அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டுவராது: சொல்கிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

Updated : டிச 29, 2017 | Added : டிச 29, 2017 | கருத்துகள் (16)
Share
Advertisement
ரஜினி,Rajini, அரசியல், Politics, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,Minister Rajendra Balaji,  பா.ஜ.,BJP,  தி.மு.க.,DMK, தினகரன், Dinakaran,

ஸ்ரீவில்லிபுத்துார் : ''மாநில அரசின் நலன்கருதி தான் பா.ஜ., உடன் இணக்கமாக உள்ளோம். எதிர்காலத்தில் கூட்டணி வைத்தாலும் வைப்போம்,'' என பால்வளத்துறை அமைச்சர்
ராஜேந்திரபாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்துாரில் அவர் கூறியதாவது: அரசியல் என்றாலே பலவித சித்து விளையாட்டுக்கள் தெரியணும். அதெல்லாம் ரஜினிக்கு தெரியாது. அவர் அரசியலுக்கு சரிபட்டு
வரமாட்டார். ஏனெனில் அவரது ரசிகர்கள் பல கட்சிகளில் உள்ளனர். அவர்களையெல்லாம் சரிசெய்து கொண்டு வரணும். இதெல்லாம் 20 ஆண்டுகளுக்கு முன்பு செய்திருந்தால் ஜெயிக்க வாய்ப்பிருந்திருக்கும். அவரது வயது மற்றும் குணாதிசயங்கள் எல்லாம் தற்போதைய அரசியல் போக்கிற்கு ஒத்துவராது. அதனால் அவருக்கு ஆலோசனை சொல்பவர்கள் இதையெல்லாம் சுட்டிகாண்பித்திருப்பார்கள். ரஜினியும் முடிவை யோசித்து தான் எடுப்பார் என்பது என்கருத்து. மாநில அரசின் நலன்கருதி தான் பா.ஜ., உடன் இணக்கமாக உள்ளோம். எதிர்காலத்தில் கூட்டணி வைத்தாலும் வைப்போம். அரசியலில் யாரும், யாருடனும் கூட்டணி சேரலாம். 90 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள தி.மு.க.,வை சமாளிக்கும் நாங்கள், தினகரனையா சமாளிக்க முடியாது, என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
29-டிச-201723:49:17 IST Report Abuse
Tamilan ஏனெனில் தமிழர்கள், இந்துக்கள் என்ற எண்ணம் தமிழக அரசியலில் செத்துவிட்டது. தமிழினவாதாம் தலைதூக்கியுள்ளது. அதற்க்கு அணைத்து அரசியல் கட்சிகளும் தூபம் போட்டுக்கொண்டுள்ளன. தமிழினவாதம் ஒன்றுதான் ரஜினியின் அரசியல் எதிர்காலத்திற்கு எதிரானது.
Rate this:
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
29-டிச-201720:45:15 IST Report Abuse
Varun Ramesh 90 உறுப்பினர்களைக் கொண்ட தி.மு.க வையெல்லாம் சமாளிக்கும் திறன் பெற்ற உங்கள் வேட்பாளர் ஏன் தினகரனிடம் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். இவ்வளவிற்கும் உங்கள் வேட்பாளர் அந்த தொகுதியில் இன்று வரை குடியிருந்து வருபவர். ஆனால், தினகரன் அந்த தொகுதிக்காரர் அல்ல. அதெல்லாம் இருக்கட்டும், அதென்ன அரசியலில் சித்து விளையாட்டு?
Rate this:
Cancel
venkatesh - coimbatore,இந்தியா
29-டிச-201718:49:14 IST Report Abuse
venkatesh நீ என்ன படிச்சிருக்கே .உன் பூர்வீகம் என்ன .போஸ்டர் ஓட்டிட்டு இருந்தவன் எல்லாம் இங்கே மந்திரி அது பத்து என்றுபேசுவது என்னவோ மோதம்பதித்த அறிவாளி போல்.உன் வாய்க்கு கோர்ட் பெர்மனெண்ட் பூட்டு போடணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X