பொது செய்தி

தமிழ்நாடு

104 கிராமங்களில் தொடருகிறது இரட்டை குவளை முறை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Added : பிப் 21, 2011 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில், 213 கிராமங்களில் மேற்கொண்ட ஆய்வில், 104 கிராமங்களில் இன்னும் இரட்டை குவளை முறை இருப்பது மதுரை "எவிடன்ஸ்' அமைப்பு மூலம் தெரியவந்துள்ளது. மதுரையில் 13 கிராமங்கள், திண்டுக்கல்லில் 24 கிராமங்கள், சிவகங்கையில் 15 கிராமங்கள் என 213 கிராமங்களில் நிலவும் தீண்டாமை பாகுபாடுகளை இந்த அமைப்பு ஆய்வு செய்தது. இதில், 104 கிராமங்களில் டீக்கடைகளில் இரட்டை

மதுரை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில், 213 கிராமங்களில் மேற்கொண்ட ஆய்வில், 104 கிராமங்களில் இன்னும் இரட்டை குவளை முறை இருப்பது மதுரை "எவிடன்ஸ்' அமைப்பு மூலம் தெரியவந்துள்ளது.


மதுரையில் 13 கிராமங்கள், திண்டுக்கல்லில் 24 கிராமங்கள், சிவகங்கையில் 15 கிராமங்கள் என 213 கிராமங்களில் நிலவும் தீண்டாமை பாகுபாடுகளை இந்த அமைப்பு ஆய்வு செய்தது. இதில், 104 கிராமங்களில் டீக்கடைகளில் இரட்டை குவளை முறை இன்னும் இருப்பது கண்டறியப்பட்டது. சில கிராமங்களில் குறிப்பிட்ட சமூகத்தினர்களுக்கு கண்ணாடி குவளையும், ஆதிதிராவிடர்களுக்கு சில்வர் குவளையும், பிளாஸ்டிக் கப்பும் கொடுக்கப்படுகிறது.


மயானத்திலும் பாகுபாடு: தமிழகத்தில் 208 கிராமங்களில் ஜாதி ரீதியாக மயானங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 97 கிராமங்களில் ஆதிதிராவிடர் சடலத்தை பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல முடியாது. 153 கிராமங்களில் மாற்று ஜாதியினர் குடியிருப்பு வழியாக எடுத்துச் செல்ல முடியாது. ஆதிதிராவிடர் மயானங்களில் தண்ணீர், மின்சாரம், கொட்டகை என எந்த அடிப்படை வசதியும் இல்லை. சலூன் கடைகளில்கூட பாகுபாடு பார்க்கப்படுகிறது. 142 கிராமங்களில் ஆதிதிராவிடர்களுக்கு முடிவெட்டக்கூடாது என தடையுள்ளது. சில கிராமங்களில் முடிவெட்டும் கருவிகள் இரண்டு "செட்' வைத்துக் கொண்டு, அதில் ஒன்றை ஆதிதிராவிடர்களுக்குபயன்படுத்துகின்றனர். இதேபோல், ரேஷன் கடைகள், ஆஸ்பத்திரிகள், சாவடிகள் என அனைத்து இடங்களிலும் பாகுபாடு தொடர்கிறது. 45 ஆதிதிராவிட பஞ்., தலைவர்கள் வன்கொடுமைக்கும், சித்ரவதைக்கும் ஆளாகியுள்ளனர்.


"எவிடன்ஸ்' நிர்வாக இயக்குனர் கதிர் கூறியதாவது :இந்திய அரசியல் சாசனம் பிரிவு 17ல் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது. தீண்டாமையை கடைபிடிப்பது குற்றம் என்றுள்ளது. ஆனால் தீண்டாமை ஒழிப்பு என்பது சடங்குத்தனமான நடவடிக்கையாகவே உள்ளது. பேராசிரியர்கள், வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் போன்ற குழுக்களை மாவட்டந்தோறும் அமைத்து, அனைத்து கிராமங்களிலும் தீண்டாமை குறித்த விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். தீண்டாமை கண்காணிப்பு குழு என்கிற சமூக ஆர்வலர்கள் குழுவினை ஒவ்வொரு தாலுகாவிலும் ஏற்படுத்த வேண்டும், என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Divaharan - Tirunelveli,இந்தியா
22-பிப்-201109:46:58 IST Report Abuse
Divaharan மிகவும் வருத்தமான விஷயம் . செய்தி வெளியிட்டதற்காக தினமலருக்கு நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X