இன்ஜினியரை வறுத்தெடுத்த அதிகாரி: போலீசுக்கு சாபமிட்ட வியாபாரி

Added : டிச 19, 2017
Advertisement
""டாலர் சிட்டி'காரங்க பெருமை, ஆர்.கே., நகர்ல கொடி கட்டி பறந்துச்சாம்,'' என்றபடி, பெருமாள் கோவிலில் கொடுத்த துளசி பிரசாதத்துடன், சித்ராவின் வீட்டுக்குள் வந்தாள் மித்ரா.""அடடே! நானே கோவில் பக்கம் வரலாம் என்றிருந்தேன். அதுக்குள்ள நீயே வந்துட்டியா. பரவாயில்லை. மார்கழி வந்தாலே, பக்தி, பிரசாதமுன்னு, அமர்க்களமாயிடுது,'' என்றபடி வரவேற்றாள் சித்ரா.""இதே மாதிரி தான்,
இன்ஜினியரை வறுத்தெடுத்த அதிகாரி: போலீசுக்கு சாபமிட்ட வியாபாரி

""டாலர் சிட்டி'காரங்க பெருமை, ஆர்.கே., நகர்ல கொடி கட்டி பறந்துச்சாம்,'' என்றபடி, பெருமாள் கோவிலில் கொடுத்த துளசி பிரசாதத்துடன், சித்ராவின் வீட்டுக்குள் வந்தாள் மித்ரா.

""அடடே! நானே கோவில் பக்கம் வரலாம் என்றிருந்தேன். அதுக்குள்ள நீயே வந்துட்டியா. பரவாயில்லை. மார்கழி வந்தாலே, பக்தி, பிரசாதமுன்னு, அமர்க்களமாயிடுது,'' என்றபடி வரவேற்றாள் சித்ரா.

""இதே மாதிரி தான், ஆர்.கே., நகரில் யாரை நேர்ல பார்த்தாலும், பெரிய வரவேற்பு தர்றாங்களாம். நம்மூர்ல இருந்து, 80 பேர் போயிருக்காங்க. எப்படியாவது, வாக்காளரை "கவனிச்சிடனும்'னு மேலிட உத்தரவாம்,'' என்றாள் மித்ரா.

""துணை ராணுவம், அபர்சர்வர் என கண்காணிப்பு பலமா இருந்துமா, இப்படி,'' என்று சித்ரா ஆச்சரியப்பட்டாள்.

""ஆமா. போன வாரம், திருப்பூர்காரர் ஒருத்தரை, "லபக்'னு போலீஸ் புடிச்சுருச்சு. ஆளுங்கட்சி உள்ளூர் வி.ஐ.பி., மூலமா சாயந்தரமே வெளியே வந்துட்டாராம். திருப்பூர் புகழ், ஆர்.கே., நகர் வரை பரவியிருக்குன்னா, பாத்துக்கோ,'' என்று கிண்டலடித்தாள் மித்ரா.

""தமிழ்நாட்ல, அரசுன்னு ஒன்னு இருக்கான்னு, சந்தேகம் வருது,'' என்று, சித்ராவின் பேச்சு அரசின் பக்கம் திரும்பியது.

""ஏன்? என்னாச்சு,'' என, மித்ரா ஆதங்கப்பட்டாள்.

""திருப்பூரில் நடந்த "ரிவ்யூ மீட்டிங்க' பாத்தா, அப்படித்தான் தோணுது. மத்திய அரசு அதிகாரிங்க, தனிநபர் கழிப்பிட திட்டம் சம்பந்தா, டில்லில இருந்து, வீடியோ கான்பரன்ஸிங் மூலமா, கலெக்டர் ஆபீசில் ஆய்வு நடத்தினாங்க. இதில், டில்லி அதிகாரிங்க கைதான் ஓங்கியிருந்துச்சு. இதுக்கு முன்னாடி, எந்த திட்டமா இருந்தாலும் மாநில அரசு கட்டுப்பாட்டுல இருக்கும்; இப்ப, மத்திய அரசு அதிகாரிகளும், தலையிட ஆரம்பிசுட்டாங்க,'' என்று சித்ரா கூறினாள்.

""கைகலப்பு வர்ற அளவுக்கு, ஒரு மீட்டிங் நடந்ததை பத்தி நான், சொல்றேன்,'' என்று, மித்ரா அடுத்த மேட்டருக்கு தாவினாள்.

""கலெக்டர் ஆபீசுலயா நடந்துச்சு?'' என்று ஆர்வமானாள் சித்ரா.

