ஆன்மிக அரசியல் அறிவிப்பு திராவிட கட்சிகள் கலக்கம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆன்மிக அரசியல் அறிவிப்பு
திராவிட கட்சிகள் கலக்கம்

அரசியல் கட்சி துவங்க போவதாக அறிவித்துள்ள, நடிகர் ரஜினிகாந்த், 'ஆன்மிக அரசியல் தான் என் பாதை' என அறிவித்து இருப்பது, திராவிட கட்சிகளுக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 ஆன்மிக,அரசியல்,அறிவிப்பு,திராவிட,கட்சிகள்,கலக்கம்


தமிழகத்தில், முதல் அரசியல் கட்சியாக, 1916ல் தியாகராய செட்டியாரால், நீதிக்கட்சி துவக்கப்
பட்டது. காங்கிரஸ் கட்சியிலிருந்த, ஈ.வெ.ராமசாமி, இட ஒதுக்கீடு கொள்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அந்த கட்சியிலிருந்து விலகி, நீதிக்கட்சியில் சேர்ந்தார். அக்கட்சி தலைவராக, 1944ல் பொறுப்பேற்றார்.


பின், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என, பெயர் மாற்றப்பட்டது. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த அண்ணாதுரை, தி.மு.க.,வை துவக்கி னார். 1967 சட்டசபை தேர்தலில், தி.மு.க., பெரும்பான்மை பெற்று, ஆட்சியை பிடித்தது. தி.மு.க.,விலிருந்து பிரிந்த, எம்.ஜி.ஆர்., - அ.தி.மு.க.,வை துவக்கினார். 1977 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார்.


மாறி மாறி ஆட்சி:

தமிழகத்தில், 1967ல்

இருந்து, தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிகளே மாறி, மாறி வந்த படி உள்ளன. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ., கம்யூனிஸ்ட்டுகள், தமிழகத்தில் காலுான்ற முடியவில்லை.


திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே, தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலை, அக்கட்சிகளுக்கு உள்ளது.திராவிட அரசியல் வழி வந்தவர்கள், தங்களை மத சார்பற்றவர்கள் என கூறி, மத அரசியல் செய்வதும், ஜாதிக்கு அப்பாற் பட்டவர்கள் என கூறி, ஜாதி அரசியல் செய்வதும், தொடர் கதையாக உள்ளது.


தெய்வ நம்பிக்கை உள்ள தலைவர்களும், வெளிப்படையாக கோவிலுக்கு செல்லாமல், ரகசியமாக சென்று வரும் நிலை, தமிழகத்தில் உள்ளது.இந்து மதத்தை வெறுப்பது மட்டுமே மதச்சார்பின்மை என்ற கருத்தில், பல அரசியல் தலைவர்கள் வலம் வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், புதிய அரசியல் கட்சி துவங்க போவதாக அறிவித்துள்ளார். முதன் முறையாக, தமிழக அரசியலில், 'ஆன்மிக அரசியலே என் அரசியல் பாதை' என, வெளிப்படையாக அறிவித்துள்ளார்.அவரது அறிவிப்பு, ஆன்மிக வாதிகளிடம் வரவேற்பைபெற்றுள்ளது.


அரசியலில் உள்ளவர்கள், மத நம்பிக்கைகளை வெளிப்படுத்தினால், மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என, அரசியல் தலைவர்கள் நம்பி வரும் சூழலில், எதைப்பற்றியும் கவலைப்படாமல், ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை கையில் எடுத்துள்ளார்.திராவிட கட்சிகளின் ஆட்சியில்,

Advertisement

அனைத்து மட்டங்களிலும், ஊழல் கரை புரண்டோடுகிறது. அரசியல் கட்சியினர், அதிகாரிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என, அனைவரும் கறைபடிந்தவர்களாக உள்ளனர். இதைத்தான் ரஜினி, 'சிஸ்டம் கெட்டு போயுள்ளது; சிஸ்டத்தை மாற்ற வேண்டும்' எனக் கூறுகிறார்.


