அரசாங்கத்துக்கு, 'லாசு'... ஆபீசர்களுக்கு காசு!

Added : டிச 19, 2017
Share
Advertisement
அரசாங்கத்துக்கு, 'லாசு'...  ஆபீசர்களுக்கு காசு!

அந்த ஏரியா, 'கேக்' வாசத்தால் நிரம்பியிருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடந்த கேக் திருவிழாவில், தனது தோழிகளுக்காக, விதவிதமான, 'கேக்'குகளை வாங்கிக் கொண்டிருந்தாள் மித்ரா. அங்கே வந்த சித்ராவுக்கு, 'பிளம் கேக்' கொடுத்து, வரவேற்றாள்.

''என்ன மித்து... ஏதாவது ஸ்பெஷலா?'' என்றாள் சித்ரா.

''நமக்கென்ன ஸ்பெஷல்... நம்ம சிட்டி போலீஸ்காரங்கதான், 'ஸ்வீட் எடு கொண்டாடு'ன்னு ஒரே குஷியா இருக்காங்க,'' என்றாள் மித்ரா.

''ஓ... ஏ.டி.எம்., கொள்ளைக்காரங்களை உடனே பிடிச்சதுக்காக, 'டிஜிபி' கூப்பிட்டுப் பாராட்டிருக்காரே... அதுக்காகவா?'' என்று கேட்டாள் சித்ரா.

''அதே தான்... உண்மையிலேயே நம்ம சிட்டி போலீஸ், செம்ம 'ப்ரில்லியன்ட்'டா 'ஒர்க்' பண்ணிருக்காங்க. வடமாநில கொள்ளைக்காரங்கதான் இதைப் பண்ணிருப்பாங்கன்னு தெரிஞ்சதும், ஏழு தனிப்படைய ரொம்ப ஸ்பீடா ரெடி பண்ணி, ஒரே நாள்ல மடக்கிட்டாங்களே... கிரேட்!'' என்றாள் மித்ரா.

''டிஜிபி கூப்பிட்டுப் பாராட்டுனதெல்லாம் சரிதான்... அதே டிஜிபிட்ட நம்ம சிட்டி போலீஸ் நடத்துற கட்ட பஞ்சாயத்து பத்தி, 'கம்ப்ளைன்ட்' போயிருக்கு... அது ஒனக்குத் தெரியுமா?'' என்று கேட்டாள் சித்ரா.

''சத்தியமா எனக்குத் தெரியாது... அப்பிடியெல்லாம் நடக்குதா என்ன?'' என்று விழிகளை விரித்துக் கேட்டாள் மித்ரா.

''அதான்... வெஸ்ட்ல உதவியா இருக்குறதா சொல்லி, பதவி வாங்கிட்டு வந்த, 'டேஷ்' ஆபீசர்தான், ரியல் எஸ்டேட், வீடு, ஆபீஸ், கடை காலி பண்றதுன்னு, பயங்கர கட்டப் பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்காராம். சாதாரணமா, லட்சங்கள்லதான், 'டீலிங்' முடிக்கிறாராம்,'' என்றாள் சித்ரா.

''அது சரி... இந்த விஷயம் எப்பிடி டிஜிபிக்கு போச்சு?'' என்று குறுக்குக் கேள்வி கேட்டாள் மித்ரா.

''ஏதோ ஒரு வக்கீலோட ஆபீசையும் தன்னோட பாணியில அவரு காலி பண்ணிக் கொடுத்தாராம். அந்த, 'பார்ட்டி'தான் ஆதாரப்பூர்வமா, டிஜிபி கிட்ட போட்டு விட்டுருச்சுன்னு கேள்விப்பட்டேன்,'' என்றாள் சித்ரா.

''ஆனா, டிஜிபியாலேயே அவரைத் தொட முடியாதே... ஏன்னா, ஆளுங்கட்சிக்கு, எலக்ஷனுக்கு தன்னோட ஜீப்புல பணம் கொண்டு போற அளவுக்கு, அவரு விசுவாசமான ஆளாச்சே!'' என்றாள் மித்ரா.

இருவரும் சேர்ந்து, நிறைய 'கேக்' மற்றும் 'ேஹாம் மேட் சாக்லேட்'களை வாங்கிக் கொண்டு, வெளியே வந்தனர். வரும்போது, இரு வக்கீல்கள், சத்தமாகப் பேசியபடி, 'கேக் ஷாப்'புக்குள் நுழைந்தனர். மித்ராவே மீண்டும் தொடர்ந்தாள்...

