பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அபாயம்!
மத்திய அரசின் புதிய சட்டத்தால்
அரசு பஸ்கள் முடங்கும்...

பார்லிமென்டில் நிறைவேற்றப்பட உள்ள, மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தால், தமிழகத்தில் இயங்கும், 22 ஆயிரம் அரசு பஸ்களின் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், 'டிரைவிங் லைசென்ஸ், பெர்மிட்' வழங்குவதும், தனியார் மயமாகிறது. வாகன விபத்து காப்பீட்டிற்கும், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடு வருகிறது. அத்துடன், சிறிய அளவிலான, சாலை விதி மீறல்களுக்கும், கடுமையான அபராதம் விதிக்கப்பட உள்ளது.

மத்திய அரசு, புதிய சட்டம், அரசு பஸ்கள், முடங்கும், அபாயம்!


மத்திய அரசின், புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தம், பார்லிமென்ட் கூட்டத்தொடரில், நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர், விஜயபாஸ்கர், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரியை சந்தித்து, 'அச்சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும்' என, கோரிக்கை விடுத்து உள்ளார்.

புதிய சட்டத் திருத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:புதிய சட்டம் நிறைவேறினால், நாடு முழுவதும், வாகன உரிமம், ஓட்டுனர் உரிமம், வாகன பழுதுநீக்கம், பஸ் வழித்தடம் உள்ளிட்ட போக்குவரத்து தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும், சாலை போக்குவரத்து ஆணையம் கட்டுப் படுத்தும். அது, தனியாரின் மேற்பார்வையில் இயங்கும்.


என்ன பாதிப்புகள்?


* சாலை போக்குவரத்து ஆணையம், மாநில அரசுகள் வழங்கிய, 'பெர்மிட், லைசென்ஸ்' களை ரத்து செய்யும். புதிய பெர்மிட், லைசென்ஸ் பெறும் நடைமுறைகள் கடுமை யாவதோடு, கட்டணமும் அதிகமாகும்.


* டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் உரிமையை

பெற, 15 ஏக்கர் பரப்பளவும், வாகன இயக்கத்தை துல்லியமாக கண்காணிக்கும், நவீன கணினி வசதிகளும் உள்ள, 'கார்ப்பரேட்' நிறுவனங்கள் தான் முயற்சிக்க முடியும். அதனால், உரிமம் பெற, கோடிகளை செலவு செய்ய வேண்டும் என்பதால், ஏற்கனவே உள்ள, டிரைவிங் ஸ்கூல்கள் செயல் இழக்கும்.


* வாகனங்களை பழுது பார்க்கும், 'சர்வீஸ் சென்டர்'களை அமைக்க, சிறந்த கட்டமைப்பு வசதிகளுடன், பல கோடி ரூபாய் உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும். தரச்சான்று பெற்ற, உதிரிபாகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனால், சாதாரண, 'ஒர்க் ஷாப்'கள், 'ஸ்பேர் பார்ட்ஸ்' கடைகளை மூட வேண்டிய நிலை வரும்.


* பழைய வாகனங்களை வாங்கி, இரண்டாம் தர உதிரிபாகங்களை பொருத்தி இயக்கும், சிறு வணிகர்களுக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் கிடைக்க வாய்ப்புள்ளது.கழகங்கள் ஒழியும்


* புதிய சட்டத் திருத்தத்தின் படி, சாலை பாதுகாப்பு ஆணையம் தான், பஸ்களுக்கான வழித்தட
உரிமத்தை வழங்கும். அதனால், கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு, தனியாரின் விருப்பப்படி பஸ்களையும், 'ஆம்னி' பஸ்களையும் இயக்க, பெர்மிட் வழங்கும்.


* மோட்டார் வாகன சட்டத்தின், ஆறாவது அத்தியாயத்தில், திருத்தங்களை செய்து, தமிழக பொதுப் போக்குவரத்துக்கு வழி செய்துள்ள, தமிழக அரசின் உரிமை பறிக்கப்படும். அதனால், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்களை, சேவை அடிப்படையில், அரசால் இயக்க முடியாது. அதைப் பயன்படுத்தும், ஒரு கோடிக்கும் மேற்பட்ட, கிராமப்புற மக்களும், 30 லட்சம் மாணவர்களும் பாதிக்கப்படுவர். அரசு பஸ்கள் முடங்கினால்,1.42 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பர்.


