thanjavur | தஞ்சை டாக்டர் செந்தில்குமாரின் நெஞ்சை அள்ளும் படங்கள்.| Dinamalar

தஞ்சை டாக்டர் செந்தில்குமாரின் நெஞ்சை அள்ளும் படங்கள்.

Updated : டிச 12, 2017 | Added : டிச 12, 2017 | கருத்துகள் (2)
Advertisement

தஞ்சை டாக்டர் செந்தில்குமாரின் நெஞ்சை அள்ளும் படங்கள்.


டாக்டர் செந்தில்குமார் எம்பிபிஎஸ்,எம் எஸ்.,
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் ஆர்த்தோ பிரிவு தலைவர்

பார்த்தால் இவரிடம்தான் வைத்தியம் பார்ப்பேன் என்று நோயாளிகள் இவரது அப்பாயிண்மெண்டிற்காக வாரக்கணக்கில் ஏன் மாதக்கணக்கில் கூட காத்திருக்கின்றனர்.காரணம் இவரது நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்தான்.
இவருக்குள் ஒரு தமிழ் ஆர்வலர் இருக்கிறார்,அந்த ஆர்வத்தை கவிதையாக்கும் கவிஞர் இருக்கிறார், உன்னதமான ஒவியர் இருக்கிறார்,தஞ்சையை அங்குலம் அங்குலமாக நேசிக்கும் ரசிகர் இருக்கிறார்,தான் ரசித்ததை ரசனையாக படமாக்கும் புகைப்படக்கலைஞர் இருக்கிறார்.

சமீபகாலமாக இந்த புகைப்படக்கலைஞர் செந்தில்குமார் நட்பு வட்டத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாகி வருகிறார்,காரணம் எது மாதிரியும் இல்லாத இவரது புதுமாதிரியான புகைப்படங்கள்.
பரபரப்பாக இயங்கக்கூடியவர்கள் ஒரு 'ரிலாக்ஸ்' தேவைப்படும் போது தங்களுக்கு பிடித்த விஷயங்களில் ஈடுபட்டு தங்களை 'ரீசார்ஜ்' செய்துகொள்வர்.அது போல டாக்டர் செந்தில்குமார் போட்டோக்கள் எடுத்து தன்னை புதுப்பித்துக் கொள்கிறார்.

திருச்சி நிக்கான் டெக்னிக்கல் கிளப்பின் பயிற்சியாளர் புலிவலம் ரவியை ஆசானாகக்கொண்டு புகைப்படம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார், இப்போது குருவின் பெருமை மிகு சிஷ்யனாகிவிட்டார்.இருவரும் சேர்ந்து காலை நான்கு மணிக்கு கிளம்பிவிட்டால் பிறகு மெமரி கார்டும் கேமிரா பேட்டரிகளும் 'எங்களால் இனியும் முடியாது' என்று கெஞ்சிய பிறகே வீடு திரும்புவர்.
டாக்டர் எடுத்த பறவை சம்பந்தப்பட்ட படங்கள் பலரது மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர் ஸ்கீரினில் முகப்பாக இருந்து வருகிறது, இருந்துவிட்டு போகட்டும் நான் எனது சந்தோஷத்திற்காக மட்டும் படமெடுத்து வருகிறேன் எனது படங்கள் மற்றவர்களுக்கும் சந்தோஷம் தரும் என்றால் ஏன் தடுக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய தாராளமனதுக்காரர்.

சமீபத்தில் திருமணம் முடித்த இவர் தன் காதல் மணைவியுடன் தாய்லாந்து சென்று திரும்பியிருக்கிறார்,உடன் எடுத்துச் சென்ற கேமிரா தாய்லாந்தின் அழகை அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது.பிரம்மாண்ட புத்தரின் வித்தியாசமான தோற்றமும் இரவு நேர அலங்காரங்களும் பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்கின்றன.
மிகுந்த மனித நேயமும் எளிமையும் இனியையும் நிறைந்த இவரது குணாதிசயங்கள் எடுக்கும் படங்களிலும் எதிரொலிக்கிறது.ஒவ்வொரு உயிரும் மதிப்புமிக்கது என்பதால் நோய் தீர்க்கும் கடமைக்கு முன்னுரிமை கொடுப்பதால் மொபைல் போன் அவருக்கு இரண்டாம் பட்சமே, ஆகவே அவரது முகநுால் விலாசம் கிழே கொடுக்கப்பட்டு உள்ளது அதில் உள்நுழைந்து அவரைப்பற்றி தெரிந்து கொண்டு பின் அவரைத்தொடர்வதும், தொடர்புகொள்வது உங்கள் விருப்பம்.நன்றி!

முகநுால் முகவரி:https://www.facebook.com/profile.php?id=100001195394184
எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாரி வேல் - வேதாரண்யம்,இந்தியா
13-டிச-201709:54:13 IST Report Abuse
பாரி வேல் எனது ஆஸ்தான மருத்துவர் Senthil Kumar அவர்களைப் பற்றி தினமலர் பொக்கிஷம் பகுதியில்....மேலும் ஒரு பொக்கிஷம் .
Rate this:
Share this comment
Cancel
Kaviarasan derm - Mayiladuthurai,இந்தியா
13-டிச-201708:44:00 IST Report Abuse
Kaviarasan derm Congratulations dr Senthil, you are real proud of doctor's profession. Managing four professions at a time like ortho, personal life, photography, married life is amazing. The photos which I personally love it .lots of innovations embedded in each clicks. in Best wishes. Thanks dhinamalar for bringing out born talentees like dr Senthil.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X