நம்பிக்கைஒழுக்கம், நேர்மை ஆகியவற்றையே ஆன்மிகம் போதிக்கிறது; நல்லதை மட்டுமே செய்ய கூறுகிறது. ஆன்மிகத்தை புறம் தள்ளியவர்களுக்கு மத்தியில், ரஜினி அறிவித்துள்ள ஆன்மிக அரசியல், சமுதாயத் தில், அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையை, மக்களிடம் விதைத்து உள்ளது.ரஜினி அறிவிப்புக்கு, மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு, திராவிட அரசியல் எனக்கூறி, காலம் தள்ளியோருக்கு, கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran - dar salam ,தான்சானியா
08-ஜன-201820:58:13 IST Report Abuse

Ravichandranஉண்மைதான் திருட்டு கழங்கங்களுக்கும், திருமா, சீமான், டாக்டர் ஐயா இன்னும் பல ஜாதி கட்சிகள், அரண்டு இருப்பது உண்மைதான். ரஜினிக்கு மக்களின் ஆதரவூ கொஞ்சம் இருக்கும் அதை அதிகப்படுத்துவது மட்டுமே அவரது எண்ணம் வெற்றி பெற வைக்கும். ரஜினி குடும்பம் மொத்தமும் தமிழ் குடும்பம்தான்,

Rate this:
muttam Chinnapathas - Chennai,இந்தியா
01-ஜன-201821:38:57 IST Report Abuse

muttam Chinnapathasமுதலில் தமிழகத்தில் ஆனமிகத்துக்கு என்ன பிரச்சனை?. கடவுள் நம்பிக்கை உள்ளவரும் இல்லாதவரும் முழ சுதந்திரத்துடன் இருக்கிறாங்க.. தமிழகத்தின் பிரச்னையே வளர்ச்சி இல்லை இந்த ஆட்சியில் பின் ஊழல்... தமிழகத்தின் எந்த பிரச்சனைக்கும் துரும்பையும் கிள்ளி போடாதவர்தான் இந்த ரஜினி..ரஜினி என்ன ஊழல் கரைபடியாதவர்தான்...எந்த மாநிலத்திலாவது பிற மாநிலத்தை சேர்ந்தவர் முதல்வராக முடியுமா... இன்னைக்கு ரஜினி வேனும்னு சொல்வர் எல்லாம் சோனியாவை வேண்டாம் என்று சொனரனவர்தான்... ஏன் இந்த முரண்பாடு... உலகை ஆண்ட இனம் என் தமிழினம்.. இன்று போறவன் வரவன் எல்லாம் நம்மை ஆள துடிக்கிறான் ...

Rate this:
gopi - chennai,இந்தியா
01-பிப்-201814:40:17 IST Report Abuse

gopiசோனியா வேண்டாம் என்று எந்த தமிழன் கூறினான் நண்பரே? சும்மா பொய் சொல்லி திரிய வேண்டாம்...

Rate this:
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
01-ஜன-201820:31:26 IST Report Abuse

Krishnamurthy Venkatesanதிராவிடம் என்று சொல்லி சொல்லியே நாட்டை குட்டி சுவராக்கி விட்டார்கள். இவர்களால் அண்டை மாநிலத்திடமிருந்து காவேரி நீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய பொருட்களை பெற முடிவதில்லை. திராவிடம் என்று வீராப்பு. கடவுள் மறுப்பு கொள்கையில் படு தோல்வி. ஆனாலும் மீசை மீது மண் ஒட்டவில்லை. போராட்டங்களின்போது (ஹிந்தி எதிர்ப்பு போன்ற) தொண்டன்தான் தீ குளித்தான். அதில் தலைவர்கள் குளிர் காய்ந்தார்கள். எனவே ரஜினி வருகை வரவேற்கத் தக்கதே. அனைத்து மதமும் நல்வழிகளைத்தான் போதிக்கின்றன. நல்ல ஒரு ஆட்சி தருவது யாராக இருந்தாலும் வரவேற்போம்.

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
01-ஜன-201823:30:44 IST Report Abuse

BoochiMarunthuஎன்னது திராவிடத்தால் தண்ணீர் வரவில்லையா ? என்ன ஒரு பொய் புரட்டு கட்டு கதை . சுப்ரமே கோர்ட் சொல்லியும் காவிரி tribunal அமைக்காது ஆன்மீக பிஜேபி கட்சி தானே ?...

Rate this:
மேலும் 80 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X