பொது செய்தி

இந்தியா

ரூ.2,000 நோட்டுகள் வெளியிடுவது நிறுத்தம்!

Added : டிச 21, 2017 | கருத்துகள் (58)
Advertisement
 2000 ரூபாய் நோட்டு ,2000 rupees note, ரிசர்வ் வங்கி,Reserve Bank,  செல்லாத ரூபாய் நோட்டு ,demonetization, பாரத ஸ்டேட் வங்கி, State Bank of India, சவுமியா காந்தி கோஷ் , Soumya Gandhi Ghosh,

புதுடில்லி: அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதால், 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்தியுள்ளதுடன், கையில் உள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதையும் ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்தாண்டு நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியானது. அதன்படி புழக்கத்தில் இருந்த, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, புதிதாக, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, 200 ரூபாய் நோட்டும் புழக்கத்தில் விடப்பட்டது.

இந்நிலையில், நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் குறித்து, ரிசர்வ் வங்கி சமீபத்தில், தனது ஆண்டு அறிக்கையில் கூறியிருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை பொருளாதார ஆலோசகர், சவுமியா காந்தி கோஷ் எழுதியுள்ள ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ரூ.2,000 நோட்டுகள் நிறுத்தம்


நிறுத்தம்:

ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையின்படி, இந்தாண்டு மார்ச் மாத நிலவரப்படி, 3.50 லட்சம் கோடி ரூபாய்க்கு, குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும், 13.32 லட்சம் கோடி ரூபாய்க்கு, உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளன. லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையின்படி, ரிசர்வ் வங்கி, 15.78 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளையும் அச்சிட்டுள்ளது.

அச்சிடப்பட்ட நோட்டுகள் மற்றும் புழக்கத்தில் உள்ள நோட்டுகளுடன் ஒப்பிடுகையில், 2.46 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உயர் மதிப்பு நோட்டுகள் புழக்கத்துக்கு வரவில்லை. ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியுள்ளது. மேலும், கையில் உள்ள அச்சிடப்பட்ட நோட்டுகளையும் புழக்கத்தில் விடவில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sekar KR - Chennai,இந்தியா
22-டிச-201708:28:15 IST Report Abuse
Sekar KR சொல்லிடீங்கள, மாத்திடறோம் ரூபாய் 500 ஆக.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-டிச-201702:27:33 IST Report Abuse
Mani . V இந்திய மக்களின் பல லட்சம் கோடி வீண் விரையம், இந்த "உருப்படாத வேலைக்கு". ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel
Arasu - Madurai,இந்தியா
21-டிச-201718:21:44 IST Report Abuse
Arasu 2000 நோட்டை ஒழிப்பதை வரவேற்கிறேன் , 1000 நோட்டை ஒழித்ததையும் வரவேற்கிறேன் , 500 நோட்டை ஒழித்தது முட்டாள்தனம் . மோடியின் தான்தோன்றித்தனமாp செயலால் 150 உயிர் செத்தது தான் மோடியின் லாபம் . பொண்டாட்டி , புள்ள குடும்பம் இல்லாதவரை பதவியில் வைத்தால் இப்படித்தான் தான்தோன்றித்தனமாக நடப்பார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X