அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் முதல்வர் அஞ்சலி

Added : டிச 25, 2017 | கருத்துகள் (7)
Share
Advertisement
எம்.ஜி.ஆர் நினைவிடம்,MGR Memorial,ஜெயலலிதா ,Jayalalitha, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, அஞ்சலி,Tribute, துணை முதல்வர் பன்னீர்செல்வம் , Deputy Chief Minister Panneerselvam, அண்ணாதுரை,Annadurai, அ.தி.மு.க., AIADMK, ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள், RK Nagar election results, தினகரன், Dinakaran,

சென்னை: எம்.ஜி.ஆர்., நினைவு தினத்தையொட்டி, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அவரது நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்றனர்.

அ.தி.மு.க., நிறுவனர், எம்.ஜி.ஆரின், 30வது நினைவு தினம், நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. காலை, 8:40 மணிக்கு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நிர்வாகிகள், எம்.ஜி.ஆர்., நினைவிடம் சென்றனர். அங்கு, மலர் வளையம் வைத்து, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். பின், நினைவிடம் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த மேடையில், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஏறி, உறுதிமொழி எடுத்தனர். துணை முதல்வர் பன்னீர்செல்வம், உறுதிமொழியை படிக்க, மற்ற அனைவரும் ஏற்றனர். எம்.ஜி.ஆர்., எந்த லட்சியங்களுக்காக, அ.தி.மு.க.,வை துவக்கினாரோ, அந்த லட்சியங்களை நினைவில் வைத்து, அவரது பாதையில் தொடர்ந்து பயணித்து, மக்கள் பணியாற்றுவோம். அயராது உழைத்து, கட்சிக்கு பல வெற்றிகள் வழங்கிய, எம்.ஜி.ஆர்., - ஜெ., ஆகியோர் கற்று கொடுத்த, அரசியல் பாடங்களை நினைவில் வைத்து, கட்சி வெற்றிக்காக உழைப்போம்.

தமிழக மக்களின் அரசியல் மேன்மை; பொருளாதார உயர்வு மற்றும் சமூக நீதிக்காகவும், அண்ணாதுரை வகுத்து தந்த கொள்கைகள் வெற்றி அடைய, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., வின் சாதனைகளை, மக்களிடையே தொடர்ந்து எடுத்துரைப்போம்.ஜெ., அமைத்து கொடுத்துள்ள அரசு, ஏழை, எளிய மக்கள் ஏற்றம் பெறவும், ஆதரவற்றோர், முதியோர் நலன் காக்கவும், சமூகத்தில் பெண்கள் சம அந்தஸ்துடன் உயரவும் செய்து வரும் சாதனைகளை, மக்கள் மத்தியில் எடுத்துரைத்து, அரசுக்கு மேலும் வலு சேர்ப்போம்.எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., தலைமையில், அ.தி.மு.க., உறுதிமிக்க எக்கு கோட்டையாக திகழ்ந்ததை போல, தொடர்ந்து வலிவும், பொலிவும் பெற்று,
மக்களுக்கு தொண்டாற்றிட, கடமைகள் அனைத்தையும் செய்திட உறுதி ஏற்போம்.
இவ்வாறு உறுதிமொழி ஏற்றனர்.

டில்லியில் அஞ்சலி : டில்லியில் லோக்சபா வளாகத்தில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு அ.தி.மு.க., லோக்சபா குழு தலைவர் வேணுகோபால், ராஜ்யசபா குழு துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் மற்றும் எம்.பி.,க்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

தோல்வியால் சோகம் : எம்.ஜி.ஆர்., நினைவிடத்திற்கு, அ.தி.மு.க., நிர்வாகிகள் வந்த போது ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் வெளியானது. அ.தி.மு.க., வேட்பாளர் பின் தங்கி, தினகரன் முன்னிலையில் இருந்ததால் அ.தி.மு.க.,வினர் சோகமாக இருந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
m.senthil kumar - tamilnadu,இந்தியா
25-டிச-201713:01:29 IST Report Abuse
m.senthil kumar MGR சமாதியில் மலர்களை தூவி விட்டு மணிய ஆட்டிக்கொண்டே போகவேண்டியதுதான், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சர் பதவியை எடப்பாடியிடம் கொடுக்கவில்லை OPS அவர்களிடம்தான் ஒப்படைத்தார் அந்த பொறுப்பை தக்க வைத்து கொண்டாரா, இல்லை அதற்க்கு கிடைத்த பரிசுதான் இது
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
25-டிச-201708:48:57 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அருணாசல பிரதேச பார்முலாவை பாஜக மறுபடியும் பிரயோகித்தால் இந்த சுடாத இரட்டை ஊழல் அதிமுக துப்பாக்கி ஆட்சியை காவிகலருக்கு மாத்திடலாம். இரட்டைஇலையை தினகரனுக்கே வீசிடலாம்.
Rate this:
Cancel
s.k.manoharan - kulithalai,இந்தியா
25-டிச-201708:47:32 IST Report Abuse
s.k.manoharan எம்.ஜி.ஆர். நூறு என்பது அவரது வயது தானே தவிர கட்சியின் நிலை அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X