''அக்கா... அவுங்க பேசுற மேட்டரைக் கவனிச்சியா?''

''இல்லியே மித்து... ஏதோ ஜிபி, பீபின்னு கேட்டுச்சு.''

''அதே தான்... நம்ம, 'டிஸ்ட்ரிக்ட்'ல அரசு வக்கீல்களை புதுசா போட்ருக்காங்க. பெரும்பாலும் பழைய ஆளுங்க தான், 'கன்டினியூ' பண்றாங்க. இதுல பிரச்னை என்னன்னா, இவுங்கள்ல யாருமே, ஓபிஎஸ் ஆளுங்க கிடையாது.''

''என்ன மித்து சொல்ற... ஓ.பி.எஸ்., போர்க்கொடி துாக்குனப்போ, நம்ம ஊர்ல இருந்துதான அதிகமான வக்கீலுங்க, அவருக்கு 'சப்போர்ட்'டா நின்னாங்க. அப்புறம் எப்பிடி, அவுங்களைப் புறக்கணிச்சாங்க?''

''அது தான் அவுங்க வருத்தமே. மொத்தமிருக்குற 16 பேர்ல, ஓபிஎஸ் அணிக்கு எட்டு பேருக்கு பதவி கேட்ருக்காங்க...ஆனா, ஒருத்தருக்குக் கூட தரலையாம். மாநகர் மாவட்டத்துல மட்டும் எட்டு பேரு கொண்ட பட்டியலை 'மாவட்டம்' கொடுத்தாராம்...அதுலயும் ஒருத்தருக்கும் தரலை''

''அப்புறம் என்ன தான் ஆச்சு?''

''ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வக்கீல்க, ஒரு குரூப்பா கிளம்பி, சென்னை போயி, ஓபிஎஸ்சை சந்திச்சு புகார் பண்ணப்போறாங்களாம்... ஆனா, இனிமே மாத்துவாங்களாங்கிறது சந்தேகம்தான்!''

''சரி... அதை விடு... டாஸ்மாக் 'பார்'களுக்கு நேத்தும் 'டெண்டர்' நடக்கலை போலிருக்கு....!'' என்று கேட்டாள் சித்ரா.

''யாரையும் 'டெண்டர்' அப்ளிகேஷனே வாங்க விடலையே... அப்புறம் எப்பிடி 'டெண்டர்' நடக்கும்?'' என்று கோபமாய்க் கேட்டாள் மித்ரா.

''எக்காரணத்தை முன்னிட்டும் 'பார்'களுக்கு 'டெண்டர்' நடக்கக் கூடாதுங்கிறதுல, ஆளுங்கட்சிக்காரங்களை விட, டாஸ்மாக் 'டிஸ்ட்ரிக்ட் மேனேஜர்'ங்கதான் ரொம்ப தீவிரமா இருக்காங்க,'' என்றாள் சித்ரா.

''ஆமாக்கா...அதனாலதான், 'அப்ளிகேஷன் எங்க கிடைக்கும், எங்க கொடுக்கணும்னு எதையும் வெளிப்படையா சொல்லாம இருக்காங்க. நேத்து நடக்கலைன்னா, அடுத்து எப்ப நடக்குமாம்?'' என்று கேட்டாள் மித்ரா.

''வர்ற 28ம் தேதி நடக்கும்னு சொல்லிருக்காங்க. நிச்சயமா அன்னிக்கும் நடக்காது. வடக்குல 136, தெற்குல 101ன்னு 237 'பார்'களுக்கு 'டெண்டர்' நடக்காம, மாசத்துக்கு அஞ்சு கோடி, கவர்மென்ட்டுக்கு இழப்பாகுது. அதை ஆளுங்கட்சிக் காரங்களும், ஆபீசர்களும் பங்கு போட்டுக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.

இருவரும் நடந்து கொண்டே, மெயின் ரோடுக்கு வந்தனர். கால் டாக்சிக்கு அழைப்பு விடுத்து விட்டு காத்திருந்தனர். சாலையில் கடந்து சென்ற மாநகராட்சி வாகனத்தில், பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆபீசரைப் பார்த்ததும், சித்ராவைப் பார்த்து சிரித்தாள் மித்ரா.

