'தினமலர்' வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதியின் மனைவி எஸ்.சுப்பலட்சுமி காலமானார் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'தினமலர்' வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதியின்
மனைவி எஸ்.சுப்பலட்சுமி காலமானார்

மதுரை: 'தினமலர்' வெளியீட்டாளர், டாக்டர் ஆர்.லட்சுமிபதியின் மனைவி எஸ்.சுப்பலட்சுமி, 78, நேற்று அதிகாலை - டிச., 21ல் இயற்கை எய்தினார்.

'தினமலர்', வெளியீட்டாளர் ,ஆர்.லட்சுமிபதியின், மனைவி எஸ்.சுப்பலட்சுமி, காலமானார்


கடந்த சில மாதங்களாக உடல் நலம் இல்லாமல் சென்னையில் இருந்தார். நேற்று அதிகாலை, 3:21 மணிக்கு இவ்வுலகை விட்டு மறைந்து, மீளா துயரத்தில் ஆழ்த்தினார். அவரது உடல், மதுரை சத்யசாய் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு, நேற்று மதியம் கொண்டு வரப்பட்டது. அங்கு குடும்பத்தினர், உறவினர்கள், 'தினமலர்' ஊழியர்கள், முக்கிய பிரமுகர்கள், சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லுாரி, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த எஸ்.சுப்பலட்சுமி, 1939ம் ஆண்டு, அக்., 4ல் நெல்லை மாவட்டம், பாலமார்த்தாண்டபுரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் சிவராமகிருஷ்ணன் அய்யர் - விசாலாட்சி அம்மையார்.

'தினமலர்' வெளியீட்டாளர், டாக்டர் ஆர்.லட்சுமிபதி வாழ்க்கை பயணத்திலும், 'தினமலர்' நாளிதழ் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து வழிகாட்டினார்.


அவருக்கு மகன்கள் டாக்டர் எல்.ராமசுப்பு - புவனா, எல்.ஆதிமூலம் - சுதா, மகள்கள் என்.கிருஷ்ணவேணி - எஸ்.நடராஜமூர்த்தி, (லேட்) ஆர்.சியாமளா - ஆர்.ருத்ரகுமார் மற்றும் ஐந்து பேரன்களும், இரண்டு பேத்திகளும் உள்ளனர்.

அவரது இறுதி சடங்கு, மதுரை - அருப்புக்கோட்டை ரோடு, வலையங்குளத்தில் இன்று, டிச., 22 மதியம், 2:30 மணிக்கு நடக்கிறது.

கண்ணீர் மல்க அஞ்சலி


தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, அவரது மனைவி காந்தியுடன் அஞ்சலி செலுத்தினார்.த.மா.கா., தலைவர் வாசன், முன்னாள் எம்.பி., சித்தன், நகர் தலைவர் சேதுராமன், முன்னாள் கவுன்சிலர் சிலுவை,நிர்வாகி மைதீன் பாட்ஷா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

கலெக்டர் வீரராகவராவ், மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் செல்லத்துரை, பதிவாளர் சின்னையா, சிண்டிகேட் உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், முரளிபக்ஷித், ஆண்டியப்பன், ராஜ்குமார், ராஜ சபாலா, டீன் நல்லகாமன்,

தேர்வாணையர் ரவி, கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன்...என்.எஸ்.எஸ்., இயக்குனர் பாண்டி, பி.ஆர்.ஓ., அறிவழகன், திருச்சி பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் மீனாள், விஷால் டி மால் நிர்வாக இயக்குனர் இளங்கோவன்...