""ஆமா. டி.ஆர்.டி.ஏ., திட்ட பணி சம்பந்தமா, பி.டி., ஆய்வு நடத்திட்டு இருந்திருக்காரு. அதில், அவிநாசி ஏ.இ., வேலை சரியில்லைனு;. எதுக்கும் லாயக்கில்லை; டோட்டலி அன்பிட்ன்னு சொல்லி, கலெக்டர பாத்துட்டு வர சொன்னாராம்''

""அதுக்கு அந்த ஏ.இ., "நான் அப்படியெல்லாம் போக மாட்டேன். மீட்டிங் முடிஞ்சு போறேன்,' னு சொல்லி, உட்காந்துட்டாராம். மத்தவங்க சொன்னதால, வெளியே போனாராம். மீட்டிங் முடிஞ்ச பின்னாடி, "பி.டி.,க்கு எல்லாரும் அடிமைகளான்னு,' இன்ஜினியர்கள் தனியா ஒரு மீட்டிங் நடத்தி, பி.டி., ரொம்ப பிரச்னை பண்ணா, மினிஸ்டர்கிட்ட போலாமுன்னு பேசுனாங்களாம்'' என்று மித்ரா கூறியதும், அவ்வழியே புத்தக பையுடன் நடந்து சென்ற ஒரு சிறுவனை பார்த்து, "என்ன, இளங்கோ, இன்னைக்கும் ஸ்கூலுக்கு மட்டம் போட்டுடியா,'' என்று கேட்க, ""இல்லக்கா, எனக்கு காய்ச்சல்'' என்று சொல்லி ஓட்டம் பிடித்தான்.

""அப்ப, புகைச்சல் இன்னும் அடங்கல, பார்க்கலாம், என்ன நடக்குதுன்னு சரி, நான் ஒரு மேட்டர் சொல்றேன் கேளு. உணவு பாதுகாப்புத்துறையில "லைசென்ஸ்' வாங்கின கதை தெரியுமா?'' என்றாள் சித்ரா.

""ம்..ம்... சொல்லுங்க,'' என்றாள் மித்ரா.

""புட் சேப்டி லைசென்ஸ் வாங்க விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடந்திருக்கு. 12 லட்சத்துக்கு மேல "டர்ன் ஓவர்' இருந்தா, 3 ஆயிரம் ரூபாய் கட்டி "லைசென்ஸ்' வாங்கணும்; அதுக்கு குறைவாக இருந்தா, 100 ரூபாய் கட்டினா போதும். உஷார் ஆன சில பெரிய ஓட்டல், பேக்கரிகாரங்க, 10 லட்சத்துக்கு வியாபாரம் நடக்கலைன்னு சொல்லி, 100 ரூபாய் மட்டும் கட்டி, பதிவு பண்ணிட்டு போயிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.

""இப்படி ஏமாத்துறது நல்லதா,'' என்று கேட்ட, மித்ரா, ""பஸ் ஊழியருங்க நடத்திய திடீர் போராட்டத்தால, திருப்பூர்ல பயணிகள் படாதபாடு பட்டுட்டாங்க,'' என்றவாறு, ஸ்டிரைக் விவகாரத்துக்குள் நுழைந்தாள்.

""ஆனா, பல்லடத்தில் பெருசா பாதிப்பு இல்லையாமே!,'' என்று மித்ரா கேட்டாள்.

""பல்லடம் கிளை அதிகாரிங்க, ஊழியர்களை பிடிச்சு, கெஞ்சிக் கூத்தாடி, ஒருவழியாக முதல் நாளே பஸ்களை இயக்கிட்டாங்க. ஆனா, திருப்பூர்ல யாரும் இதை கண்டுகாம விட்டதால, மக்களோட வயித்தெரிச்சலை கொட்டிக்கிட்டது தான் மிச்சம்,'' என்றாள் சித்ரா.

""திருப்பூர்ல, ஸ்டிரைக் நேரத்தில், பயணிகளோடு சேர்ந்து கோர்ட் ஊழியர்களும், அவதிப்பட்டாங்க தெரியுமா?,'' என்று மித்ரா கேட்டாள்.

""பஸ்சுக்கும் கோர்ட் ஊழியர்களுக்கும் என்ன சம்பந்தம்?'' என்று சித்ரா ஆச்சரியத்தோடு கேட்டாள்.