''டைகர் பிஸ்கெட் ஆபீசரைப் பார்த்தியா... பகலெல்லாம் இப்பிடி ஊரைச் சுத்துறது... சாயங்காலத்துக்கு அப்புறமும், லீவு நாள்லயும் ஆபீஸ்ல போய் உட்கார்ந்து, கான்ட்ராக்டர்கள்ட்ட 'டீலிங்' பேசுறதுன்னு, ஜேஎன்என்யுஆர்எம் ஸ்கீம்ல வேலை பாக்கிறவுங்களை பாடாப்படுத்துறாராம்,'' என்றாள் சித்ரா.

''அப்பிடின்னா மத்த நாள்ல ஆபீசுக்கு வர்றதில்லையா?'' என்று கேட்டாள் மித்ரா.

''ஆமா... போன வாரத்துல கூட, லீவு நாள்ல சாயங்காலம் ஆபீசுக்கு வந்தவரு, நைட் பத்தரை மணிக்கு தான் கிளம்புனாராம். பாவம்... 'நமக்கெல்லாம் வேற வேலை வெட்டி, குடும்பம் எல்லாம் இல்லியா'ன்னு புலம்புறாங்க,'' என்றாள் சித்ரா.

''இவரு இப்பிடின்னா, தெற்கால இருக்குற கார்ப்பரேஷன் ஆபீஸ்ல வருவாயைப் பாக்குற ஆபீசரு மேல வேற மாதிரி புகாரெல்லாம் வருது. சாயங்காலம் 'ஆபீஸ் டைம்' முடிஞ்ச பிறகு, கார்ப்பரேஷன் வண்டியில, 'லேடீஸ் ஸ்டாஃப்'களைக் கூப்பிட்டு, ஓட்டல்களுக்குப் போய் அரட்டை அடிக்கிறாராம்,'' என்றாள் மித்ரா.

''தமிழ்லயா... இங்கிலீஷ்லயா...?'' என்று சிரித்தாள் சித்ரா.

''தமிழ், இங்கிலீஷ் சொல்லித்தர அவரென்ன வாத்தியாரா?'' என்று கேட்டாள் மித்ரா.

''மித்து... நீ வாத்தியார்னு சொல்லவும் தான் ஞாபகம் வந்துச்சு. வேற மாவட்டங்கள்ல வேலை பாக்குற 25 டீச்சர்கள், கார்ப்பரேஷன் ஸ்கூல்களுக்கு வர்றதுக்கு பள்ளிக் கல்வித்துறையில 'என்ஓசி' வாங்குனவுங்க, இங்க வர முடியாம தவிக்கிறாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''ஏன்... இங்க 'வேகண்ட்' இல்லியா?'' என்றாள் மித்ரா.

''அதெல்லாம் இருக்கு... ஆனா, ஒரு போஸ்டிங் போட, மூணு லட்ச ரூபா வரைக்கும் பேரம் நடக்குதாம். கவுன்சிலிங் முடிஞ்சும், அமைச்சரு 'ரெகமண்டேஷன்' பண்ணியும் இங்க 'ஜாயின்' பண்ண முடியலியாம்,'' என்றாள் சித்ரா.

''கார்ப்பரேஷன் ஸ்கூலைப் பத்திப்பேசவும், நம்ம எஸ்.பி., ஆபீஸ், 'டெம்ப்ரவரி'யா இயங்குன ரங்கநாதபுரம் கார்ப்பரேஷன் ஸ்கூல் ஞாபகம் வந்துச்சு,'' என்றாள் மித்ரா.

''அந்த ஆபீசைத்தான் புதுசா கட்டுன கட்டடத்துக்கு மாத்திட்டாங்களே!'' என்றாள் சித்ரா.

''அதை மாத்திட்டாங்க... மாத்துறப்போ, அந்த கார்ப்பரேஷன் ஸ்கூல்ல இருந்த டேபிள், பீரோ, சீலிங் ஃபேன் எல்லாத்தையும் கழட்டிட்டு வந்துட்டாங்களாம். அங்க இருந்த 'வாட்டர் பியூரிபையர்'ஐயும் கழட்டிருக்காங்க. கடைசி நேரத்துல டீச்சருங்க பாத்து, வாங்கி வச்சுட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''புதுசா கட்டுன கட்டடத்துக்கு, எல்லாமே புதுசாத்தான வாங்கிருப்பாங்க. அப்பிடின்னா, கார்ப்பரேஷன் ஸ்கூல்ல இருந்து கழட்டிட்டு வந்தது எல்லாம் எந்தெந்த போலீஸ்காரங்க வீட்டுக்குப் போயிருச்சோ?'' என்று கேட்டாள் சித்ரா.

