சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குப்பை வரி வசூலிக்க தடை கோரி வழக்கு

Added : டிச 21, 2017
Share
Advertisement

மதுரை, மதுரையில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளுக்கு மாநகராட்சி புதிதாகவரி வசூலிக்க தடை கோரியவழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை கூடல் நகர் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க செயலாளர் ஆர்தர் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை மாநகராட்சியுடன் 2011 ல் சாந்திநகர், விளாங்குடி, கூடல்நகர் இணைக்கப்பட்டன.
இப்பகுதிகளில் குடிநீர், ரோடு, பாதாளச் சாக்கடை உட்பட அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிறைவேற்றவில்லை. மாநகராட்சி நிர்வாகம் சொத்துவரி உட்பட பல்வேறு வரிகள் வசூலிக்கிறது. வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளுக்கும் வரியை முன்தேதியிட்டு புதிதாக மாநகராட்சி வசூலிக்கிறது.
தொழிற்சாலைகள்,
திருமண மண்டபங்கள், ஓட்டல்களில் குப்பைகளை சேகரிக்க தனி வரி வசூலிக்க விதிகளில் இடம் உள்ளது.
வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளுக்கு வரி
வசூலிக்க விதிகளில்
இடமில்லை.
வீட்டுவரியுடன் சேர்த்து, குப்பைகளை சேகரிப்பதற்கான வரியை செலுத்துமாறு மக்களை மாநகராட்சி கட்டாயப்படுத்துகிறது. குப்பைகளை சேகரிப்பதற்கான வரி வசூலிக்க மாநகராட்சி கமிஷனருக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.
இது தொடர்பாக நாங்கள் அனுப்பிய மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு
உத்தரவிட
வேண்டும்.
இவ்வாறு ஆர்தர் மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் எம்.வேணு கோபால்,
ஆர்.தாரணி அமர்வு நகராட்சி நிர்வாகம் மற்றும்
குடிநீர் வழங்கல்துறை செயலாளர், மதுரை கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி ஜன.,9 க்கு
ஒத்தி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X