ரிப்பீட்டு! ஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் ரத்தாக வாய்ப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
  ரிப்பீட்டு!,ஆர்.கே.நகர் ,தேர்தல் ,மீண்டும், ரத்தாக, வாய்ப்பு

எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஒரே நாளில், ஓட்டுக்காக, 100 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஓட்டு போட்டால், வீடு வழங்கப்படும் என்ற வாக்குறுதியுடன், வாக்காளர்களுக்கு சீட்டும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும், மூன்று நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு கட்சிகள் தாராளமாக பணத்தை வாரி வழங்குவதால், மீண்டும் தேர்தல் ரத்தாவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

  ரிப்பீட்டு!,ஆர்.கே.நகர் ,தேர்தல் ,மீண்டும், ரத்தாக, வாய்ப்பு


ஜெயலலிதா இறந்ததை அடுத்து, அவர் போட்டியிட்ட, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், 21ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேர்தல் பிரசாரம் நாளை நிறைவடைகிறது.அரசியல் கட்சிகள் போட்டி போட்டு பிரசாரம் செய்கின்றன. வாக்காளர்களை கவர, பணம், பரிசுப்பொருட்கள் வினியோகமும் களை
கட்டியுள்ளது.தினகரன் தரப்பினர், ஆரம்பத்தில் ஓட்டுக்கு, 5,000 ரூபாய்; பின், ஓட்டுக்கு, 10 ஆயிரம் என, வாரி வழங்கினர். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.,வும், ஓட்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.


இரண்டு நாட்களாக, பணப் பட்டுவாடா தீவிரம் அடைந்துள்ளது. ஒரு தரப்பினரை, மற்றொரு தரப்பினர் தடுப்பதால், ஆங்காங்கே மோதலும் நிகழ்ந்து வருகிறது. ஏராளமானோர், பணம்
கொடுக்கும் போது, கையும், களவுமாக சிக்குகின்றனர்.இருப்பினும், பணப்பட்டு வாடாவை தடுக்க, தி.மு.க., தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இதனால், சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களில் ஈடுபட்டனர்.


'அ.தி.மு.க., கரை வேட்டி கட்டிய படியும், இரட்டை இலை சின்னத்துடனும், தினகரன் தரப்பினர் தான் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். ஆனால், அ.தி.மு.க., மீது பழி போடுகின்றனர்' என, ஆளும் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.'தோல்வி பயத்தில், பட்டப்பகலில் பணம் கொடுத்து, தேர்தலை

ரத்து செய்ய, அ.தி.மு.க., முற்படுகிறது' என, தினகரன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.


எப்போதும் இல்லாத வகையில், பணப் பட்டுவாடா நடப்பதை தடுக்க முடியாமல், தேர்தல் கமிஷனும் திணறி வருகிறது. பணப் பட்டுவாடா உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், தேர்தல் சிறப்பு அதிகாரி, விக்ரம் பத்ரா, நேற்று தலைமை செயலகத்தில், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன், தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.


அ.தி.மு.க., சார்பில், அமைச்சர், ஜெயகுமார், லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை; தி.மு.க., சார்பில், கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின், துரைமுருகன்; பா.ஜ., தரப்பில் தமிழிசை சவுந்தரராஜன்;தினகரன் தரப்பில், வெற்றிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தனித்தனியாக மனுவும் அளித்தனர்.


பின், ஸ்டாலின் கூறுகையில்,''ஒரே நாளில், ஓட்டுக்கு, 6,000 ரூபாய் என, 100 கோடி ரூபாய் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி, ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம். தேர்தல் கமிஷன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறுகையில், ''ஆட்சி அவர்களிடம் உள்ளது; தேர்தல் கமிஷனும் ஒத்துழைக்கிறது. அப்படி இருந்தும், ஓட்டுக்கு, 6,000 ரூபாய் பணம் கொடுக்கிறார்கள் என்றால், அ.தி.மு.க.,வுக்கு தோல்வி பயமே காரணம். அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்,'' என்றார்.


லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை கூறியதாவது:


ஆர்.கே.நகர் தொகுதியில், ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில், மதுசூதனன் வெற்றி பெறுவார். எதிர்க்கட்சியினருக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால், நிர்வாகிகளை தாக்குவதுடன், பணப்பட்டுவாடா செய்வதாக, தவறான தகவலை தெரிவிக்கின்றனர்.சிலர், அ.தி.மு.க., கரை வேட்டியை கட்டிச் சென்று, அராஜகங்களை செய்து, எங்கள் மீது பழிபோடுகின்றனர்.


