அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி அரசியல் வருகை: தலைவர்கள் கருத்து

Updated : டிச 31, 2017 | Added : டிச 31, 2017 | கருத்துகள் (77)
Advertisement
Rajinikanthpoliticalentry, ரஜினி, கமல், தமிழிசை, முத்தரசன்,

சென்னை: ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின்:
தன் மீதான எதிர்பார்ப்புக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள். ரஜினி வருகை திமுகவுக்கு சாதகமா பாதகமா என்பது பற்றி கவலை கிடையாது. திமுகவை பொறுத்தவரை அது ஏற்று கொண்டுள்ள கொள்கைகள் வழி நின்று தன்னுடைய வெற்றிப்பாதையை அடையும்.

தலைவர்கள் கருத்து

முதல்வர் பழனிசாமி: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை வெல்ல போவது இல்லை.

தமிழருவி மணியன்: ஆன்மிக அரசியல் என்பது காந்தி முன்னெடுத்த அரசியல் ஆகும். ஆனமீகம், மதம் என்பது வேறு. தமிழகத்தில் ஆன்மீகம் சார்ந்த அரசியல் வரவேண்டும். ஆன்மீக அரசியலில் ஊழல், தவறு, குற்றங்களுக்கு இடமில்லை. ஆன்மீகவாதியாக இருக்கும் ரஜினி, ஆன்மீக அரசியலை எடுத்து வைப்பது காந்திய வழியை பின்பற்றிதான்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வர உரிமை உண்டு.

அமைச்சர் செல்லூர் ராஜூ: ரஜினி அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்யட்டும். ஆட்சியில் சிஸ்டம் சரியாகவே உள்ளது; எந்த சிஸ்டம் சரியில்லை என்று கூறினால், அதில் தவறிருந்தால் மாற்றிக் கொள்வோம். ரஜினியின் அரசியல் பிரவேசம் அதிமுகவை ஒன்றும் செய்யாது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: யார் சொன்னாலும் மக்கள் எளிதில் நம்ப மாட்டார்கள். ரஜினியின் பின்னணியில் பா.ஜ., உள்ளதா என்பது போக போக தான் தெரியும்.

தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்: சிஸ்டம் சரியில்லை என ரஜினிசொன்னது அதிமுக அரசை தான். அவர் 25 சதவீதம் மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை: ரஜினிக்கும், அவரது அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு வாழ்த்துகள் . ஊழலுக்கு எதிராக போராடுவதற்காக கூடுதல் பலம் தற்போது தேவைப்படுகிறது . ஊழலற்ற நிர்வாகத்தை ஆதரிக்கும் ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்கிறேன். ஊழலற்ற நிர்வாகத்தை தான் தமிழகத்தில் நாங்கள் முன்னிறுத்துகிறோம். காலதாமதமானாலும் அந்த முயற்சி வெற்றி பெறும். துணிச்சலாக களமிறங்கியிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்து கொள்கிறேன்.களங்கம் இல்லாத களத்தை உருவாக்குவதற்கு தான் களமிறங்கியிருக்கிறேன் என அறிவித்திருப்பதற்கு வரவேற்பு, வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். 2019 தேர்தலில் பாஜ.,வுக்கு ஆதரவாக தான் முடிவெடுப்பார் என்பது எனது யூகம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் :
ரஜினி தற்போது நடந்து வரும் ஆட்சி குறித்து மறைமுகமாக விமர்சித்துள்ளார். சட்டசபை தேர்தல் அறிவித்தபிறகு கட்சி பற்றி அறிவிப்பதாக தான் கூறியிருக்கிறார். இதனை பார்க்கும்போது இன்னும் முழுமையான அரசியலுக்குள் ரஜினி வரவில்லை என்று தெரியவருகிறது. தற்போது ஆட்சி குறித்து ரஜினி கருத்து தெரிவித்து இருப்பது வரவேற்கதக்கது.

பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி: அரசியலில் நுழைவதாக மட்டுமே அறிவித்துள்ளார். அது தொடர்பாக எந்த விபரமும், அறிக்கையும் இல்லை. அவர் படிப்பறிவில்லாதவர் . ரஜினி அரசியலுக்கு வரும் விஷயத்தை மீடியாக்கள் தான் பெரிதுபடுத்துகின்றன. தமிழக மக்கள் புத்திசாலிகள்.

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி : ரஜினி வருகையால் மாற்றங்கள் ஏற்படும். அவருக்கு எனது வாழ்த்துகள். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாரோ அதனை செய்யட்டும்.

