மோடி - ராகுல் கவுரவ போட்டி Dinamalar
பதிவு செய்த நாள் :
மோடி - ராகுல் ,Modi- Rahul, கவுரவ போட்டி, குஜராத் தேர்தல், Gujarat elections, ஹிமாச்சலப்பிரதேச தேர்தல், Himachal Pradesh election, சட்டசபைத் தேர்தல், assembly election,லோக்சபா தேர்தல், Lok Sabha election, கவுரவப் பிரச்னை,prestige issue , தேசிய ஜனநாயக கூட்டணி, National Democratic Alliance, பிரதமர் நரேந்திர மோடி, Prime Minister Narendra Modi, ஹர்திக் படேல்,Hardik Patel, ராகுல், Rahul,

ஆமதாபாத்: குஜராத், ஹிமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களில் பதிவான ஓட்டுகள், இன்று எண்ணப்படுகின்றன.

மோடி - ராகுல் ,Modi- Rahul, கவுரவ போட்டி, குஜராத் தேர்தல், Gujarat elections, ஹிமாச்சலப்பிரதேச தேர்தல், Himachal Pradesh election, சட்டசபைத் தேர்தல், assembly election,லோக்சபா தேர்தல், Lok Sabha election, கவுரவப் பிரச்னை,prestige issue , தேசிய ஜனநாயக கூட்டணி, National Democratic Alliance, பிரதமர் நரேந்திர மோடி, Prime Minister Narendra Modi, ஹர்திக் படேல்,Hardik Patel, ராகுல், Rahul,


கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, நரேந்திர மோடி, பிரதமர் பதவியை ஏற்றார். அதன்பின், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களில், பெரும்பாலானவற்றில், காங்., தோல்வியை தழுவி வருகிறது.

இந்நிலையில், காங்., ஆட்சியில் உள்ள, ஹிமாச்சலப் பிரதேசத்திலும், பா.ஜ., ஆட்சியில் உள்ள குஜராத்திலும், சமீபத்தில் சட்டசபைத் தேர்தல்கள் நடந்தன. இவற்றில் பதிவான ஓட்டுகள், எண்ணப்படுகின்றன.இந்த தேர்தல்களில் வெல்வதை, பிரதமர் மோடியும், காங்., தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள ராகுலும், கவுரவப் பிரச்னையாக கருதுகின்றனர்.

இதனால், இம்மாநில சட்டசபைத் தேர்தல்களில், இரு தலைவர்களும், சூறாவளி சுற்றுப்பயணம் சென்று ஓட்டு வேட்டையாடினர்.குஜராத்தில், 20 ஆண்டு களாக, பா.ஜ., ஆட்சிப் பொறுப்பில் நிலைத்து நின்று வருகிறது. தங்கள் கட்சியின்

கோட்டையாக உருவெடுத்துள்ள குஜராத்தில், மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்புடன், பா.ஜ., வியூகங்கள் வகுத்தது. அதேசமயம், 20 ஆண்டுகளுக்கு முன் பறிகொடுத்த ஆட்சியை, இம்முறை எப்படியாவது கைப்பற்றியே தீருவது என, ராகுல் தலைமையில், காங்., தலைவர்கள் ஆவேசமாக தேர்தல் களம் புகுந்தனர்.

குஜராத், ஹிமாச்சல் சட்டசபை தேர்தல்களில் வெளியாகும் முடிவுகள், 2019 லோக்சபா தேர்தலில், பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத்முதல்வராக இருந்த மோடி, அம்மாநில வளர்ச்சியை போன்று, நாடு முழுவதும் வளர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக கூறியே, மத்தியில் ஆட்சியை பிடித்தார்.குஜராத் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடியையும், பா.ஜ.,வையும், ராகுல் கடுமையாக தாக்கி பேசினார். முக்கிய விஷயங்களை பேசாமல் தவிர்ப்பதாக, மோடியை, ராகுல் குற்றஞ்சாட்டினார்.

தவிர, குஜராத்தில், ஆளும், பா.ஜ.,வுக்கு எதிராக, படேல் சமூகத் தலைவர், ஹர்திக் படேல், இதர பிற்பட்டோர் பிரிவுகளின் தலைவர், அல்பேஷ் தாக்கூர், தலித் சமூக தலைவர், ஜிக்னேஷ் மேவானி ஆகியோரை அணி திரட்டி, ராகுல், ஓட்டு வேட்டையாடினார்.