எனவே, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரிக்க வேண்டும்; வாக்காளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு தந்து, அவர்கள்

Advertisement

அச்சமின்றி, ஓட்டு அளிக்க, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என, தேர்தல் சிறப்பு அதிகாரியிடம் வலியுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஏப்ரலில் இடைத் தேர்தல் நடக்க இருந்த போதும், ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுத்தது. 89 கோடி ரூபாய் பட்டுவாடாசெய்ததற்கான ஆதாரங்கள், அமைச்சர், விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்திய, வருமான வரிதுறை அதிகாரிகளிடம் சிக்கின; அதனால், தேர்தல் ரத்து செய்யப் பட்டது. தற்போது, அதை விட தாராளமாக, அரசியல் கட்சிகள் பண பட்டுவாடா செய்து வருகின்றன. தேர்தல் நெருங்கும் நிலையில், 'வெற்றி பெற்றதும், வீடு வழங்கப்படும்' என, பல இடங் களில், சீட்டும் வழங்கப்படுகிறது. தொகுதி முழுவதும், பண மழை கொட்டுவதால், மீண்டும் தேர்தல் ரத்தாகும் சூழல் உருவாகி உள்ளதாக, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


ரூ.30 லட்சம் பறிமுதல்* ஆர்.கே.நகர்குடிசை மாற்று வாரிய பகுதிகளில், ஓட்டுக்கு வீடு தருவதாகக் கூறி, மயிலாடுதுறை அ.தி.மு.க., - எம்.பி., பாரதிமோகன் ஆதரவாளர்கள், அவர் கையெழுத்திட்ட, சீட்டுகளை வினியோகித்து உள்ளனர்.தினகரன்ஆதரவாளர்கள்,100க்கும் மேற்பட்டசீட்டுகளை பறிமுதல் செய்து, தேர்தல்கமிஷனில்புகார் அளித்துள்ளனர்.

* சென்னை, கொருக்குப்பேட்டை, திருவள்ளுவர் நகரில், பண பட்டுவாடாவில் ஈடுபட்ட தினகரன் ஆதரவு, பெண் பிரமுகர் செல்வியை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து, 20 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, போலீசிடம் ஒப்படைத்துள்ளதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.ஆனால், 16 ஆயிரத்து, 240 ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்தோம் என, போலீசார் கூறினர். செல்வியை விடுவிக்கக் கோரி, தினகரன் ஆதரவாளர்கள், ஆர்.கே.நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்


* சென்னை, தண்டையார்பேட்டை, நேரு நகர் பகுதியில், பட்டுவாடா செய்ததாக, அ.தி.மு.க., பெண் பிரமுகர் ரேவதியை, 28, போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 53 ஆயிரத்து, 200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது


* காசிமேடு, காசிபுரம் பகுதியில், பட்டுவாடா செய்த, அ.தி.மு.க., வை சேர்ந்த, செல்வராஜ், 37, போலீசில் சிக்கினார். அவரிடம் இருந்து, 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது


* முறைகேடுகள் தொடர்பாக, இதுவரை, 789 புகார்கள் பதிவாகி உள்ளன. அதில், 758 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை யாக, 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்


* பணப்பட்டுவாடா செய்ய இருந்த, 29 லட்சத்து, 96 ஆயிரத்து, 780 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
18-டிச-201723:49:47 IST Report Abuse

dandyஏலம் நடத்தலாம் ..அதிக பணம் செலவு செய்யும் ...அதிக குண்டர்கள் வைத்திருக்கும் நபருக்கு ...MLA பதவியை கொடுக்கலாம் ,,ஜனநாயகம் கல்வி அறிவில்லாத ..பிச்சைக்கார நாட்டிட்கு ஒரு நாளும் சரி வராது

Rate this:
bairava - madurai,இந்தியா
18-டிச-201721:15:05 IST Report Abuse

bairava மானங்கெட்ட அரசாங்கம், தேர்தல் ஆணையம்...ஏண் பணம் கொடுக்குறான் தெரிஞ்சும் ..அவனை ஏண் ஒரு வேட்பாளாரா ? ஏற்றுக்கொண்டு தொகுதியில் பிரச்சாரம் செய்யவுடுறீங்க அவனை தகுதிநீக்கம் செய்ய துப்பில்லையா?? அய்யா உச்ச நீதிமன்ற நீதிமான்கள் உங்களுக்கு தெரியவில்லையா ?/ ஒரு தொகுதியின் இடைத்தேர்தலை முறையாக நடத்த தகுதியற்ற ஒரு தேர்தல் ஆணையம் இருந்தால் என்ன ?/ இல்லாவிட்டால் என்ன ?? அதற்கு ஒரு சட்டம் போடமுடியாதா??? பணம் கொடுப்பாவனை தகுதி நீக்கம் செய்து அவன் வாழ் நாள் முழுவதும் தேர்தலில் நிற்க தடை செய்தும் அந்த கட்சி , அமைப்பை 10 வருடம் அந்த தொகுதியில் நிற்க தடை செய்ய வேண்டும்.. இது ஒரு பிரச்சினை என்றால் ..இதற்கு பின் சென்று பார்த்தல் 1. தினகரன் பதுக்கிய பணத்தை வெளிக்கொண்டுவரும் திட்டம் ? 2. தமிழினத்தின் எழுச்சியால் வளர்ந்து நிற்கும் நாம் தமிழர் கட்சியால்.. ஆளும் அதிகாரம் காரணமாக இருக்கலாம் ??//

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
18-டிச-201720:59:01 IST Report Abuse

mindum vasanthamDinakaran kambu nandraka suthuvathaka kelvi

Rate this:
மேலும் 89 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X