எம்.பி., அன்வர்ராஜா: ஒராண்டாக தமிழகத்திற்கு தலைகுனிவு என்ற ரஜினியின் கருத்தை அதிமுக மீதான நேரடி தாக்குதலாக கருதுகிறேன். அவர் கூறியதுபோல் தமிழகத்திற்கு எந்த தலைகுனிவும் ஏற்படவில்லை.

திமுக மூத்த தலைவர் துரைமுருகன்: ரஜினி அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு ஒன்றும் இல்லை. அரசியல் என்பது பெரிய களம். அதில் நின்று எதையும் எதிர்கொள்ளும் தைரியம் திமுகவுக்கு உள்ளது.

அமைச்சர் ஜெயக்குமார்: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். கட்சிக்கு உரிய அங்கீகாரம், ஆதரவு என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அரசியலை பொறுத்தவரை மக்கள் தான் இறுதி எஜமானர்கள். மக்களின் ஆதரவை கொண்டு தான் ஒருவரின் அரசியலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியும். ரஜினிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ரஜினி பேட்டியை திசை திருப்ப வேண்டாம். அவர் தனது பேச்சில் அதிமுக என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. அது பொத்தாம் பொதுவாக சொன்ன கருத்து. திமுகவை கூட அவர் குறிப்பிட்டிருக்கலாம். அவர் அதிமுக என கூறியிருந்தால், நாங்கள் பதில் சொல்லியிருக்க முடியும். தினகரன் ஹவாலா வழியில்,வழியில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து, ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக கூறி தற்காலிகமாக வெற்றி பெற்றுள்ளார். அவர் தொகுதிக்கு செல்லவில்லை. பணம் கேட்டு அவரை மக்கள் தேடி வருகின்றனர். 2 ஜி வழக்கில் கனிமொழி, ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தது மூலம், அவரும் திமுகவுடன் கூட்டு வைத்துள்ளதை தெரிந்து கொள்ளலாம்.

அமைச்சர் மணியன் கூறியதாவது: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.மதவாத அரசியலாக இல்லாமல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

ரஜினியின் அரசியல் வருகைக்கு திருமாவளவனும் வரவேற்பு தெரிவித்துள்ளார். கட்சி கொள்கை அறிவித்த பிறகு தான் மக்கள் ஆதரவு குறித்து தெரியவரும் எனக்கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MUNIASAMY - madurai,இந்தியா
01-ஜன-201817:14:21 IST Report Abuse
MUNIASAMY அவரோட முடிவு ஒரு முட்டாள் தனமானது . இதில் அவரை சொல்லி தப்பில்லை , தமிழ்நாட்டு மக்கள் அந்தளவுக்கு முட்டாள் ஆக்க பட்டுவுள்ளார்கள் இந்த அரசியல்வாதி களால் .
Rate this:
Share this comment
Cancel
guru - best city,சிங்கப்பூர்
01-ஜன-201809:45:00 IST Report Abuse
guru தமிழ் nattil சிறந்த அரசியல் வாதிகள் இல்லை .முதல் அமைச்சராக தமிழ் நாட்டிற்கு வேறு மாநிலத்தவரை தேர்ந்து எடுக்க வேண்டியுள்ளது , ஜெயலலிதா கர்நாடகத்தை சேர்ந்தவர், ரஜினி கர்நாடகாவை சேர்ந்தவர், அப்போது இங்குள்ள அரசியல் வாதிகளுக்கு சிறந்த நிர்வாக திறமை இல்லை என தெரிகிறது, அரசியல் சம்மதமாக படித்தவர்களை எம் எல் வே ஆக நிறுத்தப்படவேண்டும் , இதற்கான சட்டம் இயற்ற வேண்டும் ,
Rate this:
Share this comment
Cancel
venkatesh - coimbatore,இந்தியா
01-ஜன-201808:20:38 IST Report Abuse
venkatesh நிச்சயமாக தமிழ்நாட்டு மக்கள் ரஜினி அரசியல் முகத்தில் கரி பூச போகிறார்கள். எம் ஜீ ஆர், ஜெயா , தமிழ்நாட்டை சீரழித்தது போதாது என்று அடுத்த ஆள் வந்துட்டான். நாட்டு மக்களுக்கு புத்தி சொல்லும் இவர் முதலில்தான் வீட்டை சரி செய்து விட்டு அப்புறமா நாட்டை திருத்த புறப்படலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X