பதிவு செய்த நாள் :
2ஜி ஊழல்,2G scam, 2ஜி ஸ்பெக்ட்ரம், 2G spectrum,டில்லி சி.பி.ஐ நீதிமன்றம்,Delhi CBI court, நீதிபதி ஓ.பி.சைனி, judge OB Shaini, கருணாநிதி,Karunanidhi, மத்திய அரசு, federal government, சி.ஏ.ஜி,CAG, உச்ச நீதிமன்றம்,Supreme Court, கனிமொழி , Kanimozhi, ராஜா, Raja, தி.மு.க., DMK, காங்கிரஸ் , Congress,

புதுடில்லி: நாட்டை உலுக்கிய, 1.76 லட்சம் கோடி ரூபாய், '2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து, டில்லி, சி.பி.ஐ., நீதிமன்ற சிறப்பு நீதிபதி, ஓ.பி.சைனி தீர்ப்பு அளித்துள்ளார். குற்றத்தை நிரூபிக்க, சி.பி.ஐ., தவறிவிட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

2ஜி ஊழல்,2G scam, 2ஜி ஸ்பெக்ட்ரம், 2G spectrum,டில்லி சி.பி.ஐ நீதிமன்றம்,Delhi CBI court, நீதிபதி ஓ.பி.சைனி, judge OB Shaini, கருணாநிதி,Karunanidhi, மத்திய அரசு, federal government, சி.ஏ.ஜி,CAG, உச்ச நீதிமன்றம்,Supreme Court, கனிமொழி , Kanimozhi, ராஜா, Raja, தி.மு.க., DMK, காங்கிரஸ் , Congress,


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2007 - 2008ல், தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா, தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்தார்.


சி.ஏ.ஜி., அறிக்கை


அப்போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி, அறிக்கை தாக்கல் செய்தார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு கொள்கையால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, அறிக்கையில் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ., விசாரணை செய்ய உத்தரவிட்டது. இதற்கிடையில், '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை ரத்து செய்து, 2012ல் தீர்ப்பு அளித்தது.


இந்த மோசடி தொடர்பாக, சி.பி.ஐ., இரண்டு வழக்குகளையும், இதில் நடந்துள்ள பண மோசடிகள் தொடர்பாக, அமலாக்கத் துறை ஒரு வழக்கையும் தொடர்ந்தன. இந்த வழக்குகள் விசாரணை, டில்லி, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நடந்து வந்தன. ஏழு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்குகளில், சி.பி.ஐ., நீதிமன்ற சிறப்பு நீதிபதி, ஓ.பி. சைனி நேற்று தீர்ப்பு அளித்தார்.


சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழி உட்பட, 17 பேரையும் விடுதலை செய்து, அவர் தீர்ப்பளித்தார்.


19 பேர் விடுவிப்பு


அதேபோல், அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, கருணாநிதியின் மனைவி தயாளு உட்பட, 19 பேரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளில், குற்றங்களை நிரூபிக்க, சி.பி.ஐ., தவறிவிட்டதாக, தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.'2ஜி' ஊழல் வழக்கு, நாடு முழுவதும் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மீதான பல்வேறு ஊழல் வழக்குகளில், மிகப் பெரிய ஊழலாக இது பார்க்கப்பட்டது.


தீர்ப்பு நாளான நேற்று, ராஜா, கனிமொழி உட்பட அனைவரையும் ஆஜராகும்படி, நீதிபதி உத்தரவிட்டிருந்தார். நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து அறிவதற்காக நீதிமன்ற வளாகத்தில் மக்கள் பெருமளவில் கூடியிருந்தனர். தி.மு.க.,வினரும் அதிகளவில் குவிந்திருந்தனர். சி.பி.ஐ., தொடர்பான வழக்குகளில், 1,552 பக்கங்கள் உள்பட, மூன்று வழக்குகளையும் சேர்த்து, 2,183 பக்கத் தீர்ப்பை நீதிபதி அளித்தார். தீர்ப்பின் முக்கிய பகுதியை, நீதிபதி சைனி வாசித்தார்;


அப்போது அவர் கூறியதாவது:


இந்த வழக்குகளில், சி.பி.ஐ., ஒரு சில ஆதாரங்களின் அடிப்படையில், ஊழல் வழக்கை தொடர்ந்துள்ளது. எதுவுமே இல்லாத ஒன்று, மிகப் பெரியதாகக் காட்டப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவர் மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க, சி.பி.ஐ., தவறிவிட்டது.இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டார்.


