அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'2ஜி' களிப்பில் ஹிந்தியை தூக்கி பிடித்த தி.மு.க.,

'2ஜி' முறைகேடு வழக்கில் இருந்து, கனிமொழி, ராஜா விடுவிக்கப்பட்டதை, டில்லியில் கொண்டாடிய தி.மு.க.,வினர், ஹிந்தி மொழி வாசகங்கள் இடம் பெற்ற பதாகைகளை துாக்கி பிடித்தது, திராவிட இயக்கத்தினரை அதிர்ச்சி அடையச் செய்து உள்ளது.

 2ஜி ஊழல் ,2G scam,காங்கிரஸ் ,Congress, ஹிந்தி, Hindi, தி.மு.க.,DMK,  கனிமொழி,Kanimozhi, ராஜா,Raja,   சி.பி.ஐ.,CPI,  சத்யமேவ ஜயதே, Satyameva Jayate,


முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், காங்கிரசுடன், தி.மு.க., இடம் பெற்ற போது, '2ஜி' அலைக்கற்றை வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, சி.பி.ஐ., தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


விடுவிப்பு


ஏழு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், டிச., 21ல், டில்லி சிறப்பு நீதிமன்றம்

வழங்கிய தீர்ப்பில், தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவும், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி., கனிமொழியும், மற்றவர்களும் விடுவிக்கப் பட்டனர்.தீர்ப்பை எதிர்பார்த்து, டில்லிக்கு சென்ற தி.மு.க.,வினர், டில்லியில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.


ஆர்வ மிகுதியில், தி.மு.க.,வினர் தங்கள் கைகளில், ஹிந்தியில், 'சத்யமேவ ஜயதே' என, எழுதப்பட்ட பதாகைகளை, துாக்கி பிடித்து, களிப்பை காட்டினர்.'திராவிட பாரம்பரியம், கொள்கையே உயிர் மூச்சு' என, தி.மு.க., பிரசாரம் செய்து, அரசியலில் கால் ஊன்றி வந்தது. கடந்த, 1965ல், தி.மு.க., நடத்திய, ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், பல உயிர் பலிகளையும், காயங்களையும் கொண்ட தியாக வரலாறு என, கட்சியினரால், பிரசாரம்செய்யப்படுகிறது.


அதிருப்தி


இந்நிலையில், '2ஜி'யில், தப்பித்த மகிழ்ச்சியில், தி.மு.க.,வினர் ஹிந்தியை துாக்கி பிடித்த சம்பவம், திராவிட இயக்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. டில்லியில், தமிழ் பதாதைகளை பிடித்து இருந்தால், அது மொழியின் மீதான பற்றை காட்டி

Advertisement

இருக்கும் என, தமிழ் மொழி ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

பல ஆண்டுகளாக அரசியல் நடத்தி வரும், தி.மு.க., தமிழகத்தில், ஹிந்தியை எதிர்த்து விட்டு, தலைநகர் டில்லியில், ஹிந்திக்கு அங்கீகாரம் தர வேண்டிய கட்டாயத்திற்கு வந்து விட்டதோ என, திராவிட இயக்க ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.


அதேநேரத்தில், தேசிய அளவில் அங்கீகரிக்கப் பட்ட ஹிந்தியை, தொடர்ந்து எதிர்த்து வந்த, தி.மு.க., தற்போது துாக்கிப்பிடித்த சம்பவம், தேசிய பற்றாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி
உள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (116)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
23-டிச-201722:03:48 IST Report Abuse

R.MURALIKRISHNANஅட நம்புங்க சாமி இவனுக தான் தமிழையும் தமிழ்நாட்டையும் காப்பாத்தரவனுக.

Rate this:
thiru - Chennai,இந்தியா
23-டிச-201723:37:45 IST Report Abuse

thiruஎத்தின நாள்தான் நம்புறமாதிரி நடிக்க முடியும்......

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
23-டிச-201720:54:39 IST Report Abuse

r.sundaramசாதியத்துக்கும் திமுகவுக்கும் தூரம் ஜாஸ்தி. அவர்களுக்கு ஹிந்தி/சான்ஸ்க்ரிட் தெரியாததால் யாரோ எழுதிக்கொடுத்த பதாகைகளை கையில் வைத்துள்ளனர். அவ்வளவுதான். கழகங்கள் ஒருநாளும் திருந்தப்போவதில்லை, அவர்களால் தமிழகமும் செழிக்கப்போவதில்லை. ஒரே ஒரு உதாரணம். இவ்வளவு மழை பெய்திருக்கிறது ஆனால் தஞ்சாவூரில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என்று கருகின பயிர்களை காட்டி கொதிக்கும் விவசாயிகள். இதிலிருந்தே இவர்களின் ஆட்சியின் லட்சணம் தெரியவில்லையா?

Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
23-டிச-201719:56:51 IST Report Abuse

Vaduvooraan பிழைக்க நினைக்கும் தமிழர்கள் ஒவ்வொருவரும் வெறுப்பு இல்லாது பல மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். திமுகவில் இருப்பவர்கள் தமிழர்கள் தானே? அவர்களுக்கு பிழைப்பு பற்றி கவலை இருக்காதா?

Rate this:
arumugam subbiah - Tirunelveli,இந்தியா
23-டிச-201723:52:15 IST Report Abuse

arumugam subbiahஎல்லோரும் ஹிந்தி படிக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் தமிழே எங்கள் மூச்சு என்று ஹிந்திக்கு எதிராக கொடிபிடித்து பல தமிழ் பற்றாளர்களின் மரண தியாகத்திற்கு காரணமாகி தன்னையும் தன் கட்சியையும் வளர்த்து தனது பேரன், பேத்திகளுக்கு ஹிந்தி கற்று தந்து அவர்களை டில்லியில் கோலோச்ச செய்த துரோகம் ஏற்று கொள்ள தக்கதோ? "வாய்மையே வெல்லும்," சத்யமேவ ஜெயதே" சாத்தான் வேதம் ஓதுகிறது என்பதை தமிழகம் மட்டுமல்ல, உலகமே அறியும்.தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கூறும் நீதித்துறை காவலர்களுக்கு கல்லா கட்ட துணைநின்று பாவப்பட்டவர்களின் பணத்தை சுரண்டும் கண்டிப்பானவர்களுக்கு, 176000 கோடிகள் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது நீதி தேவதையின் கண்களை மறைத்தது கொடுமையிலும் கொடுமை. "தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்." கன்னியா குமரியில் வள்ளுவனுக்கு வானுயர சிலை வைத்தால் மட்டும் போதுமோ? அதன் வழி நடப்பது யார்? ஊருக்கு தான் உபதேசமோ?...

Rate this:
மேலும் 111 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X