'டோல்கேட்டுக்களில் கரும்பு லாரிகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது'

Added : டிச 29, 2017 | |
Advertisement
வேலூர்: ''தமிழகம் முழுவதும் உள்ள டோல்கேட்டுக்களில், கரும்பு லாரிகளுக்கு, கட்டணம் வசூலிக்கக் கூடாது,'' என, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி கூறினார். கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், கரும்பு விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:

வேலூர்: ''தமிழகம் முழுவதும் உள்ள டோல்கேட்டுக்களில், கரும்பு லாரிகளுக்கு, கட்டணம் வசூலிக்கக் கூடாது,'' என, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி கூறினார்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், கரும்பு விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள, 37 கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள், 1.85 லட்சம் கரும்பு விவசாயிகளுக்கு, கடந்த, மூன்று ஆண்டுகளாக, 2,000 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. இதனால், வாங்கிய கடனை கட்ட முடியாமல், விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். மேலும், விவசாயிகள் வாங்கிய கடனுக்காக, ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் வட்டி செலுத்தி வருகின்றனர். எனவே, கரும்பு விவசாயிகளுக்கு, பாக்கி தொகையை உடனடியாக வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தாண்டு, கரும்புக்கு, தமிழக அரசு விலை நிர்ணயம் செய்யவில்லை. ஆனால், விலை தெரியாமலேயே, சர்க்கரை ஆலைகளுக்கு விவசாயிகள் கரும்பு வினியோகம் செய்து வருகின்றனர். ஒரு டன் கரும்புக்கு, 4,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்து, தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். மேலும், லாரி வாடகை, வெட்டுக்கூலியை உடனுக்குடன் வழங்க வேண்டும். தற்போது, வேலூர் மாவட்டத்தில், வாலாஜா பேட்டை, பள்ளிகொண்டா, புத்துக்கோவில் ஆகிய சுங்கச்சாவடிகளில் மட்டும், கரும்பு ஆலைகளுக்கு செல்லும் கரும்பு லாரிகளுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள டோல்கேட்டுக்களில், கரும்பு லாரிகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X