* தற்போது, அனைத்து வாகன மாதிரிகளும், மத்திய அரசின், ஆறு சோதனை நிறுவனங்களில், பரிசோதிக்கப்பட்டு, விற்பனைக்கு வருகின்றன. அவற்றின் தரத்தை மறுசோதனை செய்த பின் தான், வட்டார போக்குவரத்து அதிகாரிகளான, ஆர்.டி.ஓ.,க்கள், பதிவு எண் வழங்குகின்றனர்.


* இதனால், நுகர்வோர் பயன் அடைகின்றனர்.

Advertisement

புதிய சட்டத்தின்படி, விற்பனையாளரே, பதிவு எண் வழங்கலாம். இதனால், நுகர்வோரை, விற்பனையாளர் ஏமாற்ற வாய்ப்புஉள்ளது.


* மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்பட்டால், அதன் கீழ் இயங்கும் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட அமைப்புகள் செயலிழக்கும். அதில் உள்ள, 3,000க்கும் மேற்பட்டோர் வேலை இழப்பர். அவர்களுக்கு, மாற்று பணி வழங்க வேண்டியகட்டாயத்திற்கு,
அரசு தள்ளப்படும்.


* புதிய சட்டப்படி, ௨00க்கும் மேற்பட்ட பஸ்கள் வைத்திருப்போர் மட்டுமே, வழித்தட உரிமையை பெற முடியும். இதனால், சிறு பஸ் நிறுவனங்கள் மூடப்படும்.


காப்பீட்டில் இழப்பு* மேலும், விபத்து காப்பீடாக, அதிகப்பட்ச தொகையாக, 10 லட்சம் ரூபாய் வழங்கினால் போதும் என, இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு, புதிய சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. இதனால், மேற்கொண்டு ஏற்படும் இழப்பை, வாகன உரிமையாளர் தான் செலுத்த நேரிடும்.


* சிறு சிறு விதிமீறல்களுக்கே, 1,000 ரூபாய்க்கும் அதிகமான அபராத தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால், சாதாரண பொது மக்கள், வாகனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதுபோன்ற பல இழப்புகளை, புதிய மோட்டார் வாகன சட்டத்தால், தமிழகம் சந்திக்க கூடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
01-ஜன-201801:27:20 IST Report Abuse

Anandanகார்போரேட்டுகள் மட்டுமே வாழனும் பொதுமக்கள் சாகனும் - பிஜேபி

Rate this:
மறத் தமிழன் - Madurai,இந்தியா
31-டிச-201722:56:10 IST Report Abuse

மறத் தமிழன்எல்லாத்தையும் கார்பொரேட் க்கு கொடுத்தால் எப்படி? நாட்டுல சிறுதொழில் செய்யுறவன் வாழ கூடாத? தப்பான ஆளுங்க கிட்ட நம்ப நாடு மாட்டிக்கிடிச்சு.

Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
31-டிச-201721:03:17 IST Report Abuse

தாமரை செல்வன்-பழநி தமிழக RTO அலுவலகத்தைப் பார்த்தால் அது தனியாரிடமிருந்தாலும் பரவாயில்லை என்றுதான் தோன்றும். அது அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது. அரசுப்போக்கு வரத்தும் தனியார் போக்குவரத்தும் பாதிப்பாதி இருக்க வேண்டும். இலவசம் எதிலும் கூடாது. பயணிகளுக்கு ஏதாவது சலுகைகள் கொடுப்பதாயிருந்தால் அதை தனியார் அரசு போக்குவரத்து இரண்டுக்குமே பொருந்துவதாக இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற முறையான பயிற்சியும் தேர்வும் அவசியம். தனியாரின் நிறுவனங்களிலும் தற்காலிக ஊழியர் இருக்கக் கூடாது. போக்குவரத்துக்குத் தேவையான ஊழியர்களை தேவையான அளவு நியமிக்க வேண்டும். அரசு தனியார் வாகன ஓட்டிகளுக்கான ஒரே மாதிரி இருக்க வேண்டும். அவர்களின் சம்பளம் வங்கிகளிலேயே செலுத்தப்பட வேண்டும். தனியார் கம்பெனிகளின் ஊழியர்களை கேள்வி கேட்பாரின்றி பணி நீக்கம் செய்யக்கூடாது. அனைவருக்கும் பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும். லாப நோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொள்ளாமல் சேவை நோக்கத்துடன் லாபம் இருக்க வேண்டும். RTO அலுவலகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நேர்மையான அதிகாரிகளின் கீழ் இயங்க வேண்டும். அரசு பஸ்களுக்கு முறையான பராமரிப்பு உள்ளதா என்பதை கண்டிப்புடன் கண்காணிக்க வேண்டும். பராமரிப்பு விஷயத்தில் எந்த அலட்சியமோ சலுகையோ கூடாது.

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X