"" பஸ்களை நிறுத்திட்டு, ஊழியருங்க போய்ட்டாங்க. அப்ப பார்த்து, பஸ் ஸ்டாண்டில் நின்னுகிட்டிருந்த, ரெண்டு அரசு பஸ்களை, நோட்டீஸ் ஒட்டி ஜப்தி, செஞ்சிருக்காங்க. பஸ்சை கோர்ட்டுல கொண்டுபோய் நிறுத்தணும்னு பஸ் ஊழியர்களை கேட்டப்ப, "நாங்க போராட்டத்தில இருக்கோம்,'னு சொல்லி, பஸ்சை எடுக்கலையாம். ஜப்தி செஞ்ச பஸ்சை விட்டுட்டு போக முடியாம, கோர்ட் ஊழியர்கள் தவிச்சுட்டாங்க,'' என்றாள் மித்ரா.

""அப்புறம் என்னாச்சு?'' ஆர்வமானாள் சித்ரா.

""பகல், 12:00 மணிக்கு ஜப்தி செஞ்ச பஸ்சை, சாயந்திரம் ஆறு மணிக்கு மேல், கிடைச்ச டிரைவரை வெச்சு, எடுத்துட்டு போனாங்களாம்,'' என்றாள் மித்ரா.

""திருப்பூர் யூனியன்ல இருக்கற ஒரு பஞ்சாயத்து கிளார்க் ஒருத்தர், முன்னாள் தலைவர் சொல்றத கேக்கறதில்லைன்னு, டிரான்ஸ்பர் செஞ்சுட்டாங்க. இப்ப வந்த கிளார்க் மேலையும், அதே புகாராம். அதனால, கிளார்க்கை யூனியன் விட்டே, வேறு யூனியனுக்கு, டிரான்ஸ்பர் போட்டிருக்காங்க.

""ஆனா, அங்கிருந்த கிளார்க்கோ, "சபா'வை புடிச்சு, கரெக்ட் பண்ணி, டிரான்ஸ்பரை நிறுத்திட்டாராம்,'' என்று மித்ரா கூறினாள்.

""ஓ! அப்படியா சங்கதி,'' என்ற சித்ரா, ""கட்டப்பஞ்சாயத்து போலீஸ் மேட்டர் தெரியுமா,'' என்றாள். ""சொல்லுங்க, தெரிஞ்சுக்கிறேன்,'' என்ற மித்ரா ஆர்வமானாள்.

""சிட்டி ஸ்டேஷன்களில் வைட்டமின் "ப' வாங்கி, கட்டப்பஞ்சாயத்து செஞ்சுகிட்டிருந்த, அனுப்பர்பாளையம், வேலம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த, போலீசார் சிலர், வேற ஸ்டேஷன்களுக்கு மாத்தினாங்க. ஆனா, என்ன நடந்துச்சோ தெரியல, அவங்க எல்லாம், "பேக் டூ பெவிலியன்' ஆயிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
""பாவம், லஞ்சம் வாங்காத சில நல்ல மனசுக்காரங்களுக்கு, இதனால ரொம்ப வருத்தமா இருக்கும்,'' என்று மித்ரா ஆதங்கப்பட்டாள்.

""இன்னொரு விஷயமும் இருக்கு. அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டரோட ஜீப் சந்தைக்கு இடையூறா வந்து நின்னிருக்கு. ஆனா, அதில் இன்ஸ்பெக்டர் வரலை. காய்கறி வியாபாரிகிட்ட போன டிரைவர், ""இன்ஸ் பெக்டருக்கும், எனக்கும் காய்கறி வேணும்,'னு சொல்லி, பணம் எதுவும் கொடுக்காம, 500 ரூபாய்க்கு காய்கறியை அள்ளி போட்டுட்டு கிளம்பியிருக்காரு. சாபம் கொடுக்காத குறையா, தினமும் பல ஆயிரம் மாமூல் வாங்கறாங்க. இந்த காசைகூட கொடுக்க முடியாதா,'' அப்படின்னு வியாபாரிங்க தலையில் அடிச்சுகிட்டாங்களாம்,'' என்று சித்ரா கூறினாள்.

""உழைச்சு சாப்பிட்டாலே, ஒடம்புல ஒட்டறதில்லை; இதில, ஊரார் உழைப்பை உறிஞ்சு சாப்பிட, எப்படித்தான் மனசு வருதோ,'' என்று கூறியபடி, கடிகாரத்தை பார்த்த மித்ரா, "சரிக்கா, நேரமாச்சு; நான் கௌம்ப றேன்,'' என்று கூறி, விடைபெற்றாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X