பன்முக வித்தகர் அடல்ஜி இன்று வாஜ்பாய் 93வது பிறந்த தினம்

Added : டிச 25, 2017 | கருத்துகள் (16)
Advertisement
அடல்ஜி ,Atalji,  முன்னாள் பிரதமர் வாஜ்பாய், former prime minister Vajpayee, பா.ஜ.,BJP,வாஜ்பாய் பிறந்த தினம், Vajpayee birthday, பாரத ரத்னா, Bharat Ratna, அணு ஆயுதச் சோதனை, nuclear test, நான்கு வழிச்சாலை,four waytrack, லோக்சபா தேர்தல் , Lok Sabha election,

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினமான டிச., 25 'தேசிய நல்லாட்சி தினமாக'
2014 முதல் கடைபிடிக்கப்படுகிறது.

ம.பி.,யின் குவாலியரில் 1924 டிச.25ல் வாஜ்பாய் பிறந்தார். பாரதிய ஜன சங்கத்தை நிறுவிய போதே உறுப்பினரானார் வாஜ்பாய். ஆர்.எஸ்.எஸ்.,சில் செல்வாக்கு மிக்க தலைவரான தீனதயாள் உபாத்யாயாவின் மறைவுக்குப் பின், ஜன சங்கத்தின் தலைவரானார். 1980ல் ஜனதா கட்சியில் பிளவு ஏற்பட்ட போது, பாரதிய ஜன சங்கத்திலிருந்து வந்தவர்கள் பா.ஜ., வை தோற்றுவித்தனர். 1980 - 1986 வரை பா.ஜ., தலைவராக வாஜ்பாய் இருந்தார். 'அடல்ஜி' என்று கட்சியினரால் அன்புடன் அழைக்கப்பட்ட இவர், கட்சியின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தவர்.

திருமணம் செய்யாதவர். கவிஞர், பத்திரிகை ஆசிரியர். இதற்கும் மேலாக சிறந்த மேடை சொற்பொழிவாளர்.


10 முறை எம்.பி.,1957ல் முதல்முறையாக லோக்சபா எம்.பி., ஆனார். பின் 2004 வரை 10 முறை எம்.பி., ஆக இருந்துள்ளார். 1996 லோக்சபா தேர்தலில் பா.ஜ., தனிப்பெரும் கட்சியானது. பிரதமராக வாஜ்பாய் தேர்வானார். ஆனால் பெரும்பான்மை இழந்ததால் பதவியை ராஜினாமா செய்தார்.


நேர்மையான பிரதமர்


1998ல் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பிரதமரானார். பல்வேறு கொள்கைகள் உடைய கட்சிகளை திறம்பட சமாளித்து ஆட்சி நடத்தினார். பதவி காலத்தில் தனது நேர்மைக்கு இழுக்கு வராமல், ஊழல் குற்றச்சாட்டுக்கு இடமில்லாமல் ஆட்சி நடத்தினார்.


பாரத ரத்னாசிறந்த பார்லிமென்டேரியன் விருது, பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை பெற்றவர். 2015ல் உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கப்பட்டது. உடல்நலம் சரியில்லாததால், தற்போது ஓய்வில் உள்ளார்.


புத்தகம்ராஷ்டிர தர்மா, பஞ்சாஜன்யா, வீரஅர்ஜுன் ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராக இருந்தார். அமர்பாலிதான், மிருத்யுயா ஹாத்ரா, ஜனசங் உள்ளிட்ட பல புத்தகங்களையும், பல கவிதைகளையும் எழுதியுள்ளார்.

* 1998 மே 11ல் இந்தியா நடத்திய அணு ஆயுதச் சோதனைகள் வாஜ்பாய்க்கு உலக அரங்கில் பெருமதிப்பைத் தேடித்தந்தது.
* 1999ல் கார்கில் போரில் பாக்.,கை தோற்கடித்தது புகழை சேர்த்தது.
* நான்கு வழிச்சாலை திட்டத்தை அறிமுகப்படுத்தி, சாலை போக்குவரத்தில் புரட்சியை
ஏற்படுத்தினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கவிவாலிதாசன் - தமிழ்நாடு,இந்தியா
27-டிச-201719:38:24 IST Report Abuse
கவிவாலிதாசன் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா. நான் வணங்கும் இறைவன் உங்களுக்கு நிறைந்த ஆயுளை கொடுக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Jeya Veera Pandian - madurai,இந்தியா
25-டிச-201721:02:06 IST Report Abuse
Jeya Veera Pandian நலமுடன் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்
Rate this:
Share this comment
Cancel
Chandrasekaran Narayanan - Hosur,இந்தியா
25-டிச-201717:02:50 IST Report Abuse
Chandrasekaran Narayanan வணங்குகிறேன். இறையருள் உங்களை போன்ற தலைவர்களை நம் நாட்டுக்கு மேலும் மேலும் அளிக்க வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X