பொது செய்தி

இந்தியா

மாதந்தோறும் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தும் முடிவு ரத்து

Updated : டிச 29, 2017 | Added : டிச 28, 2017 | கருத்துகள் (35)
Share
Advertisement
புதுடில்லி: வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல், 'காஸ்' சிலிண்டருக்கான விலையை, மாதந்தோறும், நான்கு ரூபாய் உயர்த்தும் உத்தரவை, மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. ஏழைகளுக்கு இலவசமாக சிலிண்டர் இணைப்பு வழங்கும், பிரதமரின், 'உஜாலா' திட்டத்துக்கு எதிராக இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும், 18.11 கோடி பேர், சமையல் காஸ்
காஸ் விலை, Gas prices,எண்ணெய் நிறுவனங்கள், oil companies,மத்திய அரசு, Central government,காஸ் சிலிண்டர்,gas cylinder,  மானியம்,  subsidy,  இலவச காஸ் இணைப்பு, free gas connection,

புதுடில்லி: வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல், 'காஸ்' சிலிண்டருக்கான விலையை, மாதந்தோறும், நான்கு ரூபாய் உயர்த்தும் உத்தரவை, மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. ஏழைகளுக்கு இலவசமாக சிலிண்டர் இணைப்பு வழங்கும், பிரதமரின், 'உஜாலா' திட்டத்துக்கு எதிராக இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், 18.11 கோடி பேர், சமையல் காஸ் இணைப்பு பெற்றுள்ளனர். இதில், ஏழை பெண்களின் பெயரில் சமையல் காஸ் இணைப்பை இலவசமாக வழங்கும், 'உஜாலா' திட்டத்தின் கீழ் பயன்பெற்ற, மூன்று கோடி பேரும் அடங்குவர்.


மறு உத்தரவு


இது தவிர, 2.66 கோடி பேர், மானியம் வேண்டாம் என, தானாக முன்வந்து தெரிவித்து, மானியம் இல்லாத சமையல் காஸ் சிலிண்டரை வாங்கி வருகின்றனர்.வீடுகளில் பயன்படுத்தப்படும், 14.2 கிலோ எடையுள்ள, சமையல், 'காஸ்' சிலிண்டருக்கு மானியம் வழங்குவதை, 2018 மார்ச் மாதத்துக்குள் முழுமை யாக ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, சிலிண்டரின் விலையை, மாதந்தோறும், இரண்டு ரூபாய் உயர்த்தும் திட்டம், 2016 ஜூலை, 1 முதல் செயல் படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு, ஜூலை, 1 முதல், இந்த விலை உயர்வு, நான்கு ரூபாயாக உயர்த்தப்பட்டது.இந்த உத்தரவு, 2018 மார்ச் வரை அல்லது மானியம் முழுமையாக குறையும் வரை அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை,நடைமுறையில் இருக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய நிலவரப்படி, ஒவ்வொரு நுகர்வோருக்கும், ஆண்டுக்கு, 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதற்கு மேற்பட்ட சிலிண்டருக்கு சந்தை விலையே வசூலிக்கப்படும்.டி.பி.டி., எனப்படும், நேரடி மானிய பலன்திட்டம் கொண்டு வரப்பட்ட பின், அனைத்து சிலிண்டர் களையும், நுகர்வோர் மானிய விலையிலேயே வாங்க வேண்டும். அவர்களுக்கான மானியம், வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்நிலையில், சிலிண்டர் விலையை உயர்த்தும் உத்தரவு, இந்தாண்டு திரும்பப் பெறப்பட்டுள்ள தகவல், தற்போது வெளியாகி உள்ளது.


விமர்சனம்

இது குறித்து, பெட்ரோலியத் துறை மூத்த அதிகாரிகள் கூறியதாவது:சிலிண்டர்களுக்கான விலையை, மாதந்தோறும், நான்கு ரூபாய் உயர்த்தும் உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஏழைபெண்களுக்கு இலவசமாக சமையல் காஸ் இணைப்பு வழங்கும் பிரதமரின், 'உஜாலா' திட்டத்துக்கு எதிராக, இந்த உத்தரவு உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இலவசமாக இணைப்பு வழங்கப்பட்டாலும், சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, ஏழை மக்களை பாதிப்பதுடன், 'உஜாலா' திட்டத்துக்கு எதிராக உள்ளதையும், மத்திய அரசு உணர்ந்தது.இதையடுத்து, இந்த விலை உயர்வு உத்தரவு, திரும்பப் பெறப்பட்டு உள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
29-டிச-201709:52:39 IST Report Abuse
narayanan iyer Petroleum company has to stop the revising rate for Petrol & diesel process on everyday method .The prices keep on increasing do not know what is the motive of MODI
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
29-டிச-201700:33:17 IST Report Abuse
Mani . V "முகமது பின் துக்ளக்" மீண்டும் எப்பொழுது இந்தியாவில் பிறந்தார்?.
Rate this:
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
29-டிச-201707:35:33 IST Report Abuse
K.   Shanmugasundararajதிரு. வி மணி மிக நன்றி.முகமது பின் துக்ளக் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள் என்பதை மோடி - ஆர் எஸ் எஸ் , துக்ளக்கின் பாதையை / செயலை பின்பற்றுவதன் மூலம் நிரூபித்து விட்டார்கள் இந்த வோட்டு பொறுக்கிகள்/ சுதந்திர போராட்டத்தை காட்டிக்கொடுத்த கயவர்கள். இன்று மக்களை சுரண்டி அதானிக்கும், அம்பானிக்கு சேவை செய்து அவர்களிடம் நன்கொடை என்ற பெயரில் லஞ்சம் வாங்கும் திருடர்கள்....
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
28-டிச-201723:33:05 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கேஸ் சிலிண்டர் பிரச்சினை தேர்தலில் வெடிக்குமென்று பயமா காவிகளே?
Rate this:
partha - chennai,இந்தியா
29-டிச-201713:16:03 IST Report Abuse
parthaஇதுவரை எந்தத்தேர்தலிலும் வெடிக்கவில்லையே மார்க்கத்தவர்களே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X