சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏடிஎம் கொள்ளை: நாமக்கல்லில் வட மாநில கொள்ளையர்கள் கைது

Updated : டிச 14, 2017 | Added : டிச 14, 2017 | கருத்துகள் (56)
Share
Advertisement
நாமக்கல்,Namakkal,  கொள்ளை,Robbery, கோவை ஏடிஎம்,Coimbatore ATM,  வட மாநில கொள்ளையர்கள், North Indian robbers, போலீஸ், police, அரியானா, Haryana, ஹெலிகேம் , Heligame,

நாமக்கல்: கோவையில் ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, வட மாநில கொள்ளையர்களை போலீசார் சுமார் 30 கி.மீ., தூரம் விரட்டி சென்று பிடித்தனர்.

கோவையில் விளாங்குறிச்சியில் உள்ள இரண்டு ஏடிஎம் மையங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் நாமக்கல் வழியாக வட மாநிலங்களுக்கு தப்பி செல்வதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் சுங்கச்சாடியில், கோவை மற்றும் நாமக்கல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சினிமா பாணியில் வடமாநில கொள்ளையர்கள் கைது

அப்போது அதிகாலை 5 மணியளவில் அரியானா பதிவெண் கொண்ட கார் ஒன்றை மறித்து சோதனை செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில், காரில் இருந்தவர்கள் கொள்ளையர்கள் என தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அந்த வழியாக வந்த மற்றொரு வெளி மாநில கார் நிற்காமல் சென்றது. இதனையடுத்து அந்த காரை துரத்தி சென்றனர். சுமார் 30 கி.மீ., தூரம் சென்ற பின்னர், பொம்மைக்குட்டை மேடு என்ற இடத்தில் காரை நிறுத்திவிட்டு தப்பி சென்றனர். அவர்களை விடாமல் துரத்தி சென்ற போலீசார், கொள்ளையர்களில் ஒருவன் வீட்டு மாடி ஒன்றில் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்தனர். பொது மக்கள் உதவியுடன் அவனை பிடித்தனர்.

மேலும் 2 பேர் அங்கிருந்த சோளக்காட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு ஹெலிகேம் கொண்டு வரப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி நடந்தது. அதில், சோளக்காட்டில் பதுங்கியிருந்த 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
14-டிச-201718:09:07 IST Report Abuse
Somiah M திருடுவது குற்றம் .அதிலும் மாநிலம் விட்டு மாநிலம் வந்து இங்கு திருடுகிறார்கள் என்றால் நம்மை பற்றிய குறிப்பாக நமது மக்கள் மற்றும் நமது காவல் பற்றிய அவர்களின் மதிப்பீடு மிகவும் மோசமாக இருக்கிறது என்றுதானே அர்த்தம் .
Rate this:
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
14-டிச-201717:38:05 IST Report Abuse
DSM .S/o PLM நாங்க எல்லை தாண்டி மீன் திருடுவோம் பிடிச்சா தமிழன் மீது அடக்கு முறை னு சொல்வோம் .. எல்லைதாண்டி சந்தன மரம் திருடுவோம். கைது செஞ்சா கூவுவோம். போற ஊர்ல எல்லாம் உதை வாங்கினாலும் தமிழன் னு கூவுவோம் .. ஆனா உலகம் முழுதும் பரவி ஒழுங்கா தொழில் உத்தியோகம் பார்ப்போரை உண்மையான தமிழன் என்று ஒப்புக்கொள்ள மாட்டோம் ..அதே சமயம் அடுத்த ஊர்க்காரன் இங்கே வந்து நேர்மையாக தொழில் செய்தாலும் அவன் இங்கே கொள்ளையடிக்கிறான். நம்ம ஊர்லயே வந்துநம்மிடம் வியாபாரம் செய்கிறான் என்றெல்லாம் ஏளனம் பேசுவோம். பெரும்பாலும் வடஇந்தியர்களில் இங்கே வந்து கொள்ளை அடித்து மாட்டிக்கொள்வது மார்க்கத்தவர்கள் தான் சமீப காலங்களில் வங்க தேச மார்கத்தியவர்களின் ஊடுருவல் அதிகமாகி விட்டது. இதெல்லாம் விடுத்து ஆகா வட இந்தியனா உடனே எழுதி தள்ளு . ஹிந்திக்காரன் கொள்ளையன் நம் தமிழ் அண்டா போல உழைப்பவன் இல்லை... ஆகா ...ஓகோ ...என்றெல்லாம். உலகின் எல்லா மூலைகளிலும் திருடர்கள் கொள்ளையர்கள் உள்ளனர் .. ஆனால் திருடி மாட்டி கொண்ட பிறகும் தமிழன் மானஸ்தன் அப்பாவி ஏமாளி என்றெல்லாம் சப்பை கட்டு கட்டுவது நாமாகத்தான் இருக்கும்
Rate this:
மீசநேசன் - chennai,இந்தியா
14-டிச-201720:55:27 IST Report Abuse
மீசநேசன்மாரடிக்கிறவரே உங்க டி.ஏன்.ஏ.வை பரிசோதனை செய்யுங்கள். ஏன்னா நீங்க உங்களையே திட்டுகிறீர்கள்....
Rate this:
Cancel
டீகடை மஸ்தான் பாய் - Teakadai Now Thee Kadai, Gujarath,இந்தியா
14-டிச-201716:55:26 IST Report Abuse
டீகடை மஸ்தான் பாய் ஹரியானா மாநில முதல்வர் இதற்காக வெட்கப்பட வேண்டும்.உபி ராஜஸ்தான் வரிசையில் அவ்வப்போது அரியானா கேடுகெட்ட விஷயங்களில் கைகோர்த்து இருப்பது இந்தியாவிற்கு மேற்கொண்டு கேவலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X