பொது செய்தி

இந்தியா

மோசடியால் வங்கிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு

Added : டிச 23, 2017 | கருத்துகள் (32)
Advertisement
 வங்கிகள்,Banks,  லோக்சபா, lok sabha, மத்திய இணை நிதியமைச்சர் சிவ பிரதாப் சுக்லா,minister Shiv Pratap Shukla, ரிசர்வ் வங்கி, Reserve Bank,   ஏ.டி.எம்., ATM, மோசடி,fraud,

புதுடில்லி: மோசடி மற்றும் திருட்டு காரணமாக வங்கிகளுக்கு கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.17 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய இணை நிதியமைச்சர் சிவ பிரதாப் சுக்லா தெரிவித்ததாவது: மோசடி கண்காணிப்பு குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி கடந்த நிதியாண்டில் (2016-17) மட்டும் வங்கிகளுக்கு நிதி மோசடி காரணமாக 16,786 கோடி ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் கடந்த நிதியாண்டில் நாட்டின் பல பகுதிகளில் நடந்த வங்கி கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களால் ரூ.65.3 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டும் 393 கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் மூலம் ரூ.18.48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,களில் பாதுகாப்பை பலப்படுத்தவும் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
appaavi - aandipatti,இந்தியா
23-டிச-201718:05:12 IST Report Abuse
appaavi // மோசடியால் வங்கிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு // வங்கிக்கு மட்டுமா... மோசடி கும்பலால் இந்திய மக்களுக்கே...
Rate this:
Share this comment
Cancel
ananda - thirunelveli,இந்தியா
23-டிச-201717:26:31 IST Report Abuse
ananda இது டிஜிடல் இந்தியா வின் புகழ் . ஆண்டுக்கு 17000 கோடி இன்னும் இது ஏறு வரிசையில் ஏறும் என எதிர்பார்க்கலாம். ஏனென்றால் அரசின் சரியான முன் ஆலோசனை இல்லாத திடீர் திணிப்பு . சைபர் குற்ற தடுப்பு பிரிவின் ஏமாற்றம் இயலாமை.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
23-டிச-201714:36:11 IST Report Abuse
Nallavan Nallavan மோசடியால் இழப்பு என்பதில் பெரும்பங்கு வாராக்கடனாகத்தான் இருக்கும் .... கருத்தெழுதிய சிலரைத் தவிர மற்ற அனைவரும் கடன்கள் மோதியின் ஆட்சியில் வழங்கப்பட்டதாக நம்புகிறார்கள் மற்றும் அந்த எண்ணத்தை உண்டாக்கும் வகையில் எழுதுகிறார்கள் .... வங்கிகள் பொதுத்துறை ஆக்கப்பட்ட பிறகே கடன் வாங்கிவிட்டு ஏப்பம் விடும் பழக்கம் வந்தது .... அதுவும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலிருந்தே ..... உண்மையில் இழப்பு பதினேழாயிரம் கோடிக்கும் மிக அதிகமாக இருக்கும் ..... இதில் சில கடன்கள் பாஜக கூட்டணி ஆட்சியில் வாங்கப்பட்டிருக்கலாம் .... ஆனால் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றலாம் என்ற எண்ணத்தை அரசியல்வாதிகள், கார்ப்பரேட்டுகளிடம் ஏற்படுத்தியது காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளே ....
Rate this:
Share this comment
ananda - thirunelveli,இந்தியா
23-டிச-201717:33:22 IST Report Abuse
anandaஅந்த வாரா கடனை கார்போரேட்டுகளுக்கு என தள்ளுபடி செய்த்தது பி ஜெ பி அரசே என்பதை மறந்து விடக்கூடாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X