அரசியல் செய்தி

தமிழ்நாடு

1,511 ஓட்டுகள் போனது எங்கே? தீவிரமாய் தேடுது தமிழக பா.ஜ.,

Added : டிச 26, 2017 | கருத்துகள் (262)
Advertisement
 தமிழக பா.ஜ.,tamilnadu BJP, ஆர்.கே.நகர் தேர்தல் ,RK Nagar Election,  நோட்டா, Nota,மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,Union Minister Pon radhakrishnan, ஓட்டு,Vote, Bharatiya Janata Party,

கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசலும், களத்தில் முன்கூட்டியே இறங்கி வேலை செய்யாததாலும், ஆர்.கே.நகரில், பா.ஜ., தலைகுனியும் அளவுக்கு படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த முறை கிடைத்ததில், 1,511 ஓட்டுகள், இந்த முறை எங்கே போயின என்பது தெரியாமல், அக்கட்சியினர், தற்போது ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில், அரசியல் மேடைகளில், 'கோட்டையில் தாமரை மலரும்' என, பா.ஜ., தலைவர்கள் முழங்கி வருகின்றனர். ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வெறும், 1,417 ஓட்டுகளை மட்டுமே பெற்றிருப்பது, கட்சியினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 2016 தேர்தலில், அங்கு பா.ஜ., 2,928 ஓட்டுகளை பெற்றிருந்தது. ஆனால், இம்முறை, 'நோட்டா'வை விட குறைவாக பெற்றுள்ளது. இது, தொண்டர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கி உள்ளது.

இது குறித்து, தமிழக பா.ஜ.,வினர் கூறியதாவது: சென்னை, ஆர்.கே.நகரில், 'டிபாசிட்' கிடைப்பது கடினம் என, எங்களுக்கு முன்பே தெரியும். ஆனால், கடந்த முறையை விட, அதிக ஓட்டுக்கள் பெற முடியும் என, நினைத்தோம். ஆனால், 1,511 ஓட்டுகள் குறைந்துள்ளன; அந்த ஓட்டுகள் எங்கே போயின? இடைப்பட்ட ஓராண்டு காலத்தில், கட்சி வளர்ந்திருக்க வேண்டும்; மாறாக, ஓட்டு வங்கி தேய்ந்துள்ளது.தொகுதியில் கணிசமாக உள்ள, வடமாநிலத்தவர்களும், பா.ஜ.,வை தவிர்த்துள்ளனர். இதற்கான காரணங்களை, ஆராய்வது அவசியம்.

கட்சி ரீதியாக, தோல்விக்கு கோஷ்டிப் பூசல் முக்கிய காரணம். மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன், ஒரு முறை தான் பிரசாரத்திற்கு வந்தார். தமிழிசை மட்டும், தனி ஆளாக வலம் வந்தார்.இது, ஒரு புறம் இருக்க, தேர்தல் வரப்போகிறது என தெரிந்தும், களப் பணியை முன்கூட்டியே, பா.ஜ., தலைமை துவக்கவில்லை. 'பூத்' அளவில் கட்சியை வளர்க்க, கமிட்டிகள் போடப்பட்டிருப்பதாக கூறினாலும், யாரையும் அங்கு காண முடியவில்லை.

தேர்தல் வரும் என தெரிந்தும், மெத்தனமாக இருந்து விட்டனர். மத்திய திட்டங்களை, மக்களிடம் எடுத்துக் கூற தவறிவிட்டனர். மொத்தம் உள்ள, 258, 'பூத்'களில், தலா, 10 ஓட்டுகள் கூட கிடைக்கவில்லை. அதனால், 'கோட்டையை பிடிப்போம்' என்ற பேச்சை, மூட்டை கட்டி வைப்பதே சரி. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (262)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
01-ஜன-201818:22:48 IST Report Abuse
Pasupathi Subbian ஆச்சி , இருந்திச்சி ,தமிழு வந்துச்சா , பிளாயிட்டானுங்க , போயிட்டானுங்க .
Rate this:
Share this comment
Cancel
S PANDIYAN - PARIS,பிரான்ஸ்
01-ஜன-201802:22:22 IST Report Abuse
S PANDIYAN 258 பூத்துகளில் ஒரு பூத்துக்கு 6 ஓட்டு கூட கிடைக்க வில்லை. இவர்கள் கோட்டையும் பிடிக்க முடியாது கொட்டையும் பிடிக்க முடியாது. அடுத்து ஒருவர் வருகிறார் ரசினி இவர் எந்த கோட்டையை பிடிக்க போகிறாரரோ பொருத்து இருந்து பார்ப்போம்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
31-டிச-201709:56:29 IST Report Abuse
D.Ambujavalli உங்கள் கட்சி ஆட்கள் அந்தத் தொகுதியில் இத்தனை பேர் தான் இருக்கிறார்களோ , இல்லை உங்களுக்குள்ளேயே ஸ்லீப்பர் செல் உள்ளதோ என்னவோ ? பொதுத் தேர்தலில் மூன்று, இரண்டு இலக்கங்களுக்கு மாறினாலும் வியப்பில்லை. உங்க ,பெரியவர்'. ஆட்டிவைக்கும் ஆட்டங்களின் பாதிப்புதான் , பண மதிப்பிழப்பு, ஜி Es ti
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X