குஜராத்தில், படேல் சமூகத்தினருக்கு, 12 சதவீத ஓட்டுகள் உள்ளன. இத்தேர்தலில், இவர்களின் ஓட்டு முக்கிய பங்காற்றும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாநிலத்தில், 182 தொகுதிகளுக்கு, டிச., 9, 14ல், இரு கட்டங்களாக நடந்த தேர்தலில், 68.4 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

Advertisement

வீர்பத்ர சிங்கிற்கு விடை? :

காங்., ஆட்சியில் உள்ள மாநிலமான, ஹிமாச்சலில், நவ., 9ல், 68 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், காங்கிரசைச் சேர்ந்த, முதல்வர், வீர்பத்ர சிங், பா.ஜ., தலைவர், பிரேம் குமார் துாமல் உட்பட, 337 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தேர்தலில், 75.28 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இம்மாநிலத்தில்,தேர்தல் தொடர்பாக நடந்த அனைத்து கருத்துக் கணிப்புகளும், பா.ஜ., வுக்கே வெற்றி வாய்ப்பை அளித்துள்ளன. ஹிமாச்சலில், 42 மையங்களில், ஒரே சமயத்தில், இன்று ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. ஹிமாச்சலில், கடந்த முறை ஆட்சி செய்த கட்சி, மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது என, முந்தைய தேர்தல் வரலாறுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், இம்முறை, பா.ஜ., ஆட்சியை கைப்பற்றும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


கல்லுாரியில்,'வைபை' துண்டிப்பு :

குஜராத்தில், சூரத் நகரில், கேம்ராஜ் தொகுதியில், சமீபத்தில் முடிந்த சட்டசபைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டு இயந்திரங்களில், தில்லுமுல்லு செய்யும் வாய்ப்பு உள்ளதாக, காங்., வேட்பாளர், அசோக் ஜாரிவாலா குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ள, காந்தி இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில், 'வை பை' சேவைகள் துண்டிக்கப்பட்டன. இது குறித்து மாவட்ட கலெக்டர் கூறுகையில், 'கல்லுாரியில், மாணவர்கள் பயன்பாட்டிற்காக, வை பை வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதை வைத்து, மின்னணு ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியாது. இருப்பினும், காங்., வேட்பாளரின் சந்தேகத்தை போக்கும் வகையில், வை பை வசதி துண்டிக்கப்பட்டு ள்ளது' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (33)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
18-டிச-201711:32:08 IST Report Abuse

SasiKumarஎல்லா ஜாதி கட்சி வளைத்தும் பருப்பு வேகவில்லை

Rate this:
Saudi_Indian_tamil - Khobar,சவுதி அரேபியா
18-டிச-201711:08:42 IST Report Abuse

Saudi_Indian_tamilநிச்சயம் சூழ்ச்சியும் வஞ்சகமும் தந்திரமுமே வெல்லும் பித்தலாட்டம் செய்யப்பட்ட மெஷின்கள் கை கொடுக்கும் தமிழ் நாட்டிலும் ஜெயிக்கலாம் கேரளாவிலும் ஜெயிக்கலாம் இனி இந்தியாவை காப்பாற்ற கொடியவர்களை அழிக்க இறைவன் தான் முன்வர வேண்டும்

Rate this:
18-டிச-201711:41:25 IST Report Abuse

Hindustan,INDIAnee moodu angaiye iru indiakulla kaal vachudatha.....

Rate this:
18-டிச-201712:14:42 IST Report Abuse

SasiKumarமிஷினில் தப்பு இருந்தால் நிருபித்து காட்டச் சொன்னால் ஒரு பயலும் முடியல. பிறகு ஏன் குறை...

Rate this:
தலைவா - chennai,இந்தியா
18-டிச-201713:19:46 IST Report Abuse

தலைவா ஏற்கனவே நிரூபித்து உள்ளார்கள்...நீங்கள் இன்னும் அறியாமையிலேயே இருக்கிறீர்கள்....

Rate this:
Narasimhan - Manama,பஹ்ரைன்
18-டிச-201710:52:51 IST Report Abuse

Narasimhanகாங்கிரசுக்கு ஆப்பு வைத்தது பப்பு அல்ல. திரு மணி ஷங்கர் அய்யர் என்கிற கூஜா தூக்கும் ஆள்.

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X