பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
   ஜெ., உடல் நிலை, குறித்து,பொய்யான தகவல்,சொன்னது... உண்மையே !

'ஜெ., உடல் நிலை குறித்து, பொய்யான தகவல் சொன்னது உண்மையே' என, சென்னை,அப்பல்லோ மருத்துவ குழுமத் தலைவர், பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். சட்டம் - ஒழுங்கு பிரச்னையை தடுப்பதற்காகவே, அவ்வாறு கூறியதாகவும், அவர் திடீர் விளக்கம் அளித்துள்ளார். இதனால், அப்பல்லோ மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில், ஜெ., அனுமதிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.

   ஜெ., உடல் நிலை, குறித்து,பொய்யான தகவல்,சொன்னது... உண்மையே !

முதல்வராக இருந்த ஜெ., 2016 செப்., 22ல், உடல் நலக்குறைவு காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 'அவர் காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; விரைவில், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார்' என, மருத்துவமனை சார்பில், அப்போது அறிக்கை வெளியிடப்பட்டது.

அதை அனைவரும் நம்பினர்; ஆனால், அவர் வீடு திரும்பவில்லை.சந்தேகங்கள்'அவர் உடல் நலம் தேறி விட்டார்; இட்லி சாப்பிடுகிறார்; கிச்சடி சாப்பிடுகிறார்; நர்சுகளுடன்

கலந்துரையாடினார்; அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்' என, பல தகவல்கள் வெளியாகின. அமைச்சர்களும், ஜெ.,வை சந்தித்ததாக, பொய் கூறினர். ஆனால், ஜெ., வீடு திரும்பாமல், டிச., 5ல், மரணமடைந்தார்.இது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. அவரது மரணத்தில் உள்ள சந்தேகங்களுக்கு விடை காண, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் விசாரணையில், பல்வேறு உண்மைகள் வெளிவரத் துவங்கி உள்ளன. அமைச்சர்கள், 'ஜெ.,வை மருத்துவமனையில் சந்திக்கவே இல்லை' என, 'பல்டி'அடித்தனர்.
ஜெ., உடல் நிலையை கவனிக்க, அரசு சார்பில் நியமிக்கப்பட்ட மருத்துவர்களும், 'ஜெ.,வை சந்திக்கவே இல்லை' என, விசாரணை கமிஷனில் சாட்சியம் அளித்தனர்.ஜெ., அண்ணன் மகன் தீபக், விசாரணை கமிஷனில், 'மருத்துவமனைக்கு ஜெ., கொண்டு வரப்பட்ட போது, சுய நினைவு இல்லாமல் இருந்தார்' என, தெரிவித்தார்.
அரசு தரப்பில் வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளும், அதை உறுதி செய்துள்ளன. இதெல்லாமே உண்மையே' என, ஓராண்டுக்கு பின், சென்னை, அப்பல்லோ மருத்துவ குழுமத் தலைவர், பிரதாப் ரெட்டி ஒப்பு கொண்டுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக, அவர் சென்னையில், நேற்று அளித்த பேட்டி:
ஜெ., மரணம் தொடர்பாக, விசாரணை நடந்து வருவதால், அதைப் பற்றி பேச முடியாது. அவர், மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதே, ஆபத்தான நிலையில் தான் அனுமதிக்கப்பட்டார். மக்கள் அச்சப்படக் கூடாது என்பதற்காகவே, அவருக்கு காய்ச்சல் என்று அறிக்கை வெளியிடப்பட்டது.

உலகத்தர சிகிச்சை


தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, உண்மையை கூற முடியாத நிலை ஏற்பட்டது. அதன் காரணமாகவே, மருத்துவமனை அறிக்கைகளில், உண்மைக்கு மாறான செய்திகள் இடம் பெற்றன.அதேநேரத்தில், அவரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, உலகத்தர சிகிச்சை அளிக்கப்பட்டது; ஆனாலும், நோயின் தீவிரத்தால், அவர், எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.ஜெ., மரணம் தொடர்பான விசாரணை கமிஷனிடம் இருந்து, தற்போது வரை, எனக்கு, 'சம்மன்' வரவில்லை. என் மருத்துவமனை டாக்டர்களுக்கு, சம்மன் வழங்கப்பட்டது குறித்து, எனக்கு தெரியாது. சம்மன் அளித்தா லும், எங்களுக்கு கவலையில்லை. எங்கள் தரப்பில், ஜெ., வுக்கு, சிறந்த முறை யில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

நடந்தது என்ன?


