ஓட்டு எண்ணும் மையத்தில் ரகளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் மையத்தில் ரகளை

Updated : டிச 24, 2017 | Added : டிச 24, 2017 | கருத்துகள் (35)
Advertisement
ஆர்.கே.நகர் தேர்தல்,RK Nagar Election, ஓட்டு எண்ணிக்கை, Vote count,ரகளை, சென்னை ராணி மேரி கல்லூரி, Chennai Queen Mary College,சுயேச்சை , அதிமுக , AIADMK,துணை ராணுவம் ,Paramilitary, பிரவீன் நாயர் , Praveen Nair,தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், Electoral Officer Karthikeyan,

சென்னை : ஆர்.கே.நகர் தொகுதி ஓட்டு எண்ணும் பணி சென்னை ராணி மேரி கல்லூரியில் நடந்து வருகிறது. சுயேச்சை வேட்பாளர் முதல் மற்றும் 2வது சுற்றுகளில் தினகரன் முன்னிலையில் இருந்தார்.

இதனால் தினகரன் மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மேஜைகள் உடைக்கப்பட்டு, தேர்தல் அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஓட்டு எண்ணும் மையம் போர்க்களமானதை அடுத்து, ஓட்டு எண்ணிக்கை தற்காலிமாக நிறுத்தப்பட்டது.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அதிக அளவில் போலீசார் சென்றுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்பினரையும் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் சமாதானப்படுத்த முயன்றார். இருப்பினும் ரகளை அதிகமாகி போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் காயமடைந்த வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் காயங்களுடன் வெளியேறினர். அ.தி.மு.க., பெண் ஏஜென்ட் உட்பட நான்கு பேர் வெளியேற்றப்பட்டனர். அரை மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட ஓட்டு எண்ணிக்கை மீண்டும் துவக்கப்பட்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்தார்.வாசகர் கருத்து (35)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
rajan. - kerala,இந்தியா
24-டிச-201719:11:05 IST Report Abuse
rajan. இனி தமிழ்நாடு சின்னத்தாயி மன்னார்குடி சட்டபடி தான் இயங்கும். புதிய நாட்டாமை ஊழல் சக்கரவர்த்தியாக உருவாக ஆர் கே நகர் மக்கள் வாழ்த்துக்கள். இனி இருக்கும் ஊழல் கட்சிகளுக்குள் போட்ட போட்டி ஏற்பட்டு ரவுடி ரவுடியும் அடிச்சுகிட்டு விழுகிறவரை தமிழ்நாட்டை திருத்தவே முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
24-டிச-201717:08:10 IST Report Abuse
Ramasami Venkatesan ஒரு தொகுதி என்பதால் பணத்தால் ஓட்டு வாங்க முடிந்தது. ஒரே ஒரு எம் எல் ஏ அசெம்பிளியில் ஒரு மூலையில் சீட். கையெழுத்து போட்டால் சம்பளம் அலவன்ஸ். இந்த தொகுதி மக்களுக்கு இனி என்ன கிடைக்கும் தொகுதி மேம்பாட்டுக்கு. தொகுதி மேம்பாடு இனி டி டி டியின் சொந்த பணத்தில்தான். இதனால் கேசில் தப்பிக்க முடியாது. லாலு தீர்ப்பு ஒரு முன்னுதாரணம். எலக்ஷனில் ஜெயிப்பது வேறு, அந்நிய செலாவணி கேஸ் வேறு. இந்த தொகுதி மக்கள் தன் தலையிலேயே மண் போட்டுக்கொண்டுவிட்டார்களோ என்று நினைக்கத்தோன்றுகிறது. தவறை சீக்கிரமே உணர்ந்துவிடுவார்கள் ஜெயித்தவரின் இனி வரும் செயல்களால். ஜெ மரணம் விசாரணை வேறு சஸ்பென்ஸ்.
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
24-டிச-201716:32:01 IST Report Abuse
siriyaar Modi cheated tamilnadu people 2G, now BJP get lesser than namthamilar shame shame BJP. All BJP team should quit and join DMK.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X