பொது செய்தி

இந்தியா

பாக்.,கில் பயங்கரவாதி கூட்டத்தில் பங்கேற்ற தூதரை திரும்ப பெற்றது பாலஸ்தீனம்

Updated : டிச 31, 2017 | Added : டிச 30, 2017 | கருத்துகள் (26)
Advertisement
பாகிஸ்தான்,Pakistan,  பயங்கரவாதி ஹபீஸ் சயீத், terrorist Hafiz Saeed,இந்தியா,  India, பாலஸ்தீனம்,Palestine,  ஜெருசலேம்,Jerusalem, பாலஸ்தீன தூதர் வாலித் அபு அலி ,Palestinian ambassador Wahid Abu Ali, மும்பை பயங்கரவாத தாக்குதல் , Mumbai terrorist attack, பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் அப்பாசி, Pakistan Prime Minister Shahid Abbasi, ரவேஸ் குமார், Raveez Kumar,

புதுடில்லி:மும்பை தாக்குதல் சதிகாரன், ஹபீஸ் சயீத் நடத்திய பேரணியில், பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன துாதர் பங்கேற்றதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2004ல், பாக். பயங்கரவாதிகள், கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன், ஜமாத் உத் தவா பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஹபீஸ் சயீத். இவனை, ஐ.நா.,வும், அமெரிக்காவும், சர்வதேச பயங்கரவாதி என, அறிவித்துள்ளன. இந்தியா மற்றும் உலக நாடுகளின் வற்புறுத்தலால், சயீதை, இந்த ஆண்டு ஜனவரியில், பாக்., அரசு கைது செய்து, வீட்டு சிறையில் வைத்தது. அவனை விடுதலை செய்ய, லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, நவம்பரில் விடுதலை செய்யப்பட்டான்.ஹபீஸ், புதிய அரசியல் கட்சி துவக்கியுள்ளான். பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில், நேற்று முன்தினம், சயீத், பேரணி நடத்தினான். இதில், சயீதுடன், பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன துாதர், வாலித் அபு அலியும் பங்கேற்றார். சயீதும், வாலித் அபு அலியும் இணைந்து நிற்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது; இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெருசலேம் நகரை, இஸ்ரேலின் தலைநகராக, அமெரிக்கா அங்கீகரித்ததை எதிர்த்து, ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, இந்தியா ஓட்டளித்தது. 'இஸ்ரேலுடன் நல்லுறவை பேணி வருகின்றபோதிலும், பாலஸ்தீன விவகாரத்தில், நீண்டகாலமாக பின்பற்றி வரும் ஆதரவு நிலைப்பாட்டை, மாற்றிக் கொள்ள முடியாது' என, இந்தியா திட்டவட்டமாக அறிவித்தது. இந்நிலையில், சயீதுடன், பாலஸ்தீன துாதர் கைகோர்த்து நின்றதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, நம் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதாவது: பாகிஸ்தானில், ஹபீஸ் சயீத் நடத்திய பேரணியில், பாலஸ்தீன துாதர் பங்கேற்றதை ஏற்க முடியாது; இதற்கு, இந்தியா சார்பில், கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. டில்லியில் உள்ள பாலஸ்தீன துாதரிடம், இந்தியாவின் கண்டனம், முறைப்படி தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


அமைச்சகம் வருத்தம்

ஹபீஸ் சயீத் பேரணியில், பாலஸ்தீன துாதர் பங்கேற்றதற்கு, பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம், வருத்தம் தெரிவித்துள்ளது.இதுபற்றி, இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள கடிதம்:நடந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. இது தொடர்பாக, துாதரிடம் விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவுடனான நட்புறவை, பாலஸ்தீனம் பெரிதும் மதிக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு, பாலஸ்தீனம், எப்போதும் துணை நிற்கும். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளுடன், பாலஸ்தீனம் ஒரு போதும் கைகோர்க்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இதற்கிடையில், சயீத்துடன் பேரணியில் பங்கேற்ற துாதர், அபு அலியை, பாலஸ்தீனம் திரும்ப அழைத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
31-டிச-201706:41:15 IST Report Abuse
Kasimani Baskaran காஷ்மீர் என்று வந்தால் இவர்களுக்கு மதத்தின் மீதுள்ள பாசம் அதிகரிக்கும்... இவர்களுக்கு ஆதரவு என்பது இந்திய அரசின் கீழ்த்தரமான நடவடிக்கை...
Rate this:
Share this comment
Cancel
Kumz - trichy,இந்தியா
31-டிச-201705:56:00 IST Report Abuse
Kumz இந்தியா எப்போதும் இஸ்ரேலை ஆதரிக்க வேண்டும் மூர்க்கனுங்களுக்கு ஆதரவளித்து நண்பர்களை இழக்க வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
31-டிச-201701:41:44 IST Report Abuse
Nallavan Nallavan ஜெருசலேம் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிர்ப்பாய் வாக்களித்தீர்கள் .... பாலஸ்தீனப் பச்சை தனது நன்றியைக் காட்டிவிட்டது ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X