மருத்துவமனைக்கு வரும் போது, ஜெ., ஆபத் தான நிலையில் இருந்தார் என்றால், அவர் வசித்த, சென்னை,போயஸ் கார்டனில் அவருக்கு நிகழ்ந்தது என்ன என்ற, கேள்வி எழுந்துள்ளது.அத்துடன், அப்பல்லோ மருத்துவ மனை தவறான அறிக்கை வெளியிட வேண்டும் என, சசிகலாவும், அவரின் குடும்பத் தினரும் நிர்ப்பந்தம் செய்தனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே, ஜெ., மரண விவகாரத்தில், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள், விரைவில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (141)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
20-டிச-201713:05:31 IST Report Abuse

Needhiyin Pakkam Nil பணம் அதிகாரம் உள்ளவர்கள் எந்த பொய்யை வேண்டுமானாலும் சொல்லலாம், அதை தட்டி கேட்கவும் தண்டிப்பதற்கு யாரும் முன் வருவதில்லை அம்மாவின் முட்டாள் விசுவாசிகள் உட்பட, ஒழுங்கா ஒட்டு போட்டு ஒரு நல்ல தலைவனை தேர்ந்தெடுக்க தெரியாத இந்த டாஸ்மார்க் தமிழர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்..........

Rate this:
Venkatapathy Perumalsamy - New Delhi,இந்தியா
17-டிச-201722:50:25 IST Report Abuse

Venkatapathy Perumalsamyசட்டஒழுங்கை பற்றி பேச இவர் என்ன உள்துறை அமைச்சரா ???இல்லை உயர் போலீஸ் அதிகாரியா ??? இவரிடம் அரசோ உள்துறை பொறுப்பு அமைச்சரோ அமைச்சகமோ எழுத்து பூர்வமாக கேட்டு கொண்டதா ??? சசிகலாவுடன் சேர்ந்து செய்த பித்தலாட்டத்திற்கு சால்ஜாப்பு காரணமே இவரை கைது செய்து முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் .

Rate this:
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
17-டிச-201722:44:45 IST Report Abuse

Rajamani Ksheeravarneswaranஒரு நோயாளி மருத்துவமணியில் எந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அந்த நிலைமையை பதிவேட்டில் ஏற்றி ,அதன்பின் அவருக்கு தொடர்ந்து நடக்கும் சிகிச்சைகளை அவருக்கு கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகள் பற்றிய விவரம் கேஸ் சீட்டில் பதிவு செய்து அவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகும்போது டிஸ்சார்ஜ் சம்மரி அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் டிஸ்சார்ஜான பின் அவர் எடுத்துக்கொள்ளவேண்டிய மருந்து மாத்திரைகள் ,எந்த உணவு வகைகள் எடுத்துக்கொள்ளவேண்டும் , எவற்றையெல்லாம் தவிர்க்கவேண்டும் என்று பல தரப்பட்ட அறிவுரைகளுடன் அவருக்கு சிகிச்சை அளித்த சேவைக்குரிய பில் இணைக்கப்பட்டு அது செலுத்தியப்பட்டவுடன் அந்த நோயாளி டிஸ்சார்ஜ் செய்யப்படுவர் .இது அனைத்து மருத்துவமனைகளில் உள்ள பொதுவான விதி. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரோ , ஒரு மாநிலத்தின் முதல்வர், மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளர் , மக்களின் அன்பிற்குரியவர், மேலும் இந்தியாவை ஆளும் பேராளுமை சக்தி பெற்ற தலைவர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் இருந்தே வதந்திகள் விதைக்கப்பட்டு விட்டன. அப்படியிருந்தும் மத்திய அரசு, உள்துறை அமைச்சகம் , பொறுப்பு ஆளுநர் எந்தவித பொறுப்புமின்றி செயல்பட்டார்களா ?

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
18-டிச-201700:38:10 IST Report Abuse

dandyதமிழனுக்கு சாராயம் தன உலகம் ....நோயாளி ..மருத்துவ மனை முறைகள் எல்லாம் தேவை இல்லை ..இது ஆந்திர ரொட்டிக்கு நன்கு தெரியும் ..ஜெயா புதைக்க படட அன்றே மக்கள் வீதியில் இறங்கி இருந்தால் நடந்திருப்பது வேறு ...பாவம் அவர்கள் உடனே டாஸ்மாக் போய் விடடார்கள் ..தலைவர்கள் ..வேலைக்காரி எல்லாம் பதவி சண்டையில் மும்முரம் ...பாவம் அந்த ஜெய அநாதை மாதிரி போய் விட்ட்து ...

Rate this:
மேலும் 137 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X