கால் டாக்சி வரவே, இருவரும் ஏறி, ராமநாதபுரம் செல்லுமாறு கூறினர். போகும் வழியில், அரசு மருத்துவமனையைக் கடந்தபோது, ஏதோ நினைவுக்கு வந்தவளாய்க் கேட்டாள் மித்ரா.

''அக்கா... நம்ம ஜி.எச்.ல பழைய கட்டிடத்துல, அங்கங்க இடிஞ்சு விழுதாம். அதை சரி பண்ணுங்கன்னு 'டீன்' சொன்னா, 'சீக்கிரமே ஜப்பான் நாட்டு நிதி 110 கோடி ரூபா வருது. அதுல சரி பண்ணுவோம்'னு 'பிடபிள்யுடி'காரங்க சொல்றாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''அது எப்போ வந்து... எப்போ சரி பண்றது... அதுக்குள்ள ஏதாவது இடிஞ்சு விழுந்து, யாருக்காவது ஏதாவது ஆச்சுன்னா 'டீன்'தான பதில் சொல்லணும்,'' என்றாள் மித்ரா.

''அதுக்கு தான் அவரும் பயப்படுறாரு... இதெல்லாம் பரவாயில்லை. மூணு வருஷத்துக்கு முன்னாடி, தேவையே இல்லாம, 'பிடபிள்யுடி'க்காகக் கட்டுன ஒரு ஆபீசையும் ஜப்பான் நிதியில இடிச்சுக் கட்டப்போறாங்களாம்,'' என்றாள் சித்ரா.

டிராபிக் சிக்னலில் நின்றபோது, வட மாநில சிறுமி ஒருத்தி, இந்தியா மேப் விற்றுக் கொண்டிருந்தாள்.

''அக்கா... நம்ம ஏர்போர்ட் எக்ஸ்பேன்ஷன்ல, 150ஏக்கரைக் குறைச்சு, புதுசா மூணு பிளான் போட்ருக்காங்களே... அந்த மூணு பிளானையும் ரியல் எஸ்டேட் காரங்க கிட்ட நல்லா வித்துட்டு இருக்காராம், அந்த நிலத்தை எல்லாம் எடுத்துத் தர வேண்டிய பொறுப்புல இருக்குற லேடி ஆபீசர்,'' என்றாள் மித்ரா.

''எனக்கென்னவோ, ஏர்போர்ட் எக்ஸ்பேன்ஷன் வேலை இப்போதைக்கு நடக்கும்னு தோணலை. நம்ம ஊரு அரசியல்வாதிங்க யாருக்கும், அதுல சுத்தமா அக்கறை இருக்கிறதாத் தெரியலை,'' என்றாள் சித்ரா.

''நீ அரசியல்வாதின்னு சொன்னதும், நம்மூரு பழைய 'டவுன்டாடி' ஒருத்தரு ஞாபகம் வந்துச்சு'' என்று மித்ரா சொல்லும்போதே குறுக்கிட்ட மித்ரா,

'வாயத்தொறந்தாலே 'செம' செந்தமிழ் வருமே... அவரா' என்று கேட்டாள்.

''எக்ஸாக்ட்லி... அவரே தான். சூலுார் பக்கத்தால இருக்குற இளச்சிபாளையத்துல, அவரோட சொந்தக்காரங்க நடத்துற மில்லு ஒண்ணு இருக்காம். அங்க 'இ.பி.' காரங்க இன்ஸ்பெக்ஷன் போயிருக்காங்க. அப்போ, அந்த மில்லுல இருந்தவுங்க, இவருக்கு போனைப் போட்டுக் கொடுத்துட்டாங்களாம். வந்தவுங்களை போன்லயே வறுத்து எடுத்துட்டாராம்,'' என்றாள் மித்ரா.

''மித்து... இதுவும் ஆளுங்கட்சி மேட்டர் தான்...கோயம்புத்துார்ல இருக்குற ஆளுங்கட்சி பினாமி ஒருத்தரு, மூன்றரை கோடி ரூபாய்க்கு ஒரு கார் வாங்கிருக்காராம். அதைப் பத்தி பிஜேபிகாரங்க, ஐ.டி., ஆபீசுக்கும், கவர்னர் ஆபீசுக்கும் பெட்டிஷன் தட்டி விட்ருக்காங்க'' என்றாள் சித்ரா.

அடுத்த மேட்டரை ஆரம்பிப்பதற்குள், கால் டாக்சி டிரைவர் வழி கேட்கவே, பேச்சு தடை பட்டது. வழி காட்ட ஆரம்பித்தாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X