாது. கமிஷனர் "ஜெட்' வேகத்தில் போகணும்னு நினைத்தாலும், நம்ம ஏ.சி., அப்புறம் இன்ஸ்பெக்டர்களால, மாட்டு வண்டி வேகத்தில் தான் போக வேண்டியிருக்குது,'' என்று ஆதங்கப்பட்டாள் சித்ரா.""ஆமா, நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். நமக்கு வரும் "இன்பர்மேஷன்' யாரு கொடுக்கிறாங்கன்னு சொல்லிட்டு, சில இன்ஸ்பெக்டர்கள் துப்பறியும் வேலை பார்க்குறாங்களாம். இது உண்மையா?'' என்று மித்ரா கேள்வி எழுப்பினாள்.""நூத்துக்கு நூறு, கரெக்ட், இது விஷயத்தில, ரூரல் இன்ஸ்பெக்டர், "அந்த கறுப்பு ஆட்டை சீக்கிரம் பிடிப்பேன்,' என்று, சபதமே போட்டிருக்கிறாராம்,'' என்று சிரித்த சித்ரா, ""போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஸ்டேஷனுக்கு சரியாக வருகிறார்களா? கரெக்டா, ரோந்து போறாங்களா? அப்படின்னு, கண்காணித்து சொல்லணும்னு, கமிஷனர் "ஸ்டிரிக்டா' சொல்லிட்டாராம். அதனால, ஐ.எஸ்., போலீஸ்காரங்க, இன்ஸ்பெக்டர் எங்கே இருக்கிறாருன்னு, கழுகு போல, "வாட்ச்' பண்றாங்களாம்,'' என்று முடித்தாள்.""ஓகே, நேரமாயிடுச்சு. ஐயப்பன் கோவிலுக்கு இப்ப போனாத்தான், ஒரு மணி நேரத்திலயாவது சாமி கும்பிட முடியும்,'' என்று மித்ரா "அலர்ட்' செய்யவே, சித்ரா, வண்டியை நோக்கி சென்றாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X