நாடு முழுவதும், ஆவலுடன் எதிர்பார்த்த, '2ஜி' வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட, தி.மு.க., மகளிர் அணி மாநில செயலர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ள தற்கு, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்து:
வரலாற்று சிறப்பு
தி.மு.க.,வை அவமானப்படுத்தி, அழிக்க வேண்டும் என, திட்டமிட்டு போடப்பட்ட வழக்கு தான், '2ஜி' வழக்கு. இந்த வழக்கில், பெரிய அளவில் சித்தரித்து, பொய் கணக்கை காட்டி, திரித்தனர். ராஜா, கனிமொழி குற்றமற்றவர்கள் என, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பின் வாயிலாக, தி.மு.க.,வினர் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது உறுதியாகி உள்ளது. தற்போது, தி.மு.க., மீது சுமத்தப்பட்ட களங்கம் விலகி உள்ளது.
-ஸ்டாலின், செயல் தலைவர், தி.மு.க.,
இறுதி தீர்ப்பு அல்ல
நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை, விமர்சிக்கக் கூடாது; இது இறுதியான தீர்ப்பும் இல்லை. மேல்முறையீடு செய்ய அனைத்து முகாந்திரமும் இந்த வழக்கில் உள்ளன.
எனவே, மேல்முறையீடு செய்யும் போது, நல்ல தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது. முதலில் வருபவர்களுக்கு, முன்னுரிமை என்ற முறையை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
-ஜெயகுமார், தமிழக அமைச்சர், அ.தி.மு.க.,
அநீதி, ஊழலுக்கு வெற்றி
இந்தியாவின் இயற்கை வளங்கள் கொள்ளை .
அடிக்கப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்டவர்கள், தண்டனையின்றி விடுதலை
செய்யப்படுவதும், தங்களைத் தாங்களே உத்தமர்களாக சித்தரித்துக் கொள்வதும்
அதிர்ச்சியளிக்கிறதுஅநீதியும், ஊழலும் இப்போது வென்றிருக்கிறது. ஆனால், எல்லா நாளும் வெல்ல முடியாது.
-ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,
தவறான பிரசாரம்
'2ஜி'
வழக்கை முன்னிறுத்தி, காங்கிரஸ் தலைமை யிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சி பற்றி,
பா.ஜ.,வினர் தவறான பிரசாரம் செய்தனர். ஆனால், இது தவறு என்பது தற்போது
நிரூபணமாகியுள்ளது. காங்கிரஸ் நல்லாட்சி தந்துள்ளது என்பது
உறுதியாகியுள்ளது.
-திருநாவுக்கரசர், மாநில தலைவர், காங்.,
ஊழல் அகற்றப்பட வேண்டும்
தீர்ப்பை தீர்ப்பாக மட்டுமே பார்க்க முடியும். இதற்கு முன் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. எனவே, தீர்ப்பின் முழு விபரத்தை படித்து பார்த்த பின் தான், அனைத்தையும் தெரிவிக்க முடியும். இந்தியாவி லிருந்தும், தமிழகத்திலிருந்தும், லஞ்சமும், ஊழலும் அகற்றப்பட வேண்டும்.
-தமிழிசை, மாநில தலைவர், பா.ஜ.,
நியாயத்திற்கு வெற்றி
தவறான அரசியல், உள்நோக்கத்தோடு, தி.மு.க., மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற, கெட்ட எண்ணத்தில் புனையப்பட்ட வழக்கு. இந்த வழக்கில் நியாயம் வென்றுள்ளது. இனி எல்லாமே வெற்றி தான். இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தொடரப்பட்டது.
-துரைமுருகன், முதன்மை செயலர், தி.மு.க.,
மன்னிப்பு கேட்பார்களா?
'2ஜி' வழக்கை, பிரசாரமாக முன்வைத்தும், போஸ்டர்கள் ஒட்டியும் தான் மத்தியில், பா.ஜ.,வும், தமிழகத்தில், அ.தி.மு.க.,வும் ஆட்சிக்கு வந்தன. இப்போது, அவர்கள் மன்னிப்பு கேட்பரா என்பதைப் பார்க்க வேண்டும்.
-குஷ்பு, செய்தி தொடர்பாளர், காங்.,
மேல்முறையீடுதேவை!:
'2ஜி' வழக்கில், தற்போது வெளியாகி உள்ளது, இறுதி , தீர்ப்பு அல்ல. சி.பி.ஐ., கோர்ட் வழங்கிய
தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு மேல்முறையீடு செய்ய
வேண்டும்.
-சுப்பிரமணியன் சாமி, ராஜ்யசபா எம்.பி., - பா.ஜ.
உண்மை வென்றுள்ளது!:
ஐ.மு., கூட்டணி தலைமையிலான, அரசு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என, தற்போது நிரூபணமாகி உள்ளது. '2ஜி' வழக்கில், அனைவரும் விடுவிக்கப்பட்டு உள்ளதன் மூலம், நீதி நிலைநாட்டப்பட்டு உள்ளது; உண்மை வென்றுள்ளது.
-சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,
பொய் பிரசாரத்துக்கு முடிவு!
'2ஜி' வழக்கில், சி.பி.ஐ., கோர்ட் வழங்கி உள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்; இது, எனக்கு
பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம், ஐ.மு., கூட்டணி அரசுக்கு எதிராக செய்யப்பட்ட பொய் பிரசாரம் முடிவுக்கு வந்துள்ளது.
-மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர், காங்.,
நற்சான்று அல்ல!
'2ஜி' வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, காங்கிரசாருக்கு வழங்கப்பட்டுள்ள நற்சான்று அல்ல. முந்தைய, ஐ.மு., கூட்டணி அரசால், 122 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, '2ஜி' அலைக்கற்றை உரிமத்தை, 2012ல், உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அப்போதே, இவர்களின் கொள்கையில் ஊழல் இருப்பது தெளிவாகி விட்டது.
-அருண் ஜெட்லி, மத்திய நிதியமைச்சர், பா.ஜ.,
தர்மத்திற்கு வெற்றி
ஸ்பெக்ட்ரம் வழக்கின் மூலம் காங்கிரசும், தி.மு.க.,வும் அரசியல் ரீதியாக பழிவாங்கப் பட்டன. 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வும், அடுத்து வந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வும் வெற்றி பெற்றுள்ளன. இது நியாயம் மற்றும் தர்மத்திற்கு கிடைத்த தீர்ப்பு.
-நாராயணசாமி, புதுச்சேரி முதல்வர், காங்.,
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (23)
Reply
Reply
Reply