இந்த வழக்கை,மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதால்,

Advertisement

விடுவிக்கப்பட்டுள்ள அனைவரும், தலா,ரூ. ஐந்து லட்சம் சொந்த ஜாமின் அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.இந்தத் தீர்ப்பு வெளியானதும், நீதிமன்றத்தில் குவிந்திருந்த, தி.மு.க.,வினர், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடினர்.

இந்த தீர்ப்பை, தி.மு.க.,வினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடினர்.இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட ராஜா, 15 மாதங்களும், கனிமொழி, ஆறு மாதங்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மிகப் பெரிய ஊழல் வழக்கில் இருந்து, கனிமொழி, தயாளு உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதால், கருணாநிதியின் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே, சி.பி.ஐ., நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


யார் யார் விடுதலை?


சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள்:1. ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர், தி.மு.க.,
2. கனிமொழி, ராஜ்யசபா, எம்.பி., - தி.மு.க.,
3. ஷாகித் பால்வா, ஸ்வான், டிபி ரியாலிட்டி புரோமாட்டர்
4. சந்தோலியா, ராஜாவின் முன்னாள் செயலர்
5. சித்தார்த் பெகுரா, தொலை தொடர்புத் துறை முன்னாள் செயலர்
6. சஞ்சய் சந்ரா, யூனிடெக் ஒயர்லெஸ் நிர்வாக இயக்குனர்
7. வினோத் கோயங்கா, ஸ்வான் ரியாலிட்டி நிர்வாக இயக்குனர்
8. சரத் குமார், கலைஞர், 'டிவி' முன்னாள் இயக்குனர்
9. கரீம் மொரானி, பாலிவுட் தயாரிப்பாளர்
10. கவுதம் தோஷி, ரிலையன்ஸ் அனில் அம்பானி நிறுவன நிர்வாகி
11. ஹரி நாயர், ரிலையன்ஸ் அனில் அம்பானி நிறுவன நிர்வாகி
12. சுரேந்திர பைபரா, ரிலையன்ஸ் அனில் அம்பானி நிறுவன நிர்வாகி
13. ஆசிப் பால்வா, இயக்குனர், குசோகான் புரூட்ஸ்
14. ராஜிவ் அகர்வால், இயக்குனர் குசேகான் புரூட்ஸ் & வெஜிடபுள்ஸ்நிறுவனங்கள்
1. ரிலையன்ஸ் டெலிகாம் லிட்.,
2. ஸ்வான் டெலிகாம்
3. யுனிடெக் ஒயர்லெஸ்


Advertisement

வாசகர் கருத்து (272)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
aanthai - Toronto,கனடா
29-டிச-201701:35:49 IST Report Abuse

aanthaiவிஞ்ஞான ரீதியான ஊழலில் நான் கிங்குதான் சொல்கிறார்போல நாட்டுநிலமை இப்படி ஆகிவிட்டதே என்று நடுநிலையான மக்கள் வருத்தப்படுகின்றனர் . இவர்களுக்கு குஷியும் கும்மாளமுமாய் இருக்கு .

Rate this:
krishna - cbe,இந்தியா
28-டிச-201708:57:15 IST Report Abuse

krishnaஅரசியல் விளையாட்டுக்களில் இது போன்ற தீர்ப்பும் ஒன்று.நாடே ஊழலில் ஊறி திளைக்கின்றது என்பதற்கு இந்த தீர்ப்பு ஒன்றே போதும்.

Rate this:
skv - Bangalore,இந்தியா
28-டிச-201705:26:39 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>டமால்னு வெடி வெடிக்கும்னு பார்த்தல் BUUUUUUUUUUSVAANAMAACHCHUTHE

Rate this:
மேலும் 269 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X