அரபிந்தோ மீரா கல்விக் குழும தலைவர் சந்திரன், மதுரை உற்பத்தி திறன் குழு தலைவர் சேதுபதி,

Advertisement

செயலர் நாகநாதன், நிர்வாகிகள் சுப்பிரமணியன், சுரேஷ் பாபு, விவேக் குழுமத் தலைவர் கோதண்டராம ரெட்டி சார்பில் மண்டல மேலாளர் குமரன்...
கோவை சங்கரா கலைக் கல்லுாரி தலைவர் ராமச்சந்திரன், விக்டோரியா எட்வர்டு மன்ற தலைவர் இஸ்மாயில், கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் சொக்கலிங்கம்...

எழுத்தாளர் திருமலை, மதுரை வாழ் குமரி மாவட்ட மக்கள் பேரவை பொதுச்செயலர் சந்திரசேகரன், நிர்வாகிகள் ஸ்டீபன், தங்கையா, திருவிளையாடற் புராண ஆராய்ச்சி மைய நிர்வாகி முருகேசன், பதஞ்சலி சில்க்ஸ் உரிமையாளர் சுப்பிரமணியன்...

சின்மயா மிஷன் தலைவர் மீனாட்சி சுந்தரம், துணைத் தலைவர் அழகர், மார்க்சிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் ஜோதிராம், நகர் செயலர் விஜயராஜன், திருச்சி குமார், தர்மராஜ், முரளி, சென்னை தொழிலதிபர் நாராயணன்...

மதுரை சாய்பாபா அமைப்பு நிர்வாகிகள் நாராயண சுவாமி, சந்திரன், பாலாஜி, டாக்டர்கள் மீனாட்சிசுந்தரம், முருகன் ஜெயராமன், ராஜரத்தினம், தேனி வனம் அமைப்பு நிறுவனர் டாக்டர் ராஜ்குமார்...

இரங்கல் கூட்டம்


ஆர்த்தி ஓட்டல் நிர்வாக இயக்குனர் ராமகிருஷ்ணன், குமுதம் வார இதழ் சார்பில் நிருபர் நாகேந்திரன், பாரதி யுவகேந்திரா நிறுவனர் பாலு, வடமலையான் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் புகழகிரி, இயக்குனர் சந்திரா...

விஸ்வ ஹிந்து பரிஷத் அகில இந்திய தலைவர் வேதாந்தம், ஓட்டல் நிர்வாகிகள் சங்க பொருளாளர் செந்தில்வேல், கவிஞர் வைரமுத்து சார்பில் பாலராமலிங்கம், திருப்பரங்குன்றம் தாசில்தார் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், ஜனதாதள மாநில பொதுச் செயலர் ஜான் மோசஸ் ஆகியோர், இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மதுரை, 'தினமலர்' அலுவலகத்தில் பொது மேலாளர் பாலமுருகன், இணையதள முன்னாள் ஆசிரியர் இளங்கோவன் தலைமையில் ஊழியர்கள், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின், இரங்கல் கூட்டம் நடந்தது.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
23-டிச-201700:07:19 IST Report Abuse

Sambasivam Chinnakkannuசாதனை படைக்கும் பலருக்கு பின் அவர்களின் சக்தியாக இருப்பது மனைவி எனும் ,,,,, பெரும் சக்தி ,,, அம்மையாரின் துணை தினமலர் வெளியீட்டாளருக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்திருக்கும் ,,,,,,, ஆண்டவன் அனைவரையும் ஓர் நாள் அழைத்துக்கொள்வான் ,,,, குடும்பத்தினர் துக்கத்தை மறந்து அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய அனைவரும் ஈசனிடம் வேண்டுவோம் ,,,,

Rate this:
Thamarai selvan - Yalpanam,இலங்கை
22-டிச-201722:50:47 IST Report Abuse

Thamarai selvanMy deep Regrets for the family of Dinamalar.......

Rate this:
G.VIJAYABASKAR - Tiruchchirappalli,இந்தியா
22-டிச-201718:03:16 IST Report Abuse

G.VIJAYABASKARஅம்மையாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்..... அம்மையாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தேறுதலையும் எல்லாம் வல்ல இறைவன் அளிப்பாராக....

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X