அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தேர்தல் செலவு விவகாரம்
தினகரன் பதவிக்கு சிக்கல்

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி, 20 ரூபாய், 'டோக்கன்' வழங்கியதாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதால், தினகரன் எம்.எல்.ஏ., பதவிக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

தேர்தல் செலவு, Election Cost, தினகரன், Dinakaran, ஆர்.கே.நகர் சட்டசபை தேர்தல், RK Nagar Assembly Election, சுயேச்சை,  தேர்தல் கமிஷன்,Election Commission, டோக்கன் அட்வான்ஸ்,Token Advance,  20 ரூபாய் நோட்டு, 20 rupees note,


சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன், தேர்தல் பிரசாரத்தின் போது,பணத்தை வாரி இறைத்தார்.


தகுதி நீக்கம்அவர் பிரசாரத்திற்கு, எவ்வளவு பேர் வந்தனர்; அவர்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது
என்ற விபரங்களை, தேர்தல் பார்வையாளர்கள், ஆதாரத்துடன் சேகரித்துள்ளனர். அவற்றை, தங்களது பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்,

அதிகபட்சமாக, 28 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம். அதற்கு மேல் செலவு செய்தது நிரூபிக்கப்பட்டால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படு வார்.தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், பதவி பறிக்கப்படும். மேலும், மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்கவும் தடை விதிக்கப்படும்.

தற்போது, செலவின பார்வையாளர்கள் சமர்ப்பித்து உள்ள அறிக்கையின்படி, தினகரன், தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள உச்ச வரம்பை தாண்டி, செலவு செய்துள்ளார். அத்துடன், தேர்தலுக்கு முந்தைய நாள், தினகரன் ஆதரவாளர்கள், வீடு வீடாக, 20 ரூபாய் நோட்டை வினியோகம் செய்துள்ளனர்.


அந்த ரூபாய் நோட்டில், பாகம் எண், வீட்டில் எத்தனை ஓட்டுகள் உள்ளன என்ற விபரத்தை குறிப்பிட்டுள்ளனர். அந்த ரூபாய் நோட்டில் உள்ள பதிவெண்ணை, தினகரன் ஆட்கள் எழுதி
வைத்துள்ளனர். ஓட்டு போட்டு வந்து, 20 ரூபாய் நோட்டை கொடுத்தவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளனர். சில இடங்களில் பணம் வழங்க முடியாமல் உள்ளது. அங்குள்ள மக்கள், பணம் கேட்டு, தினகரன் ஆதரவாளர்களை நச்சரித்துவருகின்றனர்.


இது தொடர்பாக, இரு தரப்பினருக்கும் நடந்த மோதல் தொடர்பாக, தினகரன் ஆதரவாளர்கள், நான்கு பேரை, ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள், 450 பேருக்கு,

Advertisement

20 ரூபாய் நோட்டை, 'டோக்கன் அட்வான்ஸ்' ஆக கொடுத்தது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்த விபரங்களையும், தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது. இதுவும், தினகரன் செலவு கணக்கில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. தினகரன், இறுதி செலவு கணக்கு சமர்ப்பிக்க, ஒரு மாதம் அவகாசம் உள்ளது.

அவர் கணக்கை சமர்ப்பிக்கும் போது, தேர்தல் பார்வையாளர்கள் கணக்குடன் ஒப்பிட்டு, கூடுதல் செலவிற்கு, அவரிடம் விளக்கம் கேட்கப்படும். உரிய விளக்கம் அளிக்காமல், கூடுதல் செலவு செய்தது நிரூபணமானால், வாக்காளர்களுக்கு, அவரது ஆட்கள் பணம் கொடுத்தது உறுதியாகும்; அதன் காரணமாக, அவர், எம்.எல்.ஏ., பதவியை இழக்க நேரிடும் என, தேர்தல் கமிஷன் வட்டாரம் தெரிவித்தது.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
30-டிச-201706:45:32 IST Report Abuse

LAXபணம் பெற்ற ஆர்.கே.நகர் வாசிகள் சிலர் அந்த நிகழ்வுகளை படம் பிடித்து வைத்துள்ள பதிவுகள் எப்படியும் ஒருநாள் வெளிவரத்தான் போகிறது..

Rate this:
Ray - Chennai,இந்தியா
30-டிச-201705:18:59 IST Report Abuse

Rayசெலவின பார்வையாளர்கள் சிறந்த அம்புலிமாமா எழுத்தாளர்கள்

Rate this:
Jagadeesan Vaidyanathan - chennai,இந்தியா
29-டிச-201719:08:10 IST Report Abuse

Jagadeesan Vaidyanathanஎன்ன பேசி என்ன பயன். இன்று TTV ஒரு அங்கீகரிக்கப்பட்ட MLA. எலக்ஷன் கமிஷன் ஆரம்பத்திலேயே தடுத்து இருக்கலாம். 1 முதலில் இவர் இந்திய பிரஜை இல்லை. 2. அந்நிய செலாவணி குற்றத்திற்காக வழக்கில் உள்ளவர். 3 . இரட்டை இல்லை சினத்துக்காக 60 கோடி செலவழித்து, திஹார் ஜெயிலுக்கு சென்றவர். 4. ஜெ ஜெ மறைந்ததற்கு சம்மன் பெறப்பட்டவர். என்னே நமது இந்திய எலெக்ஷன். இது கலிகாலம்.

Rate this:
